செவ்வாய், 8 அக்டோபர், 2013

கலிகாலம் எப்பொழுது துவங்கியது?
    
 மகாபாரத யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, தர்மர் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அரச சபைக்கு ஒரு வழக்கு வந்தது.
   ஒருவர் தன்னுடைய நிலத்தை இன்னொருவருக்கு விற்று விட்டார்.
      சில மாதங்கள் கழித்து, வாங்கியவருக்கு நிலத்திலிருந்து புதையல் கிடைத்தது. வாங்கியவர், பழைய நிலத்துக்காரர் இடம், “உன் நிலத்தில் இருந்து தான் புதையல் கிடைத்தது. அதனால் இந்த புதையல் உனக்கே சொந்தம் வாங்கிக்கொள்“ என்று கொடுத்தார்.
   ஆனால் பழைய நிலத்துக்காரரோ, “நிலத்தை உனக்கு விற்றாயிற்று. இனி அதிலிருந்து எது கிடைத்தாலும் அது உனக்கே சொந்தம். அதனால் நீயே வைத்துக்கொள்“ என்றார்.
   இதனால் இருவருக்கும் சண்டை வந்ததால் இருவரும் அரசனிடம் வந்து, “நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்“ என்றார்கள்.
   தர்மர் சற்று நேரம் யோசித்து விட்டு, தம்பி சகாதேவனைப் பார்த்தார்.
   சகாதேவன், “அண்ணா... இந்த வழக்கை இப்படியே விடுவோம். நம் பேரன் பரிஷித்து, பின்னால் வரும் காலத்தில் அரசனாக வரும் பொழுது இந்த வழக்கைத் தீர்த்து வைப்பான்“ என்றார்.
   அதே போல் பலகாலம் கழித்து, பரிஷித்து அரசனானதும் இந்த வழக்கை விசாரித்தார்.
   இப்பொழுது நிலத்தை விற்றவன், “என் தாத்தா விற்ற நிலத்திலிருந்து தான் புதையல் கிடைத்தது. அதனால் அது எனக்குத் தான் சொந்தம்“ என்று வாதம் செய்தான்.
   நிலத்தை வங்கியவன், “எப்பொழுது அவரின் தாத்தா, எங்களிடம் நிலத்தை விற்று விட்டாரோ அதன் பிறகு இந்த நிலத்தில் எது கிடைத்தாலும் எங்களுக்கே சொந்தம்“ என்று எதிர் வாதம் செய்தான்.
   பரிஷித்து அரசன் பார்த்தார். “நிலம் என் நாட்டு எல்லைக்குள்ளே தான் இருக்கிறது. அதனால் யார் நிலத்தில் புதையல் கிடைத்தாலும் அது அரசாங்கத்திற்குத் தான் சொந்தம்“ என்று தீர்ப்பு சொல்லி புதையலைத் தான் பெற்றுக்கொண்டார்.
   இது தான் கலிகாலத்தின் ஆரம்பம். இப்படித்தான் அரசியலும் ஆரம்பமானது.

(என்றோ படித்தது)
அருணா செல்வம்.

11 கருத்துகள்:

 1. ''இது தான் கலிகாலத்தின் ஆரம்பம்'' புரிகிறது. . 'இப்படித்தான் அரசியலும் ஆரம்பமானது' இப்படித்தானோ ??.

  பதிலளிநீக்கு
 2. காலிகாலத்தின் நதி மூலம் ரிஷி மூலம் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அருணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 3. அருமை...


  அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   பார்த்து விட்டேன்.

   நீக்கு
 4. எப்படி இருந்த மனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள்...கலிகாலம் கலிகாலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் கலிகாலம் முத்திடுச்சின்னு சொல்லுறாங்க. அது எப்பொழுதுன்னு தான் தெரியலை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

   நீக்கு
 5. நானும் படித்து ரசித்து இருக்கிறேன்! மீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 6. அட!... இப்படியா ஆரம்பித்தது கலிகாலத்துடன் கஷ்ட காலமும்...:)

  அருமை தோழி! நல்ல பகிர்வு! நன்றியும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலிகாலமே கஷ்டகாலம் தானாம்.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு