சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 செப்டம்பர், 2014

ரோமாபுரி சிற்பங்கள் சில.... (இத்தாலி -6)


  
இது போல் பல கூடங்கள் உள்ளன.

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ள சிலைகளின் சில படங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். கண்டுகளியுங்கள்.

















அருணா செல்வம்

18.09.2014

புதன், 10 செப்டம்பர், 2014

உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள்!! (இத்தாலி- 5)



    6.08.2014 அன்று காலையில் உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பார்த்து விட்டு வெளிவந்ததும் கைடுகள் நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள்.
   ரோம் நகரத்தின் முக்கிய பழங்கால ஓவியங்கள் சிலைகள் உள்ள நினைவு இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அதைப்பற்றி விசாரித்தோம். வாட்டிகானின் முக்கியமான “சிஸ்டீன்த் கோபுரம்“ உள்ள இடம் தான் அந்த கண்காட்சியகம் என்றார்கள்.


   உள்ளே போக ஒருவருக்கு 16 யுரோ. ஆனால் இரண்டரை மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்றார்கள். வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல வேண்டும் என்றால் 33 யுரோ. இந்த டிக்கெட்டைக் கைடுகளே தருவார்களாம். 33 யுரோ அதிகம் என்று நாங்கள் வரிசையில் நடக்கத் துவங்கினோம்.


   அப்பொழுது ஒரு கைடு, “மேடம்..... உள்ளே ஆயிரம் அறைகள் உள்ளன. காலையிலேயே வந்திருந்தாலும் பரவாயில்லை. மணி இப்பவே மதியம் இரண்டாகி விட்டது. இங்கிருந்து உள்ளே போகவே குறைந்தது நாலரை ஐந்தாகிவிடும். பிறகு நேரம் போதாது. நான் வேண்டுமானால் ஒரு டிக்கெட் 30 யுரோவிற்குத் தருகிறேன்“ என்றார்.

1000 அறை கட்டிடத்தின் உட்புறம்

   எனக்கு என்னவோ ஒரு மியுசியத்தைப் பார்க்க ஒருத்தருக்கு 16 யுரோ என்பதே அதிகமாகத் தெரிந்தது. அதிலும் 30 யுரோ மிக அதிகம். “வேண்டாம்“ என்று சொல்லிவிட்டு வரிசையில் நடந்தோம்.
   அந்தக் கைடு சொன்னது போலவே ஐந்து மணிக்குத் தான் மியுசியத்தின் உள்ளே நுழைய முடிந்தது.


   உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ஆயிரம் அறைகளில் மிகப் பழங்கால ஓவியங்கள். கி.பி 73 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான ஓவியங்கள் காட்சிக்கு ஆண்டவாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது.


   சில அறைகளில் பழங்கால சிலைகள். துணியில் வரையப்பட்ட ஓவியங்கள், பழங்கால கைவினைப் பொருட்கள், முக்கியமாக “த்ரி டி“ ஓவியங்கள்.... கண்கொள்ளா காட்சி!!


   அதில் உலகப் புகழ் பெற்ற “மைக்கேல் ஆன்ஸ்“ ஓவியங்களைப் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை. உண்மையில் பிரமித்துப் போனேன்.
   காரணம்..... ஓர் அறைக்குள் நுழைந்த போது சுற்றிலும் அழகிய பயங்கால சிலைகள். எவ்வளவு நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள் என்ற வியந்து போய் அதிசயமாகப் பார்த்தேன். ஆனால் சற்று உற்று பார்த்த போது தான் தெரிந்தது அது சிலைகள் இல்லை. ஓவியங்கள் என்று. என்னால் நம்பவே முடியவில்லை. அவையெல்லாம் சிலைகள் தான் என்ற குழப்பத்தும் அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். சிலைகளுக்குறிய மேடு பள்ளங்கள் இல்லாத வெறும் சுவற்றின் மேல் கை வைத்த உணர்வால் தான் இது சிலை அல்ல. சித்திரங்கள் என்ற உண்மை விளங்கியது.


சிலையைப் போன்ற ஓவியம்

   நாங்கள் ஒரு இருநூறு அறைகளைத்தான் பார்த்திருப்போம். அதற்குள் மணி எட்டாகி விட்டது. மேலும் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்கலாம். ஆனால் காலையிலிருந்து அலைந்த களைப்பால் வெளிவந்து விட்டோம்.





2010 ஓவியங்கள் உள்ள அறைகள்

   இன்று ஒரு சில ஓவியங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். சில அறைகளில் ஓவியங்களைப் படம் பிடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அடுத்தப் பதிவில் சிலைகளின் படங்களை வெளியிடுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

10.09.2014

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயம்!! (4)



      உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயம் இத்தாலி நாட்டில் ரோம் நகரத்தில் உள்ளே உள்ள சிறு நாடான “வாட்டிகான்“ல் உள்ளது.
    இந்த “வாட்டிகான்“ என்பது தனி நாடாகத்தான் குறிப்பிடப் படுகிறது. இந்த நாட்டின் சுற்றளவு 44 கிலோ மீட்டர் தான். கிட்டத்தட்ட 8000 பேர் வசிக்கிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றி மிகப்பெறிய சுற்றுச் சுவர் உள்ளது.

சுற்றுச் சுவர்

   இந்த நகரத்தில் தான் உலகின் மிகப்பெரிய கிருஸ்துவ ஆலயமான “சேன் பியர்“ ஆலயம் உள்ளது. இந்த “சேன் பியர் ஆலயத்தை ஆலயம் என்று குறிப்பிடாமல் கிருஸ்துவர்களின் முக்கிய புனிதத் தளம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

பிளேஸ் சேன் பியர்

    நாங்கள் 06.08.2014 அன்று காலை ஆலயத்திற்குச் சென்றோம். நாங்கள் ஆலய வளாகத்தில் நுழைந்ததும் பார்த்த போது கோவில் அருகிலேயே உள்ளது போன்று தான் தெரிந்தது. ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் தான் அதன் அருகில் இருந்த மக்கள் எவ்வளவு சிறியதாகத் தெரிகிறார்கள் என்பதை உணர முடிந்தது. அவ்வளவு உயரம்!

வரிசையாக நிற்கும் மக்கள்

   இது வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட மிகப் பெரிய ஆலயம். ஆலயத்திற்கு முன் பாகம் “பிளேஸ் சேன் பியர்“ என்ற இடம் உள்ளது. இந்த இடத்தின் நீளம் 198 மீட்டர். அகலம் 148 மீட்டர். அந்த இடத்தில் தான் முக்கிய நாட்களில் நடைபெறும் பூசைகள் நடைபெறுமாம். இவ்வளவு பெரிய இடத்தின் முன்பாகத்தில் மட்டும் மக்கள் அமர்ந்து பூசையில் கலந்து கொள்ளும் விதமாக உள்ளது. மற்ற இடத்தில் மக்கள் நின்று கொண்டே கலந்து கொண்டாலும் இடம் போதாத அளவில் தான் உள்ளதாம்(!) இங்கே 150 000 பேர்கள் தாராளமாக நின்று பலிபூசைகளில் கலந்து கொள்கிறார்கள்.


   நாங்கள் ஒன்பதரை மணியளவில் சென்றாலும் கோவிலுக்குள் செல்லும் வரிசையில் நின்று 11.30 மணிக்குத் தான் கோவிலுக்குள் நுழைந்தோம். வரிசையில் நின்று கொண்டே இருக்கவில்லை. நடந்துக்கொண்டே இருந்தாலும் இரண்டு மணிநேரம் பிடித்தது.

உயரமான தூண்கள்

   கோவிலுக்குள் குறைந்தது 50000 பேர்களுக்கு மேல் தாராளமாக கொள்ளும் என்பதால் வரிசை நிற்காமல் சென்றதில் கொஞ்சம் திருப்தி தான். இந்த ஆலயம் 154 மட்டர் அகலம் கொண்டுள்ளது. உயரம் 219 மீட்டர். அனைத்தும் சேர்த்து 2.30 எக்டேர் பரப்பளவு.
   இந்தக் கோவில் முதலாம் போப் “யார் செயின்ட் பீட்டர்“ என்பவரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. கி.பி 1506 ல் துவங்கி 1626 ல் முடிக்கப்பெற்றதாம்.

மேல்கைகள் தெரியமலிருக்க துணியைச் சுற்றிய பெண்கள்.

   அன்று மிகவும் அதிக வெயில் (30 டிகிரி) பொதுவாக ஆண்கள் தொண்ணூறு சதம் பேர் அரைக் கால்சட்டையை முட்டிவரையில் அணிந்திருந்தார்கள். பெண்களில் 50 சதம் பேர் மிகவும் சிறிய கால்சட்டை அல்லது குட்டை கவுன், கையில்லாத சட்டையும் தான் அணிந்திருந்தார்கள். இதில் என்ன பிரட்சனை என்றால்..... இப்படி கால்சட்டையும் குட்டை கவுனும்  கையில்லா பனியனையும் அணிந்த பெண்களைக் கோவிலுக்கு உள்ளே போக அனுமதிக்க வில்லை.

ஆலயத்தின் அருகில்

   ஆனால் அவ்விடத்திலேயே பாக்கிஸ்தான் காரர்கள் சின்ன சின்ன துண்டு துணிகளை ஐந்து யுரோவிற்கு விற்கிறார்கள். வேறு வழியில்லாத பெண்கள் இந்தத் துணியை வாங்கி இடுப்பில் வேட்டி போலவும் கை பகுதி மூடும் வகையில் கழுத்தைச் சுற்றியும் கட்டிக் கொள்கிறார்கள்.


   கோவிலுக்குள் எந்த இடத்திலும் மெழுகுவத்திகள் கிடையாது.
   இங்கே மெழுகு ஏற்றும் இடங்களில் அந்த மெழுகு வத்திகள் பிளாஸ்ட்டிக்கில் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளார்கள். விருப்பப்பட்டவர்கள் அங்கிருக்கும் உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு அந்த மெழுகை எடுத்து மெழுகு வைக்கும் ஸ்டேண்டில் செறுகினால் மேல் உள்ள திரியில் லைட் எறிகிறது. ஒரு சிலர் அந்த மெழுகை ஏற்றினார்கள்.
   தவிர கோவிலைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்..... சொல்லிக்கொண்டே போகலாம். மிகப் பெரிய பெரிய சிலைகள். பழங்கால ஓவியங்கள். தரையும் பளபளப்பாக.... கோவிலின் மேல் சுவற்றுப்படங்கள்..... அனைத்துமே கண்கொள்ளா காட்சிகள். வாயால் சொல்ல முடியாது என்பதால் படங்களை வெளியிட்டு விடுகிறேன்.

மேல் புறச் சிலைகள்


நுழைவிடம்

புனித நீர் 

ஆலயத்தின் உட்புறம்


மேல் கூரைப்பகுதி


 உள்ளிருந்த சிலைகள்







கருவறை

 கோவிலுக்குள் வேறு வேறு பாகத்தில் வேறு வேறு மொழிகளில் பூசைகள் நடக்கிறது. அந்த நேரத்தையும் இடத்தையும் ஏற்கனவே குறிப்பிட்டு விடுவதால் அந்த மொழி மக்கள் சரியாக பூசையில் கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 500 பேர்கள் ஒரு பூசையில்கலந்துகொள்கிறார்கள்.






தவிர கோவிலின் ஹண்டர் கிரௌன்டில் (தமிழில் தெரியவில்லை) போப் ஆண்டவர்களின் கல்லறைகள் நூற்றுக்கும் மேற்பட்டது இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

கல்லறையின் நுழைவாயில்

போப் ஆண்டவரின் பதப்படுத்தப் பட்ட உடல்
மிகவும் துர்ரத்தில் இருந்ததால் சூம் செய்தாலும் இவ்வளவு
தான் எடுக்க முடிந்தது.







    இப்படி பூசையில் கலந்துக்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் கடவுளை வணங்க வேண்டும் என்றால் அதற்கென்றும் தனித்தனி இடங்கள் உள்ளன. அவ்விடத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தாலும் யாருமே இல்லாத இடம் போல் அமைதியாக இருக்கிறது.
   நாங்கள் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் கோவிலின் உள்ளேயே சுற்றிவிட்டு இரண்டு மணிக்கு வெளியில் வந்தோம்.
    அன்று மதியம் வாட்டிகானில் உள்ள உலகப் புகழ் பெற்ற பழங்கால மியுசியத்தைப் பற்றி எழுதுகிறேன்.

அருணா செல்வம்
25.08.2014


கொம்போசன்டோ மொனிமென்டலில் பாதிரியாரின் பதப்படுத்தப் பட்ட உடல். (போன பதிவில் ஸ்ரீராம் ஐயா அவர்கள் கேட்டு எழுதியிருந்தார். அவருக்காக வெளியிட்டுள்ளேன்.) 

நட்புறவுகளே.....
   எல்லா பெரிய படைப்பாளிகளைப் போல நாமும் பயணக்கட்டுரை எழுதலாம் என்று எழுதத் துவங்கினால்..... பிறகுத் தான் தெரிந்தது அதில் உள்ள கஷ்டங்கள். முதலில் அந்த அந்த இடங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நான் தெரிந்துக் கொண்டதை மட்டுமே உங்களுடன் பகிர்கின்றேன். இதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம். தெரிந்தவர்கள் தெரிவித்தால் நானும் அறிந்துக்கொள்வேன்.
   தவிர நான் பிடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நல்ல படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடும் கஷ்டம்...... சில நேரம் சலிப்பை வரவழிக்கிறது.
   ஒரு குட்டிக்கதையை எழுதினோமா வெளியிட்டோமா என்றில்லாமல்...... ஏன்தான் இதைத் துவங்கினேனோ என்ற சோர்வு வரக் காரணத்தைத் தேடுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.