மார்கழியில்
செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த
செங்கரும்பு வெய்திருக்க - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல்
உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி
நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
09.01.2022
மார்கழியில்
செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த
செங்கரும்பு வெய்திருக்க - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல்
உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி
நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
09.01.2022
மார்கழியில்
வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை
உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை!
என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல்
போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா
செல்வம்
20.01.2022
மார்கழியில்
பாடுகிறாய் மன்னவனை மாலையிட!
கார்குழலில்
பூமணக்கும் கண்ணழகே! - ஒர்பார்வை
கண்விழித்து
என்விழியைக் கண்டுவிட்டால் போதுமடி
எண்ணத்தில்
ஏற்பாய் இசைந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
18.12.2021
.
மார்கழி
வெண்பனியில் மாலை வணங்கிடத்
தேர்போல்
நடந்துசெல்லும் செந்தேனே! - நேர்விழியால்
என்னைப்பார்!
வேண்டிட ஏதுமில்லை என்றறிவாய்!
உன்னிணை
நான்என்(று) உணர்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
17.12.2021