திங்கள், 24 ஜூன், 2013

சொற்களுக்கும் போதைவரும்!!





சொற்களுக்கும் போதைவரும்! தேவி உன்றன்
    தேன்சுரக்கும் செவ்வுதட்டில் பிறக்கும் போது!
கற்களுக்கும் காதல்வரும்! கண்ணே உன்றன்
    காற்சலங்கை சந்தமிடும் இசையைக் கேட்டு!
புற்களுக்கும் போட்டிவரும்! பூவே உன்றன்
    பொற்பாதத் துகள்பட்ட பொழுதே! ரோஜா
முட்களுக்கும் ஆசைவரும்! மின்னும் உன்றன்
    முகம்மலர்ந்த பொன்மலரின் அழகைக் கண்டே!

அருணாசெல்வம்.
24.06.2013

41 கருத்துகள்:

  1. எனக்கும் போதை வந்தது உங்கள் கவிதையைக்
    கண்டு :)))வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து... விழுந்து விடப் போகிறீர்கள் தோழி...)

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. போதையூட்டுவது நீங்கள் சொன்னவை மட்டுமல்ல.... :)

    உங்கள் கவிதையும் தான்!

    நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  3. கவிதையை படித்த போதையுடன் இருக்கும் எனக்கு உங்கள் கவிதையை காதலிப்பதா அல்லது கவிதையில் வரும் பெண்ணை காதலிப்பதா என்ற போதையுடன் இருக்கிறேன். மிக மிக அருமை படித்து முடித்தவுடன் மிக சந்தோஷத்தை கொடுத்தது சபாஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதையாவது ஒன்னை காதலிச்சே ஆகணுமா.மதுரை தமிழன்சார் பூரிக்கட்டை மறந்து போச்சா.?

      நீக்கு
    2. காதல் கடிதம் போட்டிக்கு எழுதறவங்க இந்த கவிதைய பயன்படுத்திக்கலாம். போல இருக்கே.அருமை
      பெண்கள் அழகை புகழ்ந்து சொல்லற மாதிரி எழுதறீங்களே. போனாப் போகுதுன்னு காதலனை பெண் புகழற மாதிரி ஒரு பாட்டாவது எழுதக் கூடாதா?.

      நீக்கு
    3. “உண்மைகள்“... தமிழைக் காதலியுங்கள். அது இன்னும் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
    4. மூங்கில் காற்று... என்னதான் இருந்தாலும் மதுரை தமிழரை
      நீங்கள் இப்படி கலாய்க்கக்கூடாது. அவரின் அற்புத மண்டைக்கு பூரிக்கட்டை தாங்காது. சொல்லிட்டேன்.

      தவிர, யார் வேண்டுமானாலும் என் கவிதையை
      எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் கீழே என் பெயரை
      மறக்காமல் போட்டு விடுங்கள்.

      உங்களுக்காக போனாப் போகுதுன்னு காதலனைப் பெண் புகழ்வது போல் கூடிய சீக்கிரத்தில் எழுதுகிறேன்.

      நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
    5. ///யார் வேண்டுமானாலும் என் கவிதையை
      எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் கீழே என் பெயரை
      மறக்காமல் போட்டு விடுங்கள்.///

      நல்ல ஐடியாவாக இருக்கிறதே.... உங்கள் கவிதையை எடுத்து என் பதிவில் போட்டுவிட்டு உங்கள் பெயரை எழுதி என் வீட்டு தரையில்(கிழே) போட்டு விடுகிறேன் சரிதானேஹீ..ஹீ.ஹீ

      நீக்கு
    6. //காதல் கடிதம் போட்டிக்கு எழுதறவங்க இந்த கவிதைய பயன்படுத்திக்கலாம். போல இருக்கே.அருமை //

      நான் இந்த கவிதையை படித்ததும் முதலில் நினைத்தது இதுவே

      ///ஏதையாவது ஒன்னை காதலிச்சே ஆகணுமா.///
      பாரதி என்ன சொன்னார் காதல் காதல் காதல் இல்லையே சாதல் சாதல். அதனாலதான்

      மதுரை தமிழன்சார் பூரிக்கட்டை மறந்து போச்சா.?

      அதெல்லாம் மறக்க கூடிய விஷயமா என்ன

      நீக்கு
    7. உங்கள் கவிதையை எடுத்து என் பதிவில் போட்டுவிட்டு உங்கள் பெயரை எழுதி என் வீட்டு தரையில்(கிழே) போட்டு விடுகிறேன்

      அடடா... எப்படியெல்லாம் ஐடியா வருகிறது உங்களுக்கு.

      பாரதி என்ன சொன்னார் காதல் காதல் காதல் இல்லையே சாதல் சாதல். அதனாலதான்

      இப்பொழுதெல்லாம் காதல் இல்லையேல்...
      இன்னொரு காதல் “உண்மைகள்“


      அதெல்லாம் மறக்க கூடிய விஷயமா என்ன?

      இதெல்லாம் மறுத்து போன விசயம் போல... தொடருங்கள் “உண்மைகள்“

      நீக்கு
  4. போதையூட்டும் அற்புதமான கவிதை. வாழ்த்துகள் தோழி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. சொல்ல வார்த்தைகள் இல்லை.. எதுகை மோனை பிசகாமல் அருமையான கவிதை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  6. மயங்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  7. ஆல்ரெடி தமிழகம் போதையில்தான் மிதக்குது அம்மா தயவில்.., இன்னும் உங்க தேவி வேறயா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வேற போதைங்க.
      அனைவருக்கும் தேவையான போதைங்க.
      முக்கியமாக பணம் செலவழிக்காமல்
      கிடைக்கக் கூடியதுங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. முட்களுக்கும் ஆசை வருமே...அருமை தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  9. அம்பாளடியாளின் கருத்தே என் கருத்தும்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  10. இந்த போதையும் நன்றாகத்தான் இருக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற போதையெல்லாம் இதைவிட
      நன்றாக இருக்குமோ...?

      நன்றி அரசன் ஐயா.

      நீக்கு
  11. போதை தந்தது கோதையோ!...
    காதை சொல்லிய மேதையோ!...
    பாதை காட்டிய சீதையோ!...
    தாதை கண்ணனின் ராதையோ!...:).

    மயங்க வைக்கும் அழகிய கவிதை!
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய பாடலுக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. போதை, நல்ல காதல் போதனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. அட...டட....டா கவிதைத்தேன் இனிக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப்ப்ப்ப்படியா....? அது தான் என்
      கணிணி எல்லாம் ஈரமாக இருக்கிறதா...? .)))

      நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  14. உண்மைதான் .போதை இல்லாத கவிதை ஏது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  15. அருணா செல்வம் பார்த்து ஜெயலலிதா அவர்கள் உங்கள் மீது கோபம் கொண்டு இருப்பதாக தமிழகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன காரணம் உங்கள் கவிதையை படித்த அனைவ்ரும் போதையில் இருப்பதால் டாஸ்மாக் வருமானம் குறைந்துவிட்டதாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன “உண்மைகள்“..?

      ஜெயலலிதா அவர்களும் வரட்டும். அவர்களுக்கும்
      ஒரு போதையான பாடலைக் கொடுத்துவிட
      வேண்டியது தான். தமிழகம் போல் அவர்களும் தள்ளாடிக் கொண்டே போகட்டும். (அப்பொழுதாவது தமிழ் தரும்
      போதையை உணருவார்கள் இல்லையா?)

      நீக்கு
  16. கவிதை என்றால்
    மீள மீளப் படிக்க
    விருப்பம் (ஆசை) வர வேண்டும்!
    "சொற்களுக்கும் போதை வரும்!!" என்ற
    தங்கள் கவிதையைப் படிக்கும் போது
    நான் கண்ட உண்மை இது!
    என் உள்ளத்தைத் தொட்ட பாவிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு