வீட்டின் தெரு வாசலிலேயே நின்றிருந்த
அஞ்சலையையும் அவள் அருகில் நின்றிருந்த சுகந்தியையும் அலட்சியமாகப் பார்த்த
பொன்னம்பலம், “என்ன அஞ்சலை?“ என்று கேட்டார்.
“இந்த மாச கடன் பணத்த
கொண்டாந்திருக்கிறேங்க...“ தயங்கித் தயங்கிச் சொன்னாள் அஞ்சலை.
“நா கொஞ்சம் வேலையா இருக்கேன்.
உள்ளே அம்மாகிட்ட குடுத்துடு.“
“சரிங்க ஐயா“ என்று சொன்னவள்
வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லை புறத்திற்குச் சென்றாள். “அத்தை... ஏன் நேரா வீட்டுக்குள்ள
போகாம இப்படி சுத்திக்கினு போறீங்க?“ என்று கேட்ட சுகந்தியைத் திரும்பிப் பார்த்து
முறைத்துவிட்டு, “இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பேன்னு தான் என் கூட
வரவேண்டாம்ன்னு சொன்னேன். பேசாம வாயை மூடிகிட்டு இரு.“ என்றாள் அழுத்தமாக.
“நான் என்ன இப்போ தப்பா
கேட்டுட்டேன்?“
“நீ தப்பா கேக்கலை சுகந்தி. நாம
பொறந்த இடம் அவ்வளவு தரம் கொறஞ்சதா இருக்கு. அவுக மேல் சாதிக்கராங்க. நாம
கீழ்சாதி. அவங்க வீட்டுக்குள்ள நாம போவக்கூடாதாம். தீட்டுன்னு சொல்லுவாங்க.“
இவளிடம் சொல்லிவிட்டு
கொள்ளைப்புறத்து வாசலை நோக்கி “அம்மா... அம்மா... நா அஞ்சலை வந்திருக்கேன்..“
குரல் கொடுத்தாள்.
கொஞ்ச நேரத்தில் “என்ன அஞ்சலை,“ என்று கேட்டபடி அந்த
அம்மாள் கையில் சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தாள்.
“இந்த மாச வட்டி பணமும் கொஞ்சம்
அசலும் சேத்து கொண்டாந்திருக்கேன்மா. இந்தாங்க.“ சொல்லியபடி பணத்தைத் தரையில்
வைத்தாள்.
அந்த அம்மாள் பணத்தைச் சுற்றி
கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட்டு எடுத்து எண்ணி முந்தானையில் முடிந்து கொண்டாள்.
“தண்ணீ தெளிச்சிட்டா தீட்டு
போயிடுமா...?“ என்று சற்றுக் கோபத்துடன் கேட்ட சுகந்தியை உச்சி முதல் உள்ளங்கால்
வரை பார்த்துவிட்டு, “யாருடி இவ?“ கேட்டாள் முகம் சுளித்தபடி.
“என் அண்ணன் பொண்ணும்மா. டவுனுல
படிச்சிட்டு இப்போ ஒரு ஆஸ்பத்திரியில வேலை செய்யிறா. அவ சம்பாதிச்ச பணம்தாம்மா
இது.“ பவ்வியமாக சொன்னாள் அஞ்சலை.
“ம்ம்ம்... நாலு காசு சம்பாதிக்கிற
திமிரு அவளுக்கு. அஞ்சலை... பெரியவங்க கிட்ட எப்படி பேசனும்ன்னு சொல்லி வை.“ என்று
கோபமாக சொல்லிவிட்டு வீட்டினுள் நுழையத் திரும்பியவளைக், “கொஞ்சம் இருங்கம்மா“ என்ற சுகந்தியின்
வார்த்தை அவளை அங்கேயே நிற்க வைத்தது.
“நாங்க
கொடுத்த பணத்தைக் கூட தண்ணீ தெளிச்சிட்டு தொடுறீங்களே... அன்னைக்கு ஆக்ஸிடன்ட் ஆன
உங்க புருஷனைக் காப்பாத்த ஒரு டாக்டர் காலில் விழுந்தீங்களே... அந்த டாக்டர் எங்க
சாதிக்காரர் தான். அதிகமா ரத்தம் போயிடுச்சின்னு ஒருத்தர் உங்க புருஷனுக்கு ரத்தம்
கொடுத்தாரே அவரும் எங்க சாதிக்காரர் தான். இப்போ வீட்டுக்குள்ளேயே தீட்டை
வச்சிக்கினு இருக்கிறீங்களே... எப்படி தண்ணீ தெளிச்சி சுத்தம் பண்ணுறீங்க?“
இதைக்கேட்ட
அந்த அம்மாள் சிலையாக நின்றாள்.
“சுகந்தி... இப்படியெல்லாம் பேசக்கூடாது.... வா போகலாம்“ கையைப்பிடித்து இழுத்தவளை
உதறிவிட்டு சுகந்தி பொறுமையாகச் சொன்னாள். “அத்தை... நான் அவங்களை அவமானப்படுத்த
வேண்டும்ன்னு சொல்லலை. கீழ்சாதிக் கரனுக்கும் ரத்தம் இருக்கு. அதுவும் சிகப்பாதான்
இருக்கு. அதிலேயும் துடிப்பு இருக்குன்னு இவங்க தெரிஞ்சிக்க வேண்டும்ன்னு தான்
சொன்னேன். அவங்க மனசை முதலில் சுத்தம் பண்ணிக்கட்டும். வாங்க அத்தை. போகலாம்...“ என்று சொல்லிச் சென்றவளைப்
பின்தொடர்ந்தாள் அஞ்சலை.
அருணா செல்வம்.
29.10.2013
சாதீயக் கொடுமைகள் குறைந்துள்ள இக்காலத்தில்
பதிலளிநீக்குஇன்னும் இந்த மேல்சாதிக்கார அம்மா போன்றவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்...
பொசுங்கி போகட்டும்
துருப்பிடித்துப்போன
சாதீய எண்ணங்கள்...
அருமையான சமூகக் கதை சகோதரி
நெகிழ்ச்சியான கதை...
பதிலளிநீக்குமனசு தெளிவாக இருந்தால் போதும் கீழ் சாதி மேல் சாதி என் பாகுபாடு யாரும் பார்க்க மாட்டார்கள்....
நல்லதொரு கதை... வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவிதை வீதி.
பதிலளிநீக்குநல்ல குறுங்கதை... வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்!
பிறப்பொக்கும் நற்குறளைப் பேணிப் படித்தால்
சிறப்பேற்கும் வாழ்க்கை செழித்து
தமிழ்மணம் 4
“பெருமை“ தரும்குறள்! பேணி நடந்தால்
நீக்குஅருமை அடைந்திடும் வாழ்வு!
தங்களின் வருகைக்கும் கருத்தாழக் குறளுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.
hits கிடைக்கும்ன்னு தான ஜாதியை பத்தி எழுதினீங்க
பதிலளிநீக்குஆமாம்!
நீக்குமிக சிறந்த பதிவு.
பதிலளிநீக்குஎன் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.
நன்றி!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நம்பள்கி.
இந்தச் சாதீயச் சாக்கடை என்றுதான் சீர்செய்யப்படுமோ..
பதிலளிநீக்குநல்ல அறிவுரைக் கதை!
வாழ்த்துகள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
வணக்கம்
பதிலளிநீக்குபதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் சுத்தமானால் சரி தான்... நல்லதொரு கதைக்கு பாராட்டுக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
நெஞ்சை நெகிழ வைத்த குட்டிக் கதை தோழி .உணர்வுபூர்வமாக
பதிலளிநீக்குஎழுதப்பட்ட இக் கதையைப் படிக்கும் போது ஏதோ உண்மைச் சம்பவம்
ஒன்றை நேரில் பார்த்தது போல் அமைந்திருந்தது !! வாழ்த்துக்கள்
தோழி அழகிய கதை இது மேலும் தொடரட்டும் .
நேற்று கேட்ட உண்மை கதையைத் தான்
நீக்குகதையாக எழுதினேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
சாதீ என்னிக்கு அணையப்போகுதுன்னு தெரியலை
பதிலளிநீக்குநாம் தான் அதனைத் தண்ணீர் தெளித்து அணைக்கனும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.