புதன், 22 மே, 2013

ஆறாம் அறிவு!! (3)





சொல்லும் செயலும் வெவ்வேறாய்ச்
   சொர்க்க உலகில் நடந்திடுவார்!
வில்லும் வாளும் வேறெனினும்
   வீழ்த்தும் செயலோ ஒன்றன்றோ!
கல்லும் முள்ளும் இருந்தாலும்
   கடக்க வேண்டி நிலைவந்தால்
மல்லு கட்டி நடக்கின்ற
   மாற்றம் அன்றோ ஆறறிவு!

அன்பும் பண்பும் ஒழுக்கமுடன்
   அருளும் அடக்கம் பிறவான
நன்றி வாய்மை நிலையாமை
   நட்பு அறிதல் போன்றவையும்
நன்றாய் மனித மனத்தினிலே
   நலமாய் அமர வேண்டுமெனில்
அன்றும் இன்றும் என்றென்றும்
   அறிவு தானே வழிவகுக்கும்!

உடைமை உடைமை எனச்சொல்வார்
   உறங்கும் இடத்தைத் தனதென்பார்!
கடமை என்ற நிலைமறந்து
   கடனே என்று வாழ்கின்றார்!
முடமை இல்லை! முயலாமல்
   முட்டி போட்டுக் கேட்பவரின்
மடமை போக்கி உயர்த்துவதோ
   மதியில் உதிக்கும் ஆறறிவே!!


அருணா செல்வம்
22.05.2013

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  2. உடைமை உடைமை எனச்சொல்வார்
    உறங்கும் இடத்தைத் தனதென்பார்!
    கடமை என்ற நிலைமறந்து
    கடனே என்று வாழ்கின்றார்!//

    கருப்பொருள் விட்டு சிறிதும் மாறாது
    இயல்பாக வந்து விழும் வார்த்தைகள்
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ்மண ஓட்டிற்கு நன்றி நவின்றேன்!
      அமிழ்தாய் இனித்த(து) அகம்!

      நீக்கு
  4. அறிவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்....

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. அருமையான எளிமையான சொற்றாடல் தொடர்க ...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. உண்மையான ஆறாம் அறிவு எதை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்.ஆறாம் அறிவை நல்ல படி பயன்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  7. பகுத்தறியும் இந்த ஆறாவது அறிவு எமக்கு இருந்தால் மட்டுமே மனிதன் எனக் கொள்ளலாம் இது இப்போது பலருக்கும் இருப்பதாகத் தெரியவில்லைத் தோழி :) சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன தோழி இப்படி சொல்லிவிட்டீர்கள்...?
      எல்லா மனிதருக்கும் இருக்கிறது. ஆனால் என்ன... யுஸ் பண்ணுவதில்லை போலும்.

      எனக்கு ”அறிவுடைமை” என்ற தலைப்பு கொடுத்துக் கவிதை
      எழுத சொன்னார்கள். நான் பத்து பாடல்கள் எழுதி அதை மூன்றாகப் பிரித்து வெளியிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு

  8. பகுத்துச் சொல்லும் ஆறறிவு--இங்கே
    தொகுத்துச் சொல்லுதல் பேரறிவே!
    வகுத்துக் காட்டும் அருணாவே
    வாழ்க! வளமுடன் அருணாவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகுந்த நல்ல கருத்தகளைப்
      பொதித்துச் சொல்லும் புலவரய்யா!- நீர்
      வகுத்துத் தந்த வாழ்த்துகளை
      வணங்கி ஏற்றேன் தலைகுனிந்து!

      நீக்கு
  9. ஆறாம் அறிவை அழகாக
    அடுக்கிச் சொன்னீர் கவியாக
    ரசம்,பரிசம்,கந்தமுடன்
    ரூபம்,ரூபாரூபம் பகுத்தறிவாம்
    இத்தனை அறிவும் சேர்த்திங்கே
    இறைவன் எம்மை படைத்தாலும்
    அடைப்புக்குறிக்குள் இட்ட மூன்றாய்
    அறிவினை மனிதன் குறைத்தானே...!

    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. துடிப்பு கொண்ட இளநெஞ்சாய்
      தொடர்ந்தே எழுதும் சீராளன்
      அடித்துக் சொல்வேன் குறையில்லை!
      அறிவை ஒழுங்காய்க் கொள்பவர்க்கு!
      படைப்பை அளித்தேன் பண்பாக!
      பகுத்தும் அளித்தேன் தெளிவாக!
      அடைப்புக் குறிக்குள் இட்டமூன்றோ
      ஆறாம் அறிவின் பாகமன்றோ!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. \\ உடைமை உடைமை எனச்சொல்வார்
    உறங்கும் இடத்தைத் தனதென்பார்!
    கடமை என்ற நிலைமறந்து
    கடனே என்று வாழ்கின்றார்!//

    நிதர்சனம்.

    அருமையான கவிதை, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு

  11. அறிவில் ஆறும் இயங்கவேண்டும்
    அருமையாய்ச் சொன்னீர் அருங்கவியே!
    இறைவன் இயல்பாய் தந்ததிதை
    இயக்கவில்லை ஏனோஅனைவருமே!...

    அரும்பொருள் பொதிந்த நற்கவிதை! அருமை!
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம. 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய பாடலுக்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  13. ஆறறிவு எதென்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறது கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி

      நீக்கு