புதன், 26 பிப்ரவரி, 2014

பனிக்காலம் நல்லது!! (நிகழ்வும் – விளக்கமும்)



    நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் இருந்த போது அனுபவித்த சின்னச் சின்ன சுவாரஷ்யமான விசயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். (நல்லாத்தான் இருக்கும். பயப்பட வேண்டாம்) இதையும் படித்து எனக்கு நீங்கள் என்றும் போல்   ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

பனிக்காலம் நல்லது!!



   
   எனக்குக் கடந்த மார்கழி (டிசம்பர்) மாதத்தில் திடீர் என்று ஒரு நல்ல ஓட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. என் அம்மாவிடம் கேட்டேன். “எனக்குப் பல் வலிக்கிறது. நான் வரவில்லை“ என்று சொல்லிவிட்டு, “இந்தப் பனி காலத்தில் யாராவது ஐஸ் சாப்பிடுவார்களா...? சளி பிடித்துக்கொள்ளும். அதனால் ஐஸ் சாப்பிடக்கூடாது“ என்று கோபமாகச் சொல்லி விட்டார்கள்.
   அம்மா என்றாலே இப்படித் தானே... அதனால் என் தோழிக்குப் போன் செய்து, “என்னுடன் ஐஸ் சாப்பிட வா“ என்று அழைத்தேன். அவள், “எங்கள் வீட்டுத் தெருவில் ஒரு பாட்டி இறந்துவிட்டார்கள். அதனால் நாளைக்கு மறுநாள் போகலாம்“ என்று சொல்லிவிட்டாள்.
   நானும் இரண்டு நாள் கழித்து அவளுக்குப் போன் செய்து அழைத்தேன். அன்று “இன்று எங்கள் தெருவில் இரண்டு வயதானவர்கள் இறந்துவிட்டார்கள். நான் வர முடியாது“ என்றாள். “என்ன இது... இரண்டு நாளைக்கு முன்பு தானே ஒரு சாவு என்றாய். திரும்பவுமா...?“ என்று கேட்டேன்.
   “ஆமாம் அருணா. இது பனிக்காலம் இல்லையா...? இந்த மார்கழி மாதக் குளிரை வயதானவர்களால் தாங்க முடிவதில்லை. உறக்கத்திலேயே இறந்துவிடுகிறார்கள்“ என்றாள்.
   இங்கு 20, 21 டிகிரி அடிக்கிறது. இதைப்போய் குளிர் என்கிறார்கள். நான் -4, -5 என்ற அளவில் இருந்து விட்டு வந்ததால் இதை என்னால் குளிர் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
   என்ன செய்வது....? அவளும் வரவில்லை. நானும் ஐஸ்கிரீம் சாப்பிட முடியவில்லை.

   மறுநாள் புல்லாங்குழல் வித்துவான், கலைமாமணி, புலவர் வெங்கடேசன் ஐயாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். இவரைப் பாண்டிச்சேரி பிரன்சுப்பள்ளி கல்வே காலேஜியில் படித்த அனைவருக்கும் நன்கு தெரியும். அதிகம் கற்றவர். ஆனால் மிகவும் அமைதியானவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தால் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
    அப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது மணி இரவு 8 இருக்கும். அவர் தன் மகளை அழைத்து “ரொம்ப குளிருது. துண்டு கொண்டு வா“ என்றார். அந்தப்பெண் கொடுத்தக் கம்பளித்துண்டை வாங்கி, “பனிக்காலம் நல்லதுன்னு பெரியவர்கள் அனுபவித்துத் தான் சொல்லி இருக்கிறார்கள். அப்பா.. என்னமா குளிருது“ என்று சொல்லிக்கொண்டே தலையில் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார்.

   என்னது... பனிக்காலம் நல்லதா....? என்ன இவர் முரணாகச் சொல்கிறார்? பனியின் கொடுமை தாங்காமல் வயதானவர்கள் இறந்து விடுகிறார்கள் என்று தோழி சொன்னாள். பனி அவ்வளவு கெட்டது என்றாள். இவர் என்ன இப்படி சொல்கிறார். ஒரு சமயம் பனியால் வயதானவர்கள் இறந்துவிடுவதால் நல்லது என்று பெரியவர்கள் சொன்னார்களோ.... என்று என் சின்ன மூளை யோசித்தது.
   அப்படி இருக்காது. பல உயிரை வாங்கும் கொடிய செயலை நம் பெரியவர்கள் நல்லது என்று கட்டாயம் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று ஒரு பக்கம் என் நல்ல மூளை சொன்னது.
   இருந்தாலும் புலவர் “பனிக்காலம் நல்லது“ என்று சொல்கிறாரே. காரணம் இல்லாமலா இருக்கும். அவரிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று “ஐயா, பனிக்காலம் கொடுமையானது தானே. பின்பு ஏன் பனிக்காலம் நல்லது“ என்று சொன்னார்கள்?“ என்று கேட்டேன்.
   அவர் சிரித்தபடியே சொன்னார். “பனிக்காலம் என்பதை அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதை
பனிக்கு + ஆலம் – பனிக்காலம் என்று பிரித்துப் படித்துப் பொருள்கொள்ள வேண்டும்.
இதில் “ஆலம்“ என்பது ஆலகால விஷம். உலகில் அதிக விஷமானது ஆலகாலவிஷம். இந்தக் கொடுமையான விஷத்தை விட பனி கொடுமையானது. அதனால் தான் பனியை விட ஆலம் நல்லது என்பதைப் “பனிக்கு ஆலம் நல்லது“ என்று சொன்னார்கள். அதைச் சுறுக்கி “பனிக்காலம் நல்லது“ என்கிறோம்“ என்று விளக்கம் சொன்னார்.

   அடடா... நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்று வியந்தபடி வீடுவந்து சேர்ந்தேன்.

அருணா செல்வம்.

   

28 கருத்துகள்:

  1. பனிக்கு + ஆலம் - பொருள் விளக்கம் அறிந்தேன் சகோதரி...

    புலவர் வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. புதிய தகவல் தெரிந்துக் கொண்டேன் அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி தோழி.

      நீக்கு
  3. பனிக்கலாம் !! இதுவரை அறியாத தகவல் கண்டு மகிழ்ந்தேன் தோழி .
    ஒவ்வொரு சொற்களும் இப்படித்தான் பிறந்திருக்க வேண்டும் .எமது
    முன்நோர்களின் அறிவைக் கண்டு வியந்து போகிறேன் ! மிக்க நன்றி
    தோழி சிறப்பான பகிர்வுக்கு .என் தளத்தில் தமிழ்ப் பெண்ணைக் கௌரவித்துக் கவிதை எழுதியுள்ளேன் முடிந்தால் வாருங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கவிதையைப் படித்துவிட்டேன். அருமையாக இருந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி தோழி.

      நீக்கு
  4. என்ன இந்தியாவிற்கு போய்விட்டு திரும்பி வந்து வீட்டீர்களா ? அப்படின்னா இனி வலையுலகத்தில் பனிக்காலாம் ஆரம்பித்துவிட்டது என்றுதான் அர்த்தம். அதாவது நீங்கள் மீண்டும் கவிதை எழுத தொடங்குவீங்க. அதனால பல பேர் சாவாங்க்...ஹும் பனியோட கவிதை அதிக ஆட்களை கொல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனவாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால்.. நான் கவிதை எழுதுவதை விட்டுவிடுவேன் என்று நினைத்துவிட்டீர்களா...?

      நம் தமிழ்க்ககவிதைகள், ஆலகால விஷத்தைவிட பவர் அதிகம்ங்க. இதை அதிகம் உண்ண உண்ண... உடம்பிலும் உள்ளத்திலும் உரம் கூடும்ங்க.

      நீக்கு

  5. இனிமே பனிக்காலத்தில் ஐஸ்க்ரிம் சாப்பிட வேண்டுமானால் என்னை கூப்பிடுங்க ஆனா என்ன கூட நீங்க சேர்ந்து ஐஸ்கிரிம் சாப்பிட ஆகும் செலவு சற்று அதிகம்....காரணம் கூப்பிட்டவ்ங்கதானே எனக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவில் ஐஸ்கிரீம் ரொம்ப சூப்பராக இருக்குமாம். பேசாமல் நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் அனுப்பிவிடுங்கள்.

      நீக்கு
  6. இந்தியா சுத்த மோசமுங்க ஒரு அழகான பொண்ணு ஐஸ்கிரிம் சாப்பிட கூப்பிட்ட ஒரு பயபுள்ளைங்ககூட உடன் செல்லவில்லை.... எனக்கு ஒரு சந்தேகம் நீங்க மேக்கப் போடமா இருந்தப்ப அவங்களை கூப்பிட்டீங்களா என்ன? அப்ப்டி கூப்பிட்டு இருந்தா ஏதோ பேய் நம்மை கூப்பிட்டதுன்னு பயந்து இருப்பாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான பொண்ணு... !!

      மதுரைத்தமிழா.... நீங்கள் என்னைப் பார்க்காமல் இருப்பதே மேல். ஏன் என்றால்....
      மேக்கப் போட்டாலும் நான் பேய்மாதிரி தான் இருப்பேன்.

      (இந்த மேக்கப் குறித்து ஒரு சுவையான நிகழ்வு என் வீட்டில் நடந்தது. அதை விரைவில் பதிகிறேன்.)

      நன்றி.

      நீக்கு
  7. அற்புதமான விளக்கம்
    சுவாரஸ்யமான சுவையான பகிர்வு
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  8. பனிக்காலம் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா.
    பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி சுப்ரமணியன் அண்ணா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  10. "ஐயா, பனிக்காலம் கொடுமையானது தானே. பின்பு ஏன் பனிக்காலம் நல்லது“ என்று சொன்னார்கள்?“ என்று கேட்டேன்.
    அவர் சிரித்தபடியே சொன்னார். “பனிக்காலம் என்பதை அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதை
    பனிக்கு + ஆலம் – பனிக்காலம் என்று பிரித்துப் படித்துப் பொருள்கொள்ள வேண்டும்.
    இதில் “ஆலம்“ என்பது ஆலகால விஷம். உலகில் அதிக விஷமானது ஆலகாலவிஷம். இந்தக் கொடுமையான விஷத்தை விட பனி கொடுமையானது. அதனால் தான் பனியை விட ஆலம் நல்லது என்பதைப் “பனிக்கு ஆலம் நல்லது“ என்று சொன்னார்கள். அதைச் சுறுக்கி “பனிக்காலம் நல்லது“ என்கிறோம்“ என்று விளக்கம் சொன்னார்." எனச் சிறந்த முறையில் தமிழ் கற்பித்தது போன்று தங்கள் பதிவு அமைந்திருக்கிறது.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மி்க்க நன்றி காசிராசலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. பனிக்கு ஆலம்....

    நல்ல பொருள். சுவாரஸ்யமாக இருந்த பகிர்வு.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. பனிக்கு ஆலம் நல்லதா? ஏங்க இத முன்னாடியே சொல்லக்கூடாதா? இது தெரியாம பனிக்காலம் நல்லதுன்னு நான்அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து சுத்தினதுல என் தொண்டை எம்.ஆர்.ராதா மாதிரி ஆயிடுச்சி... ஒரு வாரம் வாயையே தொறக்கலை... இதான் சான்ஸூன்னு என் வூட்டுக்கார் என்னல்லாம் பாடனுமோ அவ்வளவும் பாடிட்டார்...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சில நாட்கள் மட்டும் தானே அண்ணாவால் பாடமுடியும். போனால் போவுது.

      பனிக்காலத்தில் தலைக்குத் துணியைக் கட்டினால் போதும்.

      நன்றி உஷா.

      நீக்கு