வெள்ளி, 20 ஜூலை, 2012

“வணங்குதல்“ – சிறு விளக்கம்!!வணக்கம் நண்பர்களே!!

நான் போன வாரம் “வணங்க வேண்டும்“ என்ற தலைப்பில் நான்கு பதிவுகள் இட்டிருந்தேன்.

அதில் ஒரு பதிவில் ஒரு நண்பர் “மனிதனை வணங்காமல் படைத்தவனை வணங்கினால் நன்று“ என்றும் “வணங்க வேண்டும் என்பதைப் போற்ற வேண்டும் எனலாமே...என்றும் பின்னோட்டமிட்டிருந்தார்.
   நானும் அதைப் பெரிதாக கொள்ளாமல் “உங்கள் கருத்திற்கு நன்றி“ என்று மட்டும் பதிலெழுதினேன். ஆனால்.... இதைப்படித்த வேறு ஒரு நண்பர் “ இந்தக் கருத்திற்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.“ என்று மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
நானும் “சரி ஐயா... விளக்கம் தருகிறேன்“ என்று பதிலெழுதிவிட்டு அதற்கான பதிலை அனைவருக்கும் பகிர்கிறேன்.

பொதுவாக “வணங்குதல்“ வேண்டுதல்“ போற்றுதல்“ “தொழுவுதல்“ போன்ற சொற்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத் தான் கொடுக்கும். ஆனால் அதிலும் சின்ன சின்ன வேறுபாடுகள் உள்ளன.

“வணங்குதல்“

நாம் மனத்தால் உயர்வாக மதிக்கும் அனைத்தையும் வணங்குவதை “வணங்குதல் எனலாம். உதாரணமாக தாய், தந்தை. தமிழ், குரு, தெய்வம், தலைவர்கள்..... இப்படி..
இப்படி வணங்குவதற்கு வயது வரம்பு கிடையாது.

“வேண்டுதல்“

வேண்டுதல் என்பது நமக்குத் தேவையானதை அது இருக்கும் ஒருவரிடம் வேண்டிப் பெறுவது.
உதாரணடாக ஆண்டவனிடம் அருளை வேண்டி பெறுதல், ஆசிரியரிடம் கல்வியை வேண்டி பெறுதல்... இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்.
ஆனால் பெற்றோர்கள் அன்புருவானவர்கள். அவர்களிடம் அன்பை வேண்டி பெறுதல் என்றோ வேறு எதையோ வேண்டி பெறுதல் என்றோ சொல்லக்கூடாது.

“போற்றுதல்“

போற்றுதல் என்பது உயர்ந்தவர்களின் புகழை, அவர்களின் செயற்கரியச் செயலை உயர்த்தி பேசுவது, உயர்த்தி பாடுவது எனலாம்.

“தொழுவது

தொழுவது என்பது நம் முன்னோர்கள் ஆண்டவனை முறைப்படி எப்படி வணங்குவது என்று சொல்லி வைத்தார்களோ அந்த முறைப்படி ஆண்டவனை வணங்குவது தொழுதல்“ என்பதாகும்.
உதாரணமாக கிருஸ்த்தவர்கள் முட்டிப்போட்டுக்கொண்டு தேவனைத் தொழுவது, இஸ்லாமியர் ஒரு திசையைப் பார்த்து நமஸ் ஓதி அவர்களின் இறைவனை வணங்குவது, இந்துக்கள் ஆண்டவனை இத்தனை வளம்வந்து வணங்குவது... இப்படி முன்னோர் சொன்னதைக் கடைபிடித்து ஆண்டவனை வணங்குவதாகும்.

   நாம் நம்மைவிட உயர்ந்தவர்களை வணங்குவது அவர்களுக்கு நாம் காட்டும் பணிவின் அடையாளமே...

(என்ன... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று என்னை யாரும் திட்டாதீங்க நண்பர்களே...)

நன்றி.


17 கருத்துகள்:

 1. நான் உங்களின் தமிழை வணங்குகிறேன். போற்றுகிறேன். சரியா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனா...

   நிறைய நாட்கள் கழித்து வந்தாலும் என் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு அழகான பின்னோட்டங்களும் வாழ்த்துக்களும் சொல்லி இருக்கிறீர்கள். ரொம்ம்ம்ம்ப நன்றி ஃபிரெண்ட்.

   நிரஞ்சனா நாம் நம் தமிழை வணங்குவதும் போற்றுவதும் நம்மைத் தானாக உயர்த்தும்.

   நன்றிப்பா நிரஞ்சனா.

   நீக்கு
 2. நல்ல விளக்கம்... இதெல்லாம் கண்டுக்காதீங்க சகோ...
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் உற்சாகமூட்டும் பின்னோட்டத்திற்கு
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 3. அருமை.

  நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

  அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் கடவுளை நினைத்து,பிடித்தவர்களா இல்லையா, உரியவர்களா என்று கவலைப்படாமல் , வணங்குகிறேன்.
  அது எனக்கு அமைதி தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க வெற்றிமகள்!

   உங்களுக்கு அமைதியைத் தரும், நீங்கள் மனத்தால் உயர்வாக மதிக்கும் கடவுளையே வணங்குங்கள்.
   ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மனம்...

   நன்றிங்க நட்பே!

   நீக்கு
 4. நல்லதொரு விளக்கம் வணங்குதல் என்பதை விட நீங்கள் பகிர்ந்த கவிதைக்கு போற்றுதல் சிறந்ததாக இருக்குமென நினைக்கிறேன்......ஜஸ்ட் நம்ம சிந்தனைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிட்டுக்குருவி....

   நீங்கள் சொல்வதைப்போல நான் கவிதையில் பகிர்ந்த அனைவரையும் போற்றி வணங்குவதே சிறந்தது.

   நீக்கு
 5. அருமையான விளக்கம்!ஒவ்வொன்றுக்கும் சிற்சிறு வித்தியாசங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

   நீக்கு
 6. நாம் நம்மைவிட உயர்ந்தவர்களை வணங்குவது அவர்களுக்கு நாம் காட்டும் பணிவின் அடையாளமே...
  ஆமாம் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க சசிகலா.

   நீக்கு
 7. sako..!

  antha pinnoottam naanthaan itten-
  enpathu purikirathu!

  neengal sonna vilakkam etrukolla koodiyathutaan-
  vilakkam therinthavarkal!

  ennai pontra saamaaniyarkalukku-
  santhekame...

  melum pala vidayangal ennaal-
  ezhuthida mudiyuum!

  aanaal sila velai paluvinaal-
  ungal pathivukku pinnoottam thaamathamaaka
  idukiren!

  oru kathai;
  oru aasiramathil poonai-
  kurukku nedukkumaaka
  poi vanthathu!

  guru-
  thontharavu seyyum poonaiyai-
  katti poda sonnaar!

  kaala kadanthathu!
  guru iyarkai eythinaar!

  thalamaiyai seedan
  etrukondaan-
  avan oru poonaiyai valiya sentru-
  katti pottaan!

  guru thontharavu seytha poonaiyai-
  katti pottaar!
  seedano poonai katti podave-
  seyyanum ena ninaithaan!

  ippadithaan -
  ulakil thavaraana purithalkal-
  athikam!

  atharkkaakave avvaaru -
  pinnoottam
  itten!

  matra padi ontrum-
  illai!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சீனி நண்பரே!

   உங்களின் விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

   என்னைப் பொறுத்தவரையில் எதை எழுதினாலும் ஆகா.. ஓகோ என்று சும்மா பாராட்டுவதைவிட சொன்ன விசயம் தவறு என்று பட்டால் அதைச் சுட்டிக்காட்டி யார் திருத்தினாலும், அதில் உள்ள உண்மை விளங்கினால் ஏற்றுக் கொள்வேன். ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் சொன்னவர்களிடமே விளக்கம் கேட்பேன். அதே சமயம் எனக்கு தெரிந்திருந்தால் விளக்கமாகச் சொல்லிவிடுவேன்.
   எழுத்துலகில் நான் படைத்தும் இருக்கிறேன். அதிகம் பட்டும் இருக்கிறேன்.
   நன்றிங்க நண்பரே!

   நீக்கு