செவ்வாய், 7 மே, 2013

வாராயோ வாராயோ... காதல் கொள்ள!நட்புறவுகளுக்கு வணக்கம்!
    ஒரு பொங்கல் அன்று இங்கே (பிரான்ஸ்) பொங்கல் விழா கொண்டாடினார்கள். அதில் இளையவர்கள் ஒரு பொங்கல் பாடல் பாடுவதாக முடிவானது.
    புதியதாக பாடலெழுதி மெட்டமைத்துப் பாட அவர்கள் விரும்பாததால்... “ஆதவன்“ படத்தில் ஒரு பாடலான “வாராயோ வாராயோ... காதல் கொள்ள“ என்றப் பாடலை பொங்கல் பாடலாக மாற்றி எழுதித் தருமாறு கேட்டார்கள்.
    நானும் எழுதித் தந்தேன். அருமையாக பாடினார்கள். அந்தப் பாடலை இங்கே தருகிறேன். பாட விருப்பம் கொண்டவர்கள் பாடி மகிழுங்கள்.
பொங்கல் பாடல்!!

பொங்கலோ பொங்கலோ என்று சொல்ல
பொங்கிடும் மனதினில் துன்பம் இல்ல
வந்திடும் சொந்தங்கள் வாழ்த்துச் சொல்ல
வருமே மனம் மகிழ...
வருமே மனம் மகிழ...

வாருங்கள் வாருங்கள் பொங்கல் உண்ண
வந்தவர் சேர்ந்திட இன்பம் கொள்ள
துன்பங்கள் என்பதே கொஞ்சம் இல்ல
மகிழ்வாய் ஓ மனமே...
மகிழ்வாய் ஓ மனமே...

இன்றே இன்றே இன்பம் பொங்கிடும் நாள்தான்
துன்பம் அற்ற நாள்தான்
உண்மையில் இதுவே தேன்தான்.

இங்கே இங்கே நல்லவர் சேர்ந்திடும் நேரம்
நன்மைகள் வளர்ந்திடும் காலம்
இதுவே நமக்கென்றும் போதும்.

மை மை மை மை நட்பு உண்மை
மெய் மெய் மெய் மெய் இதுவே உண்மை
இந்த உண்மையினை என்றும் நாம் உணர்ந்தால்
உலகம் கொண்டாடும் உண்மையாய்....   (பொங்கலோ...)

இன்பம் இன்பம் எம் வாழ்வேஅதன் தேடல்
வாழ்த்துவதே என் பாடல்
இனி தேவையில்லை மோதல்

வாழ்க வாழ்க என வாழ்த்துகின்ற வாயே
வரும் தொல்லை எல்லாம் நீயே
இனி மூடி மகிழ்ந்திடு வாயே...

கை கை கை கை நம்பிக்கைவை
மெய் மெய் மெய் மெய் புரிந்திடும் உண்மை
இந்த பொங்கல் விழா என்றும் கொண்டாட
நட்புக்கு நன்மை புரிந்திடுமே....  (பொங்கலோ...)

அருணா செல்வம்
07.05.2013

32 கருத்துகள்:

Seeni சொன்னது…

ada..!

nallaa irukku..!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மெட்டுக்குப் பாட்டு......

நல்லா இருக்கு அருணா..... பாராட்டுகள்....

நட்புடன்

வெங்கட்.

கவியாழி சொன்னது…

தமிழ் மணத்தில் எட்டிலிருந்து ஏழுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்து பொறாமையை வரவைத்து விடுவதும் உண்மைதான்?

Avargal Unmaigal சொன்னது…


பிரான்ஸில் வசிக்கும் தமிழ் பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுகள் வருங்காலத்தில் நல்ல தமிழ்பாடல்கள் (ஆங்கில வார்த்தை கலப்பின்றி )பிரான்ஸில் இருந்துதான் வரும் போலிருக்கிறதே...

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. பல்லவி டியூன் தெரியும். சரணங்கள் டியூன் தெரியாது. எனவே அங்கு கவிதையை மட்டும் ரசித்தேன்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மரபுக் கவிதை எழுதுபவர்களால் மெட்டுக்கு எளிதில் பாட்டெழுத முடியும்.அதை நிரூபித்து விட்டீர்கள்.அருமை எனக்கும் இந்த ஆர்வம் முன்னர் இருந்தது.சினிமாவுக்கும் பாட்டெழுத ஆசைதான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இதெல்லா கூட கவனிக்கிறீங்களா? நீங்களும் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறீர்களே. நீங்களும் வேகம்தான்.சார்
வாழ்த்துக்கள் இருவருக்கும்.

மகேந்திரன் சொன்னது…

கொஞ்சம் கூட மெட்டு பிறழாமல்
மிகவும் அழகாக...
மென்மையான இதமான வரிகளால்
புனையப்பட்ட பாடல்..
==
பல்கலை வித்தகர் நீங்கள் சகோதரி...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

சங்கத் தமிழ்இனிக்க! சந்த இசையொளிக்க!
பொங்கலைப் பாடியே போற்று!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா... பாடிப் பார்த்தேன்... அருமையாக இருக்கிறது சகோதரி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

தமிழ்ச்செல்வன் சொன்னது…


பொங்கல் கவிதை மிக மிக இனித்தது

கீதமஞ்சரி சொன்னது…

அட, கலக்கலாயொரு கவிதைப்பொங்கல்! வாழ்த்துக்கள் அருணாசெல்வம்.

Unknown சொன்னது…

மனதுக்குள் பாடிப்பார்த்தேன், ஆஹா நன்றாகத்தான் இருக்கிறது!

Yaathoramani.blogspot.com சொன்னது…

பாடி ரசித்தேன் அருமை
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 8

மாதேவி சொன்னது…

நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

நட்புடன்

அருணா செல்வம்.

அருணா செல்வம் சொன்னது…


மனத்தினில் உள்ளதை மாசற சொல்லும்
குணத்தினைக் கொண்ட கவியாழி! உம்வாழ்த்தோ
ஏழிலிருந்(து) ஆறுக்கும் ஏணியாக்கி ஏற்றட்டும்!
தோழியெனைப் பின்தொடர்ந்து வா!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நம் நாட்டிலேயே இருப்பதால் நம் மொழி
நமக்குப் பெரியாதாகப் படவில்லை.
எட்ட இருந்து பார்க்கும் பொழுது தான்
அதன் அருமை தெரிகிறது.

பொதுவாக எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.
நாம் கொஞ்சம் தள்ளி இருப்பதால் மேலும் அதிகமாக புரிந்து
கொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன் “உண்மைகள்“

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம்.

அருணா செல்வம் சொன்னது…

சினிமாவிற்குப் பாட்டெழுத போறீங்களா...? வாழ்த்துக்கள்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாடிப்பார்த்து வாழ்த்தியமைக்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தமிழ்ச்செல்வன் அவர்களே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

அருணா செல்வம் சொன்னது…

மனத்திற்குள் மட்டுமா....
சத்தாமகவே பாடியிருக்கலாம்...
நாங்களும் கேட்டிருப்போம்....

தங்களின் வருகைக்கும் பாடி மகிழ்ந்தமைக்கும்
மிக்க நன்றி கனகலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்களும் பாடினீர்களா..... மிக்க மகிழ்ச்சி.

(புதுப்பாடல்களை என்னால் பாடவே முடிவதில்லை. அந்த வருத்தம் எனக்குள் இருக்கிறது)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

ஆதிரா சொன்னது…

பாட்டு சூப்பர் அருணா..

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஆதிரா.