கண்கள் இருந்தும்
குருடாக
காது கேட்டும் செவிடாக
மண்ணின் மீது
வாழ்கின்றார்
மனிதர் என்ற பெயர்கொண்டு!
கண்முன் நடக்கும்
கொடுமைகளைக்
கண்டும் காணா ததுபோல
பெண்போல் ஆணும்
மாறியது
பெற்ற அறிவை மறந்ததாலே!
மிரட்டும் கயவர்
செயல்கண்டு
மீறிக் கேட்க முடியாமல்
வரட்டும் ஒருவன்
கடவுளென
வந்து நின்று கூலியினைத்
தரட்டும் என்றே
காத்திருப்பார்
தாமாய் எதையும் செய்யாமல்!
துரத்தும் வழிதான்
அறிவுடமை
தூர நிறுத்த என்செய்யும்?
இருட்டில் நின்று
தன்நிழலை
இதயம் துடிக்கத் தேடிடுவார்!
அரண்டு போன மனத்துடனே
அல்லும் பொழுதும் பயங்கொண்டு
மிரண்டு மிரண்டு
வாழ்ந்திடுவார்!
மின்னல் கண்டும் பயந்திடவார்!
திரண்ட அறிவைத்
தீட்டாமல்
தீதே அனைத்தும் என்றிடுவார்!
வானில் தெரியும்
சூரியனும்
வடிவாய்த் தெரியும் சந்திரனும்
தூணில் வடித்தச்
சித்திரமும்
துளைத்துச் செய்தச் சிற்பமதும்
தானே நினைத்தான்
தெய்வமென்று
தவறு செய்தால் திருத்துமென்று!
வீணே விளைந்த
பழங்கருத்தை
வீழ்த்தும் வழியே அறிவுடமை!!
(தொடரும்)
அருணா செல்வம்.
இனிக்க இனிக்க சொற்களால்
பதிலளிநீக்குகவிதைக்கோட்டை கட்டியிருக்கிறீர்கள்...
அதுவும்...
வெந்துவெந்து மனதுக்குள்ளேயே
பயந்து பயந்து மரணத்தை நோக்கும்
மனிதரின் குணங்களை சொற்களால் சாடியிருக்கிறீர்கள்...
==
உன்னுள் இருக்கும்
விவேகத்தை
வீணே தெருவில் வீசாதே
அறிவுடைமை கைகொண்டால்
ஆளுமை உன் கைக்குள்ளே
என
அறிவுறுத்தும் கவிதை..
===
வாழ்த்துக்கள் சகோதரி..
தங்களின் வருகைக்கும் அழகிய கவிதையுடன் கூடிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி அண்ணா.
நீக்குநடப்பதெல்லாம் நன்மைக்கே...!
பதிலளிநீக்குதவறு...
நடப்பதெல்லாம் நம்மளாலே...!
கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலண் அண்ணா.
/// கண்முன் நடக்கும் கொடுமைகளைக்
பதிலளிநீக்குகண்டும் காணா ததுபோல
பெண்போல் ஆணும் மாறியது ///
இன்றைக்கு வரவேற்கத்தக்க வகையில் பெண்கள் மிகவும் மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...
பெண்போல் ஆணும் மாறியது....
நீக்குஎன்பது பெண்ணின் குணத்தில் ஒன்று “அச்சம்“
“அச்சத்தால் ஒரு பெண் நகர்ந்து விடுவது போல்“ என்று பொருள் கொள்ளுங்கள் தனபாலன் அண்ணா.
“இன்றைக்கு வரவேற்கத்தக்க வகையில் பெண்கள் மிகவும் மாறி விட்டார்கள்“ இதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
கருத்திற்கு நன்றி.
நல்ல கவிதை.... தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
ரொம்பவும் அறிவு சார்ந்த அழகான கவி நன்றி
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சகோ.
நண்பர்களுக்கு பகிருங்கள். உங்களது பகிர்வால்ஒருவராவது பயனடைவர்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா.
வீணே விளைந்த பழங்கருத்தை
பதிலளிநீக்குவீழ்த்தும் வழியே அறிவுடமை!!
தெளிவு படுத்தும் சிந்தை தொடருங்கள் தொடர்கிறோம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சசிகலா.
வீணே விளைந்த பழங்கருத்தை
பதிலளிநீக்குவீழ்த்தும் வழியே அறிவுடமை!!
ஏழாம் அறிவும் தேவையோ ..!
ஆறாம் அறிவையே முழுமையாக பயன்படுத்த வில்லை.
நீக்குஇதில் ஏழாம் அறிவு வேறா....? என்னம்மா நீங்கள்....
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
தொடர்கவிதையா? தொடர்கிறேன்! சந்த நயம் அருமை!
பதிலளிநீக்குதொடராக எழுதலாம் என்றே நினைத்தேன்.
நீக்குஅதிகம் பேர் விரும்பாததால்... இத்துடன் நிறுத்திவிட்டு
வேறு ஏதாவது எழுதுகிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.
vaaxhthukkal..!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
தொடரத் தொடர்வேன்! அருமை!
பதிலளிநீக்கு