செவ்வாய், 28 மே, 2013

பாதை எங்கும் மலர்ச்சோலை!!






அன்னை கையில் தவழ்ந்திருக்க
   ஆசை எதுவும் மனத்திலில்லை!
முன்னை தெய்வம் இதுவென்று
   மூத்தோர் சொல்லி புகுத்தவில்லை!
பொன்னைப் பொருளைத் தந்தாலும்
   போற்றி வைத்துச் சேர்க்கவில்லை!
பண்பு பொங்கும் தாய்பிடியில்
   பாதை எங்கும் மலர்ச்சோலை!

அடித்த அரட்டை தாங்காமல்
   அன்னை கோபம் கொண்டாலும்
வெடித்தச் சிரிப்பை அடக்காமல்
   வெண்மை உள்ளம் கொண்டிருந்தும்
நடிப்பே என்ப(து) அறியாமல்
   நட்பை உயர்வாய் பேசிக்கொண்டும்
படித்த இளமை காலத்தில்
   பாதை எங்கும் மலர்சோலை!

உருவ அமைப்பில் இளமைபொங்க
   உருத்தும் கண்ணால் மனம்பொங்க
கரு..மை விழியைக் காந்தமென்று
   கவிதை பாடும் காளையரை
அருகே கண்டும் அலட்சியமாய்
   அழகு கொடுத்தப் போதையுடன்
பருவ வயதில் நடந்துசென்ற
   பாதை எங்கும் மலர்சோலை!
  
அந்த நாளில் அமைந்தெல்லாம்
   அதுவே தானாய் முளைத்ததுவே!
இந்த நாளில் நினைப்பதெல்லாம்
   இயற்கை மாற்று செயலதுவே!
சொந்த ஊரின் சுடுமண்ணும்
   சொர்க்க பூமி எனஎண்ணும்!
வந்த இடத்தில் வளமிருந்தும்
   வளர்ந்த நினைவே மனம்திண்ணும்!

சின்ன வயது நிகழ்வெல்லாம்
   சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
இன்பம் பொங்கும் அந்நாளே
   இனிக்க வருமா எனஏங்கும்!
இன்றும் குழந்தை யாகிவிட
   எண்ணும் நெஞ்சம்! வராதெனினும்
அன்று நடந்த பாதையெல்லாம்
   அழகாய் மலர்ந்த சோலைகளே!

(25.05.2013 அன்று பிரான்சில் நடந்த திருக்குறளரங்க முற்றோதல் விழாவில் நான் எழுதி வாசித்தக் கவிதை)

அருணா செல்வம்.


31 கருத்துகள்:

  1. சின்ன வயது நிகழ்வெல்லாம்
    சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
    இன்பம் பொங்கும் அந்நாளே
    இனிக்க வருமா எனஏங்கும்!
    இன்றும் குழந்தை யாகிவிட
    எண்ணும் நெஞ்சம்! வராதெனினும்
    அன்று நடந்த பாதையெல்லாம்
    அழகாய் மலர்ந்த சோலைகளே!//

    அனைவருக்குள்ளும் அந்த அற்புத நாட்களை
    நினைத்து மகிழச் செய்து போகும் அற்புதக் கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. இன்றும் குழந்தை யாகிவிட
    எண்ணும் நெஞ்சம்! வராதெனினும்
    அன்று நடந்த பாதையெல்லாம்
    அழகாய் மலர்ந்த சோலைகளே!

    மலரும் நினைவுகள் மலர்ந்த கவிச்சோலை ..

    பாராட்டுக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  3. /// சொந்த ஊரின் சுடுமண்ணும்
    சொர்க்க பூமி எனஎண்ணும்!
    வந்த இடத்தில் வளமிருந்தும்
    வளர்ந்த நினைவே மனம்திண்ணும்! ///

    மிகவும் பிடித்த வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. (மலர்ச்சொலை!! --> மலர்ச்சோலை!!)

    தலைப்பில் மாற்றி விடலாமே... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா28 மே, 2013 அன்று PM 8:03

    அன்று நடந்த பாதையெல்லாம் அழகாய் மலர்ந்த சோலைகளே-திரும்பிப் பார்க்க வைத்த நினைவுகள்..

    பதிலளிநீக்கு
  6. //அன்று நடந்த பாதையெல்லாம்
    அழகாய் மலர்ந்த சோலைகளே!//

    அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    //(25.05.2013 அன்று பிரான்சில் நடந்த திருக்குறளரங்க முற்றோதல் விழாவில் நான் எழுதி வாசித்தக் கவிதை)
    //

    வாழ்த்துகள்.

    படத்தேர்வு பிரமாதம். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  7. \\சொந்த ஊரின் சுடுமண்ணும்
    சொர்க்க பூமி எனஎண்ணும்!
    வந்த இடத்தில் வளமிருந்தும்
    வளர்ந்த நினைவே மனம்திண்ணும்\\

    மனத்தை சுண்டியிழுத்த வரிகள்... அன்று நடந்த பாதைகளைத் திரும்பிப் பார்த்துப் பரவசப்படும் உள்ளத்தின் கவிதை அற்புதம் . பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  8. //சின்ன வயது நிகழ்வெல்லாம்
    சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
    இன்பம் பொங்கும் அந்நாளே
    இனிக்க வருமா எனஏங்கும்!
    //

    ஒவ்வொரு மனசுக்குள்ளயும் இந்த ஏக்கங்கள் நிச்சயம் இருக்கும்!

    த.ம-4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. அன்று நடந்த பாதையெல்லாம்
    அழகாய் மலர்ந்த சோலைகளே!
    இன்றும் கண்ணுக்குள்ளே தான் நிற்கின்றது என் தோழி
    அழகான எம் வீட்டு மலர்ச்சோலைகள் !!
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. திரும்பிப் பார்க்கும் நினைவுகள் மலர்ச்சோலைதான் .ரசிக்க வைத்த கவிதை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  11. அழகான நினைவுகளை எடுத்துச் சொன்ன கவிதை. பாராட்டுகள் அருணா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. //அன்று நடந்த பாதையெல்லாம்
    அழகாய் மலர்ந்த சோலைகளே!//

    ஆகா!உண்மைதான்.
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு
  13. // சின்ன வயது நிகழ்வெல்லாம்
    சித்தம் நினைத்துப் பார்த்தவுடன்
    இன்பம் பொங்கும் அந்நாளே
    இனிக்க வருமா எனஏங்கும்! //

    அழகாய்ச் சொன்னாய் எந்தோழி
    அந்தக் காலம் இனிவருமா???....
    உணர்வுகள் எரிக்குதே உள்ளமதை
    வாழ்வே வலியாகி வெறுமையாகி...

    அழகான மிகமிக அருமையான கவிதை!
    மனதை எங்கோ அள்ளிக்கொண்டு போய்விட்டீர்கள்!...
    வாழ்த்துகிறேன்!

    த ம. 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. அழகு கொடுத்தப் போதையுடன்
    பருவ வயதில் நடந்துசென்ற
    பாதை எங்கும் மலர்சோலை!///பழைய நினைவுகள் என்றுமே பசுமையானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  15. இத்தனை அடிகளில்
    எத்தனை நினைவூட்டல்கள்
    அத்தனையும் அழகாயிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு