வெள்ளி, 21 டிசம்பர், 2012

“சோ“வ்வைத் தெரியுமா...? (நகைச்சுவை நிகழ்வு) 
நட்புறவுகளுக்கு வணக்கம்.


    இது நடந்த நிகழ்ச்சி. உங்களுடன் பகிர்கிறேன். இது நடந்து மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். இதை நகைச்சுவைக்காகப் பகிர்கிறேன். யாரும் இதைத் தவறாகக் கொள்ள வேண்டாம்.    ஒரு நாள் நான் தொலைக்காட்சியில் (வேறு நிகழ்ச்சி எதுவும் இல்லாத்தால்) நடிகர் சோ அவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

   அப்பொழுது என் தோழி ஒருத்தி என் வீட்டிற்கு வந்தாள். அடிக்கடி வருகிறவள் தான். அன்று அவள் வேலைக்குப் போகும் வழியில் அவள் வாங்கி வந்த மாம்பழத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அப்படியே வேலைக்குப் போகப் போவதாக சொன்னாள். நானும் அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திரும்பி தொலைக் காட்சியை ஏதேச்சையாகப் பார்த்தாள். பார்த்தவள் “சோவ் ப்ரோகிராமெல்லாம் பார்ப்பியா நீ...?“ என்றாள் சற்றே முகத்தைச் சுறுக்கி.

    நானும் “வேற எதுவும் இல்லை... அதனால தான் இதைப் பார்க்கிறேன்“ என்றேன்.

    அவள் “இந்தச் சோவ்வ பார்க்கிறதை விட சும்மா இருக்கலாம்“ என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டாள்.

    நானும் அத்துடன் மறந்துவிட்டேன்.    அன்றிரவு அவள் கொடுத்தப் பழத்தைப் பார்த்த போது அந்த யோசனை வந்தது. இவளுக்கு எப்படி நடிகர் சோவைத் தெரியும்...?

    அந்தப் பெண் இந்தப் பிரான்சு தேசத்தில் பிறந்தவள். தமிழைப் படிக்கவில்லை என்றாலும் கொச்சையாகத்தான் பேச தெரியும். நடிகர் சோ அவர்களை நம்மூர்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாது.

    ஒரு சமயம் பழையப் படங்களில் பார்த்திருப்பாள் என்றாலும் பழைய நடிகர் சோ... இப்பொழுது இருப்பது போல் இல்லாமல் தலையில் விக்கெல்லாம் வைத்துக்கொண்டு முண்ட முண்ட கண்களுடன் துறுதுறு என்று இருப்பார். இப்பொழுது முழுமையாக வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவிற்கும் பழைய நடிகராக இருக்கும் பொழுது இருந்த சொவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    அப்படியிருக்க இவளுக்கு எப்படி பார்த்த உடனே சோவை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது?

    எனக்கு ஒரே குழப்பம். போன் செய்து கேட்டுவிடலாமா என்று நினைத்தால்... இந்நேரம் வேலைவிட்டு வந்தக் களைப்பில் தூங்கியிருப்பாள். சரி நாளை கேட்டுவிடுவது என்று மறுநாளுக்காக காத்திருந்தேன்.    மறுநாள் நேரே வேலைக்கே போன் பண்ணினேன். “என்ன அருணா?“ என்றாள்.

    “நேற்று நீ என் வீட்டிற்கு வந்த போது நான் ஒரு ப்ரோகிராம் பார்த்துக்கொண்டு இருந்தேன் இல்லையா...?“ கேட்டேன்.

    “ஆமாம்... சோவ் ப்ரோகிராம்.... அதுக்கென்ன இப்போ...?“ என்றாள்.

    அப்பாடா... அவளே வழிக்கு வந்துவிட்டளென்று நினைத்து... நானும்... “ஆமாம் ஆமாம்... அதே ப்ரோகிராம் தான். அந்தப் ப்ரோகிராமுல வந்தவர் “சோ“ன்னு உனக்கு எப்படித் தெரியும்?“ என்றேன்.

    “பெரிய அதிசயம் இது... அது தான் பார்த்ததும் நல்லா தெரியுதே...“ என்றாள்.

     என்னால் நம்பவே முடியலை. “நீ இதுக்கு முன்னால இவரைப் பார்த்திருக்கிறியா...?“ கேட்டேன்.

    “இல்லை... ஏன்..?“ என்றாள்.

    “அவர் நடித்தப் படமாவது பார்த்திருக்கிறீயா...?“

    “அவர் ஒரு நடிகரா...? நான் பார்த்ததில்லை“ என்றாள்.

    “பிறகெப்படி உனக்கு அவரை “சோ“ன்னு தெரிஞ்சது...?“

    “அருணா... நீ பார்க்கும் பொழுது உனக்கு அவர் சோவ்ன்னு தெரிஞ்சிதா...?“ கேட்டாள்.

    “ஆமாம் எனக்கு தெரிஞ்சிது நியாயம்... உனக்கு எப்படி தெரிஞ்சிது...? இது தான் என்னோட குழப்பமே“ என்றேன்.

   அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். “ஏன் உனக்குத் தெரியும் பொழுது எனக்குத் தெரியாதா...? என்ன கேள்வி இது? அருணா... இந்த மாதிரி வேலைக்கி டெலிபோன் பண்ணி விளையடாதே. எனக்கு நிறைய வேலை இருக்குது. வை போனை“ என்றாள் கோபமாக.

    நானும் குழப்பத்துடன் போனை வைத்துவிட்டேன். இருந்தாலும் என் குழப்பம் தீரவில்லை.

    மாலை என் கணவர் வந்ததும் என் முகவாட்டத்தின் காரணத்தைக் கேட்டார். நானும் நேற்றிலிருந்து இன்று வரை நடந்ததைச் சொன்னேன்.

   அனைத்தையும் கேட்டுவிட்டு சிரித்துவிட்டுச் சொன்னார். “அருணா நீ சொன்னதும் தப்பில்லை. அவள் சொன்னதும் தப்பில்லை. நீ அந்த மனிதரின் பெயரைச் சொன்னாய். அவள் அந்த மனிதரின் வழுக்கைத் தலையைச் சொன்னாள். பிரென்சு மொழியில் “சோவ்“ என்றால் வழுக்கைத் தலை என்று பொருள் என்றார்.

   புரிந்ததும் நானும் அவருடன் சேர்ந்து சிரித்தேன்.

அருணா செல்வம்.

   

41 கருத்துகள்:

 1. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரேவெரி சார்.

   நன்றி.

   நீக்கு
 2. ஹா ஹா ஹா.......
  நல்ல காமெடி...
  ஆமா பிரான்சில இருக்கிறீங்க... முக்கியமாக வார்த்தையை கற்றுக்கொள்ளாம விட்டிட்டீங்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆத்மா....
   நான் “தென்னை இளநீ“ இல்லை. வழுக்கையாக இருக்க.

   ஏதாவது நமக்கு வரும் போது தான் அதைப்பற்றி அறிய ஆசைப்படுவோம்.
   எனக்குத் தேவைப்படவில்லை. அதனால் தான் என்னவோ அந்த முக்கியமான(?) வார்த்தையைக் கற்று கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
   நன்றி ஆத்மா.

   நீக்கு
 3. வழுக்கைக்கு இன்னொரு பெயர் சோவ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழுக்கைக்கு இன்னொரு பெயர் இல்லைங்க ஐயா.

   தலை வழுக்கையைப் பிரென்சு மொழியில் ”சோவ்” (chauve) என்று சொல்கிறார்கள்.
   நன்றி கவியாழி ஐயா.

   நீக்கு
 4. அருணா அது சரி, வழுக்கைக்கு இப்படி ஒரு விளக்கமா? இருந்தாலும் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 5. ’சோ’ வைத் தெரியுமா எனத்தலைப்பிடாமல் ’சோ’வ்வைத் தெரியுமா என தலைப்பிட்டபோதே நான் சந்தேகப்பட்டேன். நல்ல நகைச்சுவை தான். பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

   (“சோ“ வைத் தெரியுமா என்று தலைப்பிட்டால்
   நான் சொல்லவந்த விடயத்திற்கும் தலைப்பு மாறுபட்டு விடும் இல்லைங்களா...? ஆனாலும் நீங்கள் கண்டுபிடித்து விடுகிறீர்கள்)

   நீக்கு
 6. //அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். “ஏன் உனக்குத் தெரியும் பொழுது எனக்குத் தெரியாதா...? என்ன கேள்வி இது? அருணா... இந்த மாதிரி வேலைக்கி டெலிபோன் பண்ணி விளையடாதே. எனக்கு நிறைய வேலை இருக்குது. வை போனை“ என்றாள் கோபமாக.

  நானும் குழப்பத்துடன் போனை வைத்துவிட்டேன். இருந்தாலும் என் குழப்பம் தீரவில்லை.//

  நகைச்சுவையின் உச்சக்கட்டம் இங்கு தான் உள்ளது. ;)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது முறையாகப் படித்தவிட்டு
   அதற்காக இரண்டாவது முறையாகவும் வந்து
   தாங்கள் ரசித்ததை மகிழ்ந்து பின்னோட்டமிட்டமைக்கு
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 7. நல்ல நகைச்சுவை.... ”சோவ்’ வழுக்கையர்களை குறிப்பிட இன்னும் ஒரு சொல் கிடைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேலை...
   நம் வலையுகத்தில் அப்படி யாரும் “சோவ்வா“க இல்லை என்று
   நினைக்கிறேன்.
   நன்றி நாகராஜ் ஐயா.

   நீக்கு
 8. ஹி ஹி ஹி ஹி...நல்ல காமெடிதான்! :-))

  பதிலளிநீக்கு
 9. அருமையான நகைச்சுவைப் பதிவு. பாராட்டுக்கள்...அருணா..

  பதிலளிநீக்கு

 10. அருமை! அருணா சு(சோ)வை அருமை!

  பதிலளிநீக்கு
 11. நல்ல காமெடி! ஆனாலும் க்ளைமேக்ஸை கொஞ்சம் ஊகித்து விட்டேன்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் பெரிய ஆளுங்க சுரேஷ் ஐயா.
   நான் எழுத நினைப்பதை எல்லாம் கண்டுபிடித்து விடுகிறீர்கள்.
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 13. ஒரு வேளை இவரைப்பார்த்து ஒரு பிரெஞ்சுக்காரார் யார் இந்த "சோவ்" என்று கேட்டு இருக்கலாம்...
  அப்ப இது காரணப் பெயரா?

  பதிலளிநீக்கு
 14. சொட்டத்தலைகள பார்த்தா உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷமா ? இது மாதிரி வேறு ஏதாவது சொட்டத்தலை குட்டி கதை வச்சிருக்கிங்களா ? கண்டிப்பா வச்சிருப்பிங்க !!! சும்மா சொல்லுங்கக்கா ...

  அட நாந்தாங்க ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாபகம் வரும் போதெல்லாம்
   கண்டிப்பாகச் சொல்கிறேன் தம்பி.
   நன்றிப்பா.

   நீக்கு
 15. ஹஹா நல்ல காமெடி ஒரு வார்த்தை தெரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 16. சோ நடிகராக தற்போது தெரியாமலிருக்கலாம், ஆனால் ஒரு பத்திரிகையாளராக இன்றும் தமிழகத்தில் அவர் பிரபலம்தான். 'சோவ்' என்றால் வழுக்கை!! ஹா.... ஹா.. வேடிக்கையாக இருக்கிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்ங்க. அவர் தமிழகத்தில் பிரபலம் தான்.
   ஆனால் இங்கு (பிரான்சு) அவ்வளவாகத் தெரியாது இல்லைங்களா...?

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 17. ஐயா.....சாமி எங்கயோ போய்ட்டீங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஹேமா.

   நீக்கு
 18. அன்பின் அருணா செல்வம் - அழகான் நகைச்சுவை - நகைச்சுவையின் உச்சம் - சோவினிற்கு ஒரு மின்னஞ்சல் - இச்சுட்டியுடன் அனுப்புக - மிக மிக இரசிப்பார் - சோவ் @ சோ வாழ்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு