திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மோதல் கூட மோகம்தான்!! (கவிதை)



அறமும் அன்பும் இல்வாழ்வில்
    அமையும் அழகை எடுத்துரைத்தார்!
புறமும் பொறையும் பொதிந்துவிடப்
    புகழைப் பெறவே வழிசொன்னார்!
பிறனில் விழையாத் தன்மையினால்
    பெருகும் பேற்றை வகுத்திட்டார்!
துறவும் தவமும் துறந்தோர்க்கே
    பிறவும் சொன்னார் அறப்பாலில்!!

தெரிந்து தெளிதல் என்னென்றும்
    தெளிவு என்ப(து) என்னென்றும்
அறிவாம் உடைமை என்னென்றும்
    அரணும் என்ப(து) என்னென்றும்
குறிப்பும் அறிதல் என்னென்றும்
    குடிமைப் பெருமை என்னென்றும்
பெரியார் துணையும் வேண்டுமென்றும்
    பிரித்து உரைத்தார் பொருட்பாவில்!

மோதல் கூடக் காதலிலே
    மோகம் என்று மொழிந்திட்டார்!
மாதர் கொண்ட ஆசைகளை
    மனத்தில் கொண்டு வரைந்திட்டார்!
பாதல் படைக்கும் பாவலர்கள்
    படித்தால் கவிதை வளம்பெருகும்!
காதல் சிறப்பைக் கருத்துடனே
    கவிதை படைத்தார் இன்பத்தில்!!

அருளாய் நெறியாய் அமுதமாய்
    அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
கருத்தாய் அமைந்த கவியமுதைக்
    கருத்தில் கொண்டு படித்திட்டால்
அருளும் பொருளும் என்னென்றும்
   அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
உருளும் மனமும் பொய்யென்றும்
    உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!

அருணா செல்வம்

(தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் என்னைத் திட்டாதீர்கள். இப்படியெல்லாம் தலைப்புப் போட்டால் தான் என் வலையைத் திறக்கிறார்கள். அதனால் தான்! பெரியவர்கள் மன்னிக்கணும்)

91 கருத்துகள்:

  1. /// அருளும் பொருளும் என்னென்றும்
    அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
    உருளும் மனமும் பொய்யென்றும்
    உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!! ////

    உயர்வான கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... நன்றி...


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நான் நிச்சயம் உங்கள் பதிவைப் படிப்பேன் ஐயா. இன்னும் நிறைய நண்பர்களின் பதிவை இன்னும் நான் படிக்கவில்லை. வீட்டில் விருந்தாளிகள் இருப்பதால்...

      மீண்டும் நன்றி ஐயா.

      நீக்கு
  2. எனது முந்தைய பின்னூட்டத்தை
    பதிவில் இணைக்கவேண்டாம்
    அது தனிப்பட்ட முறையில்
    தங்களுக்கு எழுதியது
    நான் தங்கள் படைப்புகளின் பரம விசிறி
    கொஞ்சம் அதிகம் உரிமை
    எடுத்துக் கொண்டதாகக் கருதினால்
    மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் இதழை விரித்தாலே
      பூவின் மணத்தை நுகர்ந்திடலாம்!
      ஈக்கள் தேனை உறிஞ்சாலே
      இனிக்கும் தேனோ நமக்குதவும்!
      தேக்கம் கொண்ட என்மனத்தைத்
      தெளிவாய் எனக்கு புரியவைத்தீர்!
      ஊக்கம் கொடுக்கும் உம்கருத்து!
      உயர்வாய் எண்ணி வணங்குகிறேன்!

      நீக்கு
  3. அதிகாரங்களின் பெயர்களையும் இணைத்து அழகான கவிதை பிறந்திருக்கிறது.தலைப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் தங்கள் கவிதை நன்றாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.மரபுக் கவிதை எழுதுபவர் மிகச் சிலரே. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

      நீக்கு
  4. எனக்கு என்ன கருத்துச் சொல்வதென்றே புரியவில்லை... இம்முறை கவிதை எனக்கு புரிவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது கிட்னி வீக்காயிடுச்சோ தெரியல்ல ...எதுக்கும் மறுபடியும் வாசித்து புரிய முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி...

      கிட்னி வீக்காகி இருந்தாலும் பறந்து வந்து என் கவிதையைப் படித்து கருத்திட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி்.
      புரியாமல் படித்து ஆகா... ஓகோ,.. வென்று பாராட்டாமல் உண்மையைச் சொன்னதற்காக மகிழ்கிறேன்.

      மரபுக் கவிதை கொஞ்சம் கடினம் தான் சிட்டுக்குருவி... எனக்கும் மரபைப் படிப்பதற்கு முன்பு எதற்காக இப்படியெல்லாம் கஸ்டப்பட்டு எழுதனும்... படிக்கனும் என்றே தோன்றியது. ஆனால் கற்றுக்கொண்ட பிறகு புரிந்தது.

      என்னைப் பொருத்தவரை மரபோ... புதியதோ... எதுவாக இருந்தாலும் நம் அன்னைத் தமிழில் படிப்பதும் எழுதுவதும் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன்,

      கவலைப்படாதீர்கள். மரபை இன்னும் எளிய முறையில் எழுதுகிறேன். நன்றிங்க சிட்டு.


      நீக்கு
  5. அன்பின் அருணா

    கவிதை அருமை - குறளாசான் பற்றிய கவிதை அருமை - முப்பாலைப் பற்றிய மூன்று பத்திகளூம் படிக்கப் படிக்க இன்பம் - எளிய சொற்கள் - நடை நன்று - அமுதாமாய் என்பது அமுதமாய் என இருக்க வேண்டுமோ ? இனிய கவிதையினைப் படித்து வருகையிலே சட்டென தட்டச்சுப் பிழை கண்ணை உறுத்துகிறதே ..... பிழை தவிர்க்க ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சீனா ஐயா.

      நீங்கள் என் வலைக்குள் வந்து படித்து நிறைய பதிவுகளுக்கு நிறைவாக கருத்திட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றிங்க ஐயா.

      நீங்கள் சுட்டிக்காட்டிய பிழையைத் திருத்திவிட்டேன். நன்றிங்க ஐயா. முடிந்தவரையில் இனி பிழைகள் வராமல் கவனித்து எழுதுகிறேன் ஐயா. நன்றிங்க.

      நீக்கு
  6. கவிதைகளை விமரிக்கும் அளவிற்கு நான் கவித்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவன் இல்லை! என்னால் கவிதை பிடித்திருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடிகிறது :)

    நல்ல கவிதை பிடித்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே... கவிதை பிடித்திருக்கிறது என்று சொன்னதே ஒரு விமர்சனம் தானே..!!

      இது போதுங்க எனக்கு. (இசைக்குக் கூட வடிமம் இல்லை. ஆனால் காதல் அதன் இனிமையை உணர்கிறோம் இல்லையா... அதுவோர் இன்பம் இல்லைங்களா...)

      நன்றிங்க நண்பரே!

      நீக்கு
    2. காதல் என்று தாவறாக எழுதிவிட்டேக் “காதால்” என்று மாற்றி படியுங்கள். நன்றி.

      நீக்கு
  7. உருளும் மனத்தை உருப்பட வைக்கும் அமுத வரிகளின் பெருமை பகன்ற அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

    தமிழ் படிக்கப் படிக்கத் திகட்டா அற்புதம். முப்பாலின் அதிகாரங்களையும் அழகாய்ச் சுட்டிய வரிகள் அருமை.

    பாதல் பொருள் விளங்கவில்லை. விளக்கினால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா..

      உங்களின் வாழ்த்திற்கு
      மிக்க நன்றிங்க.

      பாதல் -
      பாக்கள் படைக்கும் பாவலர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் எதுகைக்காக பாதல் என்று எழுதினேன்.
      “பா“ என்றாலே பாட்டை குறிக்கும். “தல்“ என்றவிகுதி பாடுதல் என்பதின் சுறுக்கம் தான். நீங்கள் அறியாதது இல்லை அக்கா.

      நீக்கு
  8. எண்ணும் எழுத்தும் கண்ணாயின் கவிதையின்
    வளமும் நலமும் சிறந்திடுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக சசிகலா. நல்ல அருமையான கருத்துக்கு மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  9. வணக்கம் நண்பரே.

    உங்களின் வலைச்சரத்தைப் படித்துவிட்டேன் நண்பரே.
    தாங்கள் எனக்குக் கொடுத்த நல்ல அடையாளத்திற்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. கவிதை அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    //தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் என்னைத் திட்டாதீர்கள். இப்படியெல்லாம் தலைப்புப் போட்டால் தான் என் வலையைத் திறக்கிறார்கள். அதனால் தான்! //

    ;))))) ஆஹா .... நியாயம் தான்.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் முதல் வருகைக்கும்
    அழகிய பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. கவிதை சிறப்பு.நல்வாழ்த்து.
    பாதல் என்ற சொல்லிற்கு எனது
    இரண்டு அகராதியிலும் கருத்து
    அதாவது பாதல் என்ற சொல் இல்லை.
    அதனால் கருத்து புரியவில்லை...சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோவைகவி!

      வாழ்த்துக்கு வணங்குகிறேன். நன்றி.

      “பாதல்“ என்பது “பாடுதல்“ என்றே இவ்விடத்தில் குறித்து எழுதினேன். பாடுதல் என்பது விளச்சீராகி விடுகிறது. அங்கே காய் சீர்தான் வரவேண்டும். தொல்காப்பிய விதிப்படி பாடலின் அழகிற்காக ஓர் எழுத்தைக் குறைத்தும் எழுதலாம் சேர்த்தும் எழுதலாம்.
      உதாரணமாக ஓதுதல் -- ஓதல்
      நாடுதல்--- நாடல்

      இதில் மேற்கொண்டு விளக்கவேண்டுமெனில் நீங்கள் எழுதினால் நான் விரிவாக விளக்குகிறேன்.
      நன்றி கவிதாயினி.

      நீக்கு
  13. அருமையான கவிதை வாழ்த்துக்கள் நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  14. மோதல் கூடக் காதலிலே
    மோகம் என்று மொழிந்திட்டார்!// நிச்சயம் மோதலும் காதல்தான். அதன்பின்தான் காதல் சிறப்பாக உள்ளது. ஒரே வார்த்தையில் சொன்னால் அழகு..

    பதிலளிநீக்கு
  15. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி விச்சு ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நன்று.
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  18. அருளாய் நெறியாய் அமுதமாய்
    அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
    கருத்தாய் அமைந்த கவியமுதைக்
    கருத்தில் கொண்டு படித்திட்டால்
    அருளும் பொருளும் என்னென்றும்
    அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
    உருளும் மனமும் பொய்யென்றும்
    உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!

    மிகவும் நல்லாக இருக்கு வாழ்த்துகள். நானும் இன்றுதான் உங்க பக்கம் வந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி லட்சுமி அம்மா.

      (என் அம்மாவின் பெயரும் லட்சுமி தான்.)

      நீக்கு
  19. திருக்குறளை வைத்தே கவிதையா? கலக்குறீங்க சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  20. வள்ளுவப் பேராசானின் மிகசிறந்த தத்துவங்களை உள்ளடக்கி முப்பாலையும் தந்து சிறப்பான வரிகளில் பாராட்டுகள் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  21. தீந்தமிழால் ஓர் பா மாலை நான்
    வணக்கும் அந்த நாயகனுக்கே !...
    தெரிந்து தெளிதல் என்னென்றும்
    தெளிவு என்ப(து) என்னென்றும்
    அறிவாம் உடைமை என்னென்றும்
    அரணும் என்ப(து) என்னென்றும்
    குறிப்பும் அறிதல் என்னென்றும்
    குடிமைப் பெருமை என்னென்றும்
    பெரியார் துணையும் வேண்டுமென்றும்
    பிரித்து உரைத்தார் பொருட்பாவில்!

    அருமை !..அருமை !..ஒவ்வொருவரிகளும்
    மனதில் நதிபோல இதமாக வருடிச் சென்றது .
    வாழ்த்துக்கள் தோழி .மேலும் மேலும் தங்கள்
    கவிதை வளம்பெற ............!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அம்பாளடியாள் அவர்களே.

      நீக்கு
  22. நல்ல கவிதையுங்கோ - ஆனா நான் தலைப்பைப் பார்த்து வரவில்லை :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மணி ஐயா.

      நீக்கு
  23. mudal murai ungal kavidaiya padithan nandraga ullathu dinamum varuvan ungal kavithaikalai vasika avaludan....

    பதிலளிநீக்கு
  24. ungal kavithaikalai mudhal muraiyaga padithan arumaiyanaa kavithaigal sinthaniya thundum vagaiyel ullathu dinamum vaaruvan ungal kavidhai kalai vasika....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலா அருணா.

      உங்கள் முதல்வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  25. தங்களது முதல் வரவிற்கு நன்றி! எனதுபத்மாவின் தாமரை மதுரை-ஆற்றைக் காணோம்.-ல் உங்களுக்கு பூங்காகொத்து காத்திருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும்
      மலர்கொத்து கொடுத்து மகிழ்வித்தமைக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  26. மூன்று தமிழிலும்.தோன்றியதே உன்னிடம்
    மூன்று பாலும் வள்ளுவர் தன்னிடம்
    தோன்றும் கருத்துக்கள் துணிவுடன்
    சான்று கொண்டு சாற்றிய அருணா
    போன்று கவிகள் புகழும்
    ஊன்று வரிகள் ஓடும் நதிபோல் ,
    யாண்டும் படித்தேன் .நன்றி
    மீண்டும் வருவேன் தமிழால் வாழத்த
    அன்புடன் கருப்பசாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      உங்களின் இரவின் புன்னகை மின்வலையின் முகவரியைத் தயவு செய்து தெரிவியுங்கள்.

      நீக்கு
    2. நண்பர் அருணா செல்வத்திற்கு, தாங்கள் வழங்கிய கருத்துக்கு இரவின் புன்னகையில் தெளிவாக பதில் வழங்கிவிட்டேன் என நினைக்கிறேன். இரவின் புன்னகையின் இரு ஆசிரியர்களில் அப்பா கருப்பசாமி துரைசாமி அய்யாவும் ஒருவர் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

      இரவின் புன்னகையின் முகவரி

      http://iravinpunnagai.blogspot.in

      நீக்கு
  27. Dear Aruna sir I ,firstly thanks for your reply to my post for GANDHIAN THOUGHT in IRAVINPUNNAGAI.I appreciate your kavikal. very nice .But I cant write like your poetical lines .Anyhow I tried to learn .,if there is any wrong on my reply plz point out I will make rectify thanks .by DK ..(D.Karuppasamy.}

    பதிலளிநீக்கு
  28. சொல்கிற கருத்தை திருக்குறளில் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்தானே,இருக்கிறது தங்களது பதிவில் நன்றி,வணக்கம்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      (ஆமாம்.... ஏன் எல்லாருமே இந்த ஒரு பதிவிற்கு மட்டும் அதிகமாக வந்து கருத்திடுகிறார்கள்...?
      என் வலைக்குள் வரும் பொழுது இந்தப் பதிவு மட்டும் தான் தெரிகிறதா...? யாராவது வருபவர்கள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்)

      நீக்கு
  29. நண்பா,வள்ளுவர் என்றால் அனைவரும் உடன் படிக்காரார்கள்.கவிதை இசை, அசை, துள்ளல் எல்லாம் உள்ளது.மிக்க நன்றி
    உங்kaளுக்கு ,நன்றி சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன் .திரும்பி வந்துவிட்டது,. பரவாயில்லை.பதிவு மூலம் பதில் சொல்லி விட்டர்கள்.உங்கள் மற்ற கவிக்கும் பதில் வரைவேன் விரைவில்
    அன்புடைத் நண்பா கருப்பசாமி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நண்பா,வள்ளுவர் என்றால் அனைவரும் உடன் படிக்காரார்கள்.கவிதை இசை, அசை, துள்ளல் எல்லாம் உள்ளது.மிக்க நன்றி“

      தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

      தங்களின் வருகைக்கும் நிறைய இடுகைகளைப் படித்துவிட்டு
      உடனே எழுதிய கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  30. //தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் என்னைத் திட்டாதீர்கள். இப்படியெல்லாம் தலைப்புப் போட்டால் தான் என் வலையைத் திறக்கிறார்கள். அதனால் தான்! பெரியவர்கள் மன்னிக்கணும்//

    அரசியல்ல குதிக்க பயிற்சியோ..?


    ரசிக்கும்பட்டி இருக்கிறது,,,

    உங்கள் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கான பதிலை வாசிக்கும் போதும் உங்கள் கவித்திறனுடன் சேர்ந்து எழுத்தாழுமையும் தெரிகிறது...

    முயற்சித்தால் கவிதைகளுடன் சேர்த்து நல்ல பதிவுகளையும் தருவீர்கள்,,

    தொடருங்கள் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தொழிற்களம்.

      நீக்கு
  31. நான் இந்த பதிவு வெளிவந்தவுடன் வெளியிட்ட கருத்து இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் நண்பா...

    Spamல் உள்ளதா என்று பார்க்கவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கனும்.

      நான் தான் ஸ்பேம் பார்க்கவில்லை.
      நன்றி.

      நீக்கு
  32. மரபு கவிதை வடிக்க எங்களுக்கும் கற்றுத்தாருங்களேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      மரபு உண்மையில் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.
      நவம்பர் 15 க்கு மேல் என் ஆசிரியர் கவிஞர் கி. பாரதி தாசன் அவர்கள் தமிழ் இலக்கணத்துடன் மரபு இலக்கணத்தையும் தமது வலையின் மூலம் கற்றுத் தரவிருக்கிறார்.

      காத்திருப்போம். நன்றி நண்பரே.

      நீக்கு
  33. வள்ளுவர் பற்றி எழுதிய வண்ணமயமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  34. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  35. கருத்தும் மரபும் கலந்த கவிதை. அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாரதி ஐயா.

      நீக்கு
  36. இது போன்றத் தமிழினை, தமிழின் இனிமையினை சுவைப்பதே அறிதாகிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள், இது போன்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி செயசந்திரன்.

      நீக்கு
  37. அருளும் பொருளும் என்னென்றும்
    அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்
    உருளும் மனமும் பொய்யென்றும்
    உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!
    // அருமையாக உள்ளது உங்கள் செய்யுள் நடை! பகிர்விற்கு நன்றி//

    பதிலளிநீக்கு
  38. நான் தலைப்பைக்கண்டு வரவில்லை தங்களின் பெயரைகண்டு வந்தேன்.

    மரபுக்கவிதையில் வடித்துள்ளீர்கள் வார்த்தைகள்
    மோகமோ சோகமோ எழுத்துகளின் பிடியில் அதனதன் திறமையே தனித்திறமைகளின் வரம்தான்..

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  39. நல்ல கவிதை நயமான கவிதை நல்லோர்கள் எல்லோரும் விரும்பும் கவிதை நன்று.எழுத்து பிழை இருப்பது தவிர்க்கப்பட வேண்டியதுதான் ஆனாலும் சமயங்களில் வருது என்ன செய்ய
    இதையும் படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவியாழி ஐயா.

      எழுத்துப்பிழை இருக்கிறதா...? தேடித் திருத்துகிறேன்.
      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  40. கவிதை அருமை....இதுபோன்ற மரபுக் கவிதைகளைத் தற்காலத்தில் வாசிக்கக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்...
    தொடர்ந்து இதைப் போன்ற கவிதைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விரும்புகிறேன்... என் போன்ற சிறியேனின் கவிதைகளையும் விமர்சனம் செய்தால் சந்தோஷப்படுவேன்...
    www.moongilvanam.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  41. நானும் தங்கள் தளத்துடன் இணைந்துகொண்டேன். கொஞ்சநாள் வலைப்பூ பக்கம் வராமல் இருந்தேன்.மரபுக்கவிதைகள் வாசித்து புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். நவீனத்துவ கவிதைகளும் அந்தவழியே. இயல்பான நடையில் உள்ள கவிதைகள் கவிதை மாதிரி தெரியாவிட்டாலும் எல்லோருக்கும் புரியும். உங்கள் திறமை கண்டு வியக்கிறேன். தலைப்பும் நன்றாகத்தான் உள்ளது. திறமையானவர்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு. சிலபேர் நம் தளம் படித்தாலே போதும். அது நிச்சயம் பலபேருக்கு சென்றடையும். //மோதல் கூடக் காதலிலே
    மோகம் என்று மொழிந்திட்டார்!
    மாதர் கொண்ட ஆசைகளை
    மனத்தில் கொண்டு வரைந்திட்டார்!// ம்ம்... அருமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விச்சு அவர்களுக்கு வணக்கம்.
      நான் மரபுக்கவிதையை மிக மிக எளிய முறையில் எழுதுவதையே விரும்புகிறேன். அதனால் அது சாதாரணக் கவிதைப் போல் உள்ளதால் அனைவரும் விரும்பிப் படிக்கிறார்கள்.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  42. அருளாய் நெறியாய் அமுதமாய்
    அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்
    கருத்தாய் அமைந்த கவியமுதைக்
    கருத்தில் கொண்டு படித்திட்டால்

    அழகான வரிகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  43. அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்
    அனைத்தும் நிறைவாய் சொன்னீர்கள்
    உருக்கம் கொண்டு ஒப்புவிக்க
    உயிர்ப்பால் இட்டு எழுதினீரோ
    போற்றுதர்க் கரிய பொக்கிசத்தை
    பொலிவாய் சொன்ன கவிபூவே
    ஏற்றம்கண்டு இவ்வுலகில்
    என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்
    .......................................
    இன்றுமுதல் நானும் ஒரு வாசகனே

    பதிலளிநீக்கு
  44. அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்
    அனைத்தும் நிறைவாய் சொன்னீர்கள்
    உருக்கம் கொண்டு ஒப்புவிக்க
    உயிர்ப்பால் இட்டு எழுதினீரோ
    போற்றுதர்க் கரிய பொக்கிசத்தை
    பொலிவாய் சொன்ன கவிபூவே
    ஏற்றம்கண்டு இவ்வுலகில்
    என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன்
    .......................................
    இன்றுமுதல் நானும் ஒரு வாசகனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீராளன் தந்த சிறப்பான பாடலுக்கும்
      பாராளும் நற்றமிழ் பா..மனமும் - பாராட்டும்!
      வாழ்த்துகின்ற வாசகனின் வார்த்தைகளை என்தலை
      தாழ்தென்றும் ஏற்கும் தழைத்து!

      நீக்கு
  45. அய்யன் வள்ளுவனுக்கு அருமையான பாமாலை
    அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  46. மோதலால் காதலும் பிறக்கிறது சண்டையும் வருகிறது சரித்திரமும் படைக்கிறது.அதனால் நமக்கும் கவிதையும் பிறக்கிறது

    பதிலளிநீக்கு
  47. வணக்கம்
    அருணா செல்வம்

    வள்ளுவனின் கருத்துக்கு அமைய அழகான கவிதை மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  48. நல்ல கவிதை பிடித்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  49. அடப்பாவமே வள்ளுவருக்கே விளம்பரமா?
    கவிதை அருமை.
    துள்ளல் நடை சொக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு