திங்கள், 22 அக்டோபர், 2012

நாற்பது வயதில் நாய் குணம்!! (சிறு விளக்கம்)





   பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள் “அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது இல்லையா...? அதனால் நாய் குணம் வந்து விட்டது... அப்படித்தான் இருப்பார்கள்...என்று சொல்லி மேலும் அவர்களை கோபப் படுத்துவார்கள்... இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது தான்.
   ஆனால் இதில் உண்மையும் இருக்கிறது தான். அதனால் தான் இந்தப் பழமொழியை நம் முன்னோர்கள் காரணமாகவே சொல்லி இருக்கிறார்கள் என்பது இந்த விளக்கத்தைப் படித்தால் உங்களுக்கும் விளங்கும்.

பொதுவாக நாயின் குணங்கள் என்று பார்த்தால்
- நாய் நன்றி உள்ளது.
- நாய் வீட்டைக் காக்கும்.
- நாய் அன்பானது... இப்படி நிறைய நல்ல விசயங்கள் நாயிடம் இருக்கிறது.

   ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும் இருக்கிறது. அது என்ன வென்றால்... நாய் தான் உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால் அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து) திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து உண்ணும். இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லையென்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.

    அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத் தோன்றுமாம். அப்படி கிடைக்காத பச்சத்தில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருப்பார்களாம்.
   அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்படுகிறது.

    இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒருசிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம் நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.
இதுவும் என் தாத்தா சொன்னது தான்.
நன்றி.


அருணா செல்வம்.

15 கருத்துகள்:

  1. அடியாத்தி வீட்டுல என்னையும் சிடு சிடு வென இருக்கிறாய் என்று திட்டுவாங்க.
    அப்போ எனக்கும் 40 ஆகிடுச்சா.....
    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி...

      நாற்பது வயதிற்கு மேல் தான் சிடுசிடு என்று இருக்க வேண்டும்...

      இல்லையென்றால் சீக்கிரமாக வயதாகி விடும்.
      இதுவும் என் தாத்தா தான் சொன்னார்.

      நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு
  2. தாத்தா அருமையாக சொல்லி உள்ளார்...

    நன்றி...
    tm2

    பதிலளிநீக்கு
  3. உங்க தாத்தா பெரிய ஆளுதான் போல. நல்ல அழகழகான தத்துவங்களெல்லாம் விளக்கத்தோட சொல்லிக்கொடுத்திருக்காரே. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் என் தாத்தா எனக்கு பெரிய
      ஆளாகத் தான் தெரிந்தார் சார்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துரைடேனியல் சார்.

      நீக்கு
  4. வணக்கம், தங்களின் பதிவு அருமை.இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் உங்க தாத்தா, எதிர்பார்கிறோம் நன்றி... அப்துல் தையுப், Lacourneuve,France

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அப்துல் ஐயா.

      நீக்கு
  5. என்னமோ சொல்கிறீர்கள்.
    சரியோ தவறோ தெரியவில்லை.
    .அதையும் தாண்டி வந்தாச்சு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் தாண்டவில்லை...
      அதனால் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது.
      எதையும் அனுபவித்தால் தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

      நன்றி கோவைக்கவி அவர்களே.

      நீக்கு
  6. இது தானா காரணம்...

    அறியாத விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆயிஷா பரூக்.

      நீக்கு
  7. 40 yr old தாத்தா??? -:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது வயது என்பது ஓல்டா....?

      எனக்கும் தெரியவில்லை...
      (நாற்பது வயது ஆனவர்களிடம் கேட்டுவிட்டு வந்து சொல்கிறேன்.. யாராவது இருக்கிறீர்களா...?)

      நன்றி ரெவெரி சார்.

      நீக்கு