செவ்வாய், 2 அக்டோபர், 2012

என் பாடலுக்கு.. என் கமண்ட்ஸ்!! (நகைச்சுவை)

என் நன்றி!

 


நன்றி மறந்த மனிதனுக்கு
   நாய்தான் அறிவு புகட்டிடுமே!
என்றோ இந்த நிலைமாறும்!
   யாரும் இல்லை எடுத்துரைக்க!
இன்றே நானும் புரிந்துகொண்டேன்!
   இனிய தமிழில் நானுரைத்தேன்
நன்றி என்று! வாலில்லை
   நாய்போல் ஆட்டிச் சொல்வதற்கே!

 (நேற்று நான் எழுதிய “வாலாட்டும் நாய்“ என்ற கவிதைக்கு நானே எனக்கு எழுதிய “கமெண்ட்ஸ்“ இது. சும்மா நகைச்சுவைக்காக பதிவிட்டேன்.)
---------------------------------------------------------

சந்திர வம்சம் – பத்மா அவர்கள் இன்று எனக்கு கொடுத்த மலர்கொத்து இது.




பத்மா அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
அருணா செல்வம்.

26 கருத்துகள்:

  1. விருதுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    நன்றிக் கவிதை வித்தியாசமாகவும்
    அருமையாகவும் இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அது விருதெல்லாம் இல்லை.
      நான் முதன் முதலாக அவர்களின் பதிவைப் படித்து கருத்திட்டிருந்தேன்.
      அதற்காக பத்மா அவர்கள் எனக்கு கொடுத்த வதங்காத மலர் கொத்து.
      நன்றி ரமணி ஐயா.

      நீக்கு
  2. அதோ இருக்கவே இருக்கிறது வால் தோழி
    பெண்களுக்காக இறைவன் படைத்த கூந்தல் :)
    சும்மா சும்மா: )))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ... அந்தக் கூந்தலைக் கூட வெட்டிவிடுவதைத் தான் நான் இதற்கு முன் பதிவிட்டேன் தோழி.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்களுக்கு நீங்களே கமண்ட் சொல்லிக்கிறீங்களா..
    நல்லா சொல்லியிருக்கிறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சும்மா....

      நன்றி நாயிடம் தான் இருக்கிறது என்று நான் எழுதினாலும்...
      நாயிக்கு வாய் இல்லை. ஆனால் வால் இருக்கிறது. அதனால் அதை ஆட்டிக்காட்டி நன்றியைக் காட்டுகிறது.
      ஆனால் நம்மிடம் வால் இல்லை. வாயால் தான் நன்றியைச் சொல்ல முடியும் என்று எழுதினேன்.

      தவறா சிட்டுக்குருவி...

      நீக்கு
  4. மலர்க்கொத்துக்கு வாழ்த்துக்கள்.
    இப்படிக்கூட ஒரு பதிவு போடலாமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி.

      புதுசா யோசிச்சேன்.... இதுவும் நல்லா தான் போனது.
      நன்றி.

      நீக்கு
  5. உங்களுக்கு நீங்கள் கூறியுள்ள கமெண்ட் அருமையாக உள்ளது...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. நான் கொடுத்த மலர்க்கொத்தில் இருந்து பிறந்த கவிதைக்கு நன்றி.
    [மேலும் பார்க்க: கல்கியில் நான், மற்றும் மனிதனும் தெய்வமாகலாம்] வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரவம்சம் திருமதி பத்மா அவர்கள் கொடுத்துள்ள பூங்கொத்திற்குப் பாராட்டுக்கள்.

      [உங்களுக்கு மட்டுமே அன்புடன் கொடுத்திருக்காங்க பாருங்க ;) .. நானும் எவ்வளவு நாட்களாக அவங்களுக்குப் பின்ன்னூடம் கொடுத்து வருகிறேன், எனக்குத்தரவே இல்லை. பாருங்கோ;( ]

      நாய்க்கவிதை வால்கவிதை நன்றிக்கவிதை நல்லாயிருக்கு.

      பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

      நீக்கு
  7. என்னாச்சு, நீண்ட நாட்களாக ஆளைக் காணோம்!!! அடுத்த பதிவு எப்போது வரும்!!!

    பதிலளிநீக்கு