செவ்வாய், 9 அக்டோபர், 2012

வாழ்க்கை வலைகள்..!! (கவிதை)




 துளைகள் கொண்ட வலைகொண்டு
    
தூங்காக் கடல்மேல் சென்றிடுவார்!
களைப்புக் காணா மனத்துடனே
    
காத்தி ருந்து வலைவிரிப்பார்!
வளைக்கை அணிந்த பெண்ணவளின்
    
வளைக்கும் கண்போல் மீன்கிடைக்கத்
திளைக்கும் நெஞ்சில் தீமையின்றித்
    
திரும்பி வருவார் மீனவர்தாம்!

நிலையே இல்லா உலகத்தில்
    
நிலையாய் என்றும் நிற்பதற்கே
மலைபோல் உயர்ந்த கருவமைய
    
மனத்தை வலையாய் விரித்திடுவார்!
இலையே ஏதும் இவ்வுலகில்
    
எல்லாம் நம்மின் எண்ணமென்றும்
அலைபோல் கவிதை சுரந்துவர
    
அமிர்தாய்த் தருவார் கவிஞர்தாம்!

சிலைபோல் இருக்கும் பெண்களைத்தம்
    
செழிக்கும் வாழ்வில் சிறைவைக்கக்
கலைகள் கலந்த மொழிபேசிக்
    
காதல் வலையை விரித்திடுவார்!
விலையே அற்ற பெண்ணன்பு
    
விரும்பும் வகையில் கிடைத்துவிட்டால்
தலையில் சற்றுக் கனமேறத்
    
தாவிக் குதிப்பார் காளையர்தாம்!
 
கொலையே செய்து இருந்தாலும்
    
குலைந்து போகாச் சட்டத்தை
வலைத்து வெற்றி பெறுவதற்கே
    
வார்த்தை வலையை விரித்திடுவார்!
குலைக்கும் நாய்போல் குரலுயர்த்திக்
    
கொஞ்சம் கூட இரக்கமின்றி
விலையாய்ப் பணத்தை வாங்கித்தம்
    
வயிற்றை வளர்ப்பார் வழக்கறிஞர்!

வலையாய் எதையும் விரித்தாலும்
    
வகையாய் அதிலே மாட்டாமல்
நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?
    
நினைக்க நெருடும் ஒவ்வொன்றும்!
அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
    
ஆசை அலையை அடக்கிவிட்டால்
வலையை விரித்தும் சிக்காமல்
    
வாழும் வழியோ கிடைக்குமன்றோ!


அருணா செல்வம்.

31 கருத்துகள்:

  1. வலையாய் எதையும் விரித்தாலும்
    வகையாய் அதிலே மாட்டாமல்
    நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?

    nice lines

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.
      நன்றி
      நன்றி கவிஞர்.

      நீக்கு
  2. தங்கள் சிந்தனை வலையில்
    சிக்கிவிட்டோம்
    மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான வலைகள்... வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  5. ம்ம்ம் ..அருமையான கவிதை
    நல்ல சிந்தனை

    பதிலளிநீக்கு
  6. ஆசை அலைகளை அடக்கத்தான் வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அமைதி பெறும். அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி துரைடேனியல் ஐயா.

      நீக்கு
  7. மிகவும் அழகான கவிதை.

    அனைத்து வரிகளும் கோர்வையாக வந்து விழுந்துள்ளன.

    //அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
    ஆசை அலையை அடக்கிவிட்டால்
    வலையை விரித்தும் சிக்காமல்
    வாழும் வழியோ கிடைக்குமன்றோ!//

    என்ற இறுதிவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளன.

    ஆசைகள் அடக்கப்பட வேண்டும் என்ற நீதியும் உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி வை.கோ ஐயா.

      நீக்கு
  8. அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
    ஆசை அலையை அடக்கிவிட்டால்
    வலையை விரித்தும் சிக்காமல்
    வாழும் வழியோ கிடைக்குமன்றோ!
    ///

    ஆசையை அடக்கணும்னு சொல்றீங்க புத்தர் மாதிரி உண்மை தான் ரசித்த வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தர் அப்படி சொன்னாரா பாஸ்...?
      தெரிவித்தமைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பிரேம் குமார்.

      நீக்கு
  9. அருவியாய் கொட்டும் வார்த்தைகள் அழகு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி ரமணி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. வார்த்தை துள்ளி விளையாடுதே

    ஆபாரம் பாராட்டுக்கள் படைப்பாளிக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபாரம் பாராட்டுக்கள் படைப்பாளிக்கு “

      மனசாட்சி.... இது அநியாயம்.
      என் வலைக்குள் இருப்பதைப் படித்துவிட்டு
      யாரோ ஒருவருக்குப் பாராட்டு சொல்வது போல் சொல்கிறீர்கள்...

      ம்ம்ம்...
      நன்றி முத்தரசு அவர்களே.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. நல்ல கவிதை படைப்பு சகோ... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு