காலையில்
எழுந்ததிலிருந்து காவியாவைக் காணாத்தால் தன் தங்கையிடம் விசாரித்தார் மாமா.
“என்னன்னு
தெரியலை... நேத்து ஸ்கூல் விட்டு வந்த ஊடனே படுத்திட்டாள். சாப்பிடவும் இல்லை.
நைட் ஏதேதோ பிதற்றிக் கொண்டே இருந்தாள். ஜீரம் வேற லைட்டா அடிக்குது. மருந்து கொடுத்தேன்.
ஆனால் அறையிலேயே இருக்கிறாள்.“ என்றாள் தங்கை.
“ச்சோ... நான்
இன்னைக்கு காந்தி ஜெயந்தியாச்சே... அவளைச் கூட்டிக்கொண்டு வெளியே போகலாம் என்று
தான் வந்தேன். சரி நானே பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு காவியா அறைக்குள்
நுழைந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.
காவியா
கண்விழித்தது தான் தாமதம்.... “அம்மா... அம்மா... இங்க வாயேன்...’ என்று கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். ஓடி வந்த அம்மா மகளைத் தூக்கிக் கொண்டாள்.
“அம்மா எனக்கு
பயமா இருக்குது... இந்த மந்திரவாதிய வெளியே போகச்சொல்லு...“ கண்களை மூடிக்கொண்டு
கத்தினாள் காவியா.
“ஏய் காவியா....
நல்லா பாரு... மந்திரவாதியில்ல. நம்ம மாமாடீ.. கண்ணைத் தொறந்து பாருமா...” என்றாள் அம்மா.
“இல்ல... இவரு மந்திரவாதிதான். மொதல்ல
போவச்சொல்லு...“ மேலும் அழுதாள் கவியா.
மாமா ஒன்றும் புரியாதவராக வெளியில் வந்தார்.
மூன்று மணி அளவில் காவியா
தோழன் சதீஷ் வந்தான். மாமாவைப் பார்த்ததும் அவருக்கு ஒரு முத்தமிட்டுவிட்டு “மாமா
காவியா சொன்னா... நீங்க சொன்னதால தான் இன்னைக்கு எங்க ஸ்கூல்ல லீவு விட்டாங்க.
தெங்க்ஸ் மாமா... “ என்றான்.
மாமா ஒரு பெருமூச்சி விட்டுவிட்டு... “சதிஷ்...
நீ போயி காவியாவைக் கிளம்ப சொல்லு. நம்மா மூனு பேரும் பைக்குல பீச்சிக்கு போயிட்டு
ஐஸ் வாங்கி சாப்பிட்டுட்டு வரலாம்.. என்ன? போயி காவியாவைக் கூப்பிடு....” என்று சொல்லிவிட்டு அவன்
பின்னாலே சென்று அறையின் வெளியிலேயே நின்று கொண்டார்.
சதிஷ், காவியாவை எழுப்பி விசயத்தைச்
சொன்னான். அவள் “வேண்டாம் சதிஷ்... மாமா ஒரு மந்திரவாதி. நீ அவருக்கூட போவாத... போனாக்கா...
அப்புறம் உன்மேலேயும் ஆவி ஏறிடும்... “
என்றாள் கண்களைப் பெரியதாக விரித்து.
உடனே சதீஷ் பயந்தவனாக “என்ன சொல்லுற நீ...” என்றான்.
மாமாவும் காதை
நன்றாக தீட்டிக்கொண்டார்.
“ஆமாம்
சதிஷ்.... நான் நேத்து பாத்ததைச் சொல்லுறேன் கேளேன்... நேத்து ஸ்கூல்
முடிச்சிட்டு.. டியூசன் முடிச்சிட்டு மாமா கூட விளையாடலாம்ன்னு வீட்டுக்கு
ஓடியாந்தேன். அப்போ எங்க வீட்டு ஹாலுல ஒரு துணிமூட்டை பெரிசா ஆடிக்கினு
இருந்துச்சி. பெரிசா மூச்சை இழுத்து இழுத்து விடுற மாதிரி சத்தம் கேட்டுச்சு...
நான் பயந்து போயி அம்மாகிட்ட ஓடினேன். அம்மா சமைச்சிக்கினு இருந்தாங்க. நான்
அம்மாவைச் கூப்பிட்டேன். “ஹால்ல வந்து பாருன்னு... “ அவுங்க அத காதுலே வாங்களை.
சரி மாமாவிடம் சொல்லலாம்ன்னு “மாமா மாமா... “ன்னு கூப்பிட்டேன்.
அப்போ அம்மா
சொன்னாங்க... “மாமா ஹாலுல ஆவி பிடிக்கிறார். நீ போயி அவரை டிஸ்டப் பண்ணாதே... போ..
போயி படி..“ ன்னாங்க. நான் பயந்து போயிட்டேன். திரும்பவும் ஹாலுக்கு வந்தேன்.
அப்போ அந்தத் துணி மூட்டை ஒரு மாதிரி ஆடி கொஞ்ச நேரத்துல மாமா அந்த துணி மூட்டையில
இருந்து வெளிய வந்தார். அப்போ அப்போ நிறைய வேர்த்துப் போய் பயங்கரமா இருந்தாரு.
பாக்கவே பயமா இருந்துச்சி.
அப்பறம் அவரு நேரா
அம்மாகிட்ட போயி... “ஆவிய நல்லா புடிச்சிட்டேன். இனிமேல பிரட்சனை இருக்காது...“ அப்படின்னு
சொன்னாரு. “ என்றாள் காவியா.
சதிஷ் பயந்தவனாக
அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். “நிஜமாவா காவியா... அப்போ... நானும் அவர்
கூட வெளிய போவமாட்டேன்.“ என்றான் சதிஷ் பயந்தவனாக.
வெளியே
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மாமா நேற்று சளி பிடித்துக்கொண்டு தலை பாரமாக இருந்ததால்
சுடு தண்ணீரில் விக்ஸ் போட்டு ஆவி பிடித்ததை நினைத்துச் சிரித்தார்.
இனி இந்த ஆறு
வயது பிள்ளைகளை என்ன சொல்லி சமாதானப் படுத்தவது என்றும் தெரியாமல் விழித்தார்.
அருணா செல்வம்.
குழந்தைகள் எப்பொழுதுமே இப்படி தான், நாம் தான் பார்த்து பேச வேண்டும்.. ஆவி பிடித்த மாமா எதாவது கதையை கூறி சமாளிக்க வேண்டியது தானே...!!!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஆயிஷா ஃபருக்.
வாவ் கடைசியில அழகாக முடித்துள்ளீர்களே.
பதிலளிநீக்குதொடர்கதையா எழுத கிளம்பிட்டீங்களோ
சிட்டுக்குருவி...
நீக்கு“கவிமனத்“தில் எழுதிய தொடர்கதையையே படிக்க ஆளில்லாமல் நிறுத்தி இருக்கிறேன்.
இப்பொழுதும் தொடர்கதையா...?
பயந்து விடாதீர்கள்.
இது தொடர் கதை இல்லை.
பெரிய பதிவாக இட்டால் நிறைய பேர் படிக்க விரும்புவதில்லை என்பதால் சின்ன தாக குட்டி குட்டியாகப் பிரித்துப் போடுகிறேன்.
( இந்த “குட்டி“ என்ற வார்த்தையை வைத்து நேற்று நடந்த நகைச்சுவையையும் பிறகு எழுதுகிறேன்.)
நன்றி சிட்டுக்குருவி.
கூடவே நாங்களும் முழிக்கிறோம்...
பதிலளிநீக்குஇன்னும் எனக்கும் பதிலே
நீக்குகிடைக்கவில்லைங்க ரெவெரி சார்.
நன்றி.
போன வாரம் நானும் ஆவி பிடித்தேன்!ஹி,ஹி
பதிலளிநீக்குபிடிக்க முடிந்ததா....!!!!
நீக்குநன்றி குட்டன் ஐயா.
ஹா.. ஹா.. நல்லா இருக்குங்க...
பதிலளிநீக்குநன்றி...tm5
நல்ல கண்ணோட்டம் .சிரித்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
நல்ல ஆவி! நல்ல மாமா!
பதிலளிநீக்குநல்ல புலவர்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.
மாமா நல்லா ஆவிய புடிச்சி பீதிய கிளப்பிட்டார்,நல்ல நகைச்சுவை
பதிலளிநீக்குத.ம. 7
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
haa haa !
பதிலளிநீக்குnalla irukku...
நன்றி சீனி நண்பரே.
நீக்கு