ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மயக்கி விட்டாய் !! (கவிதை)





 வாக்கழகு! நெற்றியிலே வந்து தொங்கும்
   வடிவான முடியழகு! பச்சைக் கல்சேர்
மூக்கழகு! முழியழகு! பற்கள் மின்னும்
   முத்தழகு! முகமழகு! தேன் சுரக்கும்
நாக்கழகு! நடையழகு! அவளைப் பார்க்கும்
   நாளழகு! சிலையழகைத் தோற்க வைக்கும்
தேக்கழகின் உடலழகு! இருந்தும் என்னைத்
   தெள்ளுதமிழ் மொழியழகால் மயக்கி விட்டாய்!


அருணா செல்வம்.

27 கருத்துகள்:

  1. சொல்லழகு, பொருளழகு, சேர்ந்து நிற்கும் கவியழகு - இவ்வினிய
    கவியழகைச் சுவைப்பதற்கு எமக்கு வந்த வாய்ப்பழகு :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கவிச்சுவையில்
      கருத்தளித்துள்ளீர்கள்.
      மிக்க நன்றி மணி ஐயா.

      நீக்கு
  2. இருந்தும் என்னை
    தெள்ளுதமிழ் மொழியழகால் மயக்கி விட்டாய்!
    //

    அவ்வளவு அழகு இருந்து பேசும் மொழி தான் பிடித்ததா உங்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்பானவர்கள் அனைவரும்
      அழகானவர்களே! அன்புடனே
      அருந்தமிழைப் பேசுபவர்கள்
      அதனிலும் அழகானவர்கள்.

      உங்களுக்குத் தெரியாதா பாஸ்.

      நீக்கு
  3. அழகு அழகு எத்தனை அழகு. சொல் அழகு சுவை அழகு நீங்கள் எடுத்தாளும் மொழியும் அழகு. வாவ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசிப் பேசிப்
      பழக பழக
      அழகு அழகாய்
      சொற்கள் வந்துவிடும் .. உண்மைகள்.

      நன்றி.

      நீக்கு
  4. உங்கள் கவிதையும் ஒரு அழகு... நன்று

    பதிலளிநீக்கு
  5. தமிழ் நயம் கூறும் தங்கள் கவிதை ஓர் அழகு.

    பதிலளிநீக்கு
  6. //சிலையழகைத் தோற்க வைக்கும்
    தேக்கழகின் //

    இது எப்ப ஆச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும் பொழுதே...
      அது அப்படி வந்திடுச்சிப்பா.

      (எல்லாம் ஒரு கற்பனை தான்)

      நன்றி ஹாரி.

      நீக்கு
  7. அழகோ அழகு அழகை வர்ணித்த கவிதை அழகைச் சொன்னேன் :)
    வாழ்த்துக்கள் தோழி மேலும் மேலும் அழகிய கவிதைகள் தவழட்டும்!!.....

    பதிலளிநீக்கு
  8. மயங்கி போனேன்... அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. மயங்கி போனேன்... அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு முறை மயங்கி விட்டீர்களா?

      நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  10. இப்படியே செந்தமிழில் நிறைய கவிதை பதியுங்கள் ...
    ரொம்ப ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  11. அழகழகா வார்த்தையெடுத்து அழகாய் கோர்த்த பா அழகு.

    பதிலளிநீக்கு
  12. எல்லா அழகுக்கும் மிஞ்சிய மொழியழகு!
    அருமை

    பதிலளிநீக்கு
  13. ஐயோ என்னமா அடுக்கிட்டு போறிங்க....
    வார்த்தைகளை கண்டுபிடிக்க புதிதாக ஏதாவது தேடுபொறிகள் பாவிக்கிறீர்களா
    சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டு.... அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...
      எனக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சிட்டுகுருவி.

      நீக்கு