வியாழன், 4 அக்டோபர், 2012

சேர்த்து வைத்தல்..!! (கவிதை)
சின்னவுரு எறும்புகூட நாளை வேண்டிச்
    சேர்த்துவைக்கும்! தேனீயும் தேனைச் சேர்க்க
வண்ணமிகு மலர்தேடிப் பறந்து செல்லும்!
    வையகத்தில் வசதியாக மனிதன் வாழ
சின்னதெனத் தவறுசெய்தல் இயற்கை அன்றோ!
    சேர்த்துவைக்கும் சொத்தெல்லாம் வாழ்வில் செய்த
நன்மைஒன்றே! என்றஎண்ணம் வந்து விட்டால்
    நமைப்படைத்த ஆண்டவனே நாமே என்பேன்!


அருணா செல்வம்.

இப்பொழுது கவிமனத்தில் ”போகப் போகத் தெரியும் பாகம் - 26“
தட்டுங்கள் http://kavimanam.blogspot.fr/


13 கருத்துகள்:

 1. ஓகேங்க.. இப்படியே 20 செக்கனுக்குள வர்ற மாதிரியே எழுதுங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஹாரி...

   கீழே மதுமதி அண்ணா சொன்னதைப் பாருங்கள்.

   அதனால் நான் கவிதையை எழுதி விடுகிறேன். நீங்கள் முதல் பத்திவை மட்டும் 20 செகண்ட்டு வர்ர அளவுல வாசித்துவிட்டுவிடுங்கள்.
   மதுமதி அண்ணா போன்றவர்களுக்கு மீதி கவிதை.

   நீக்கு
 2. உண்மைதான் தோழி வாழ்க்கையில் நாம்
  செய்த நன்மைகளே எம் கூட வரும் இன்பம் .
  கவிதைப் பகிர்வுக்கு நன்றி மேலும் தொடர
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. (எங்கே என் பதிலைக் காணோம்.....!!!!
   ஐயோ...தெரியவில்லையே... ஙே)
   திரும்பவும் எழுதுகிறேன்....

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 3. கவிதை நன்று..இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதலாமே..சிறியதாய் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்ல வந்த கருத்தை அந்தக் கவிதைக்குள்ளேயே அடக்கி விட்டதால் பெரியதாக நீட்டாமல் விட்டுவிட்டேன்.

   இனி எழுதும் கவிதைகளை விரிவாக எழுதுகிறேன்.
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 4. சொல்ல நினைத்ததை அற்புதமாக சுருக்கமாக சொன்ன விதம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
   மிக்க நன்றி சகோதரி.

   நீக்கு