“வசந்தன், சாலினி... ரெண்டு பேரும் இன்னும்
கிளம்பலையா...? மணி ஆறு அடிக்கப் போவுது பாருங்க.... “ என்ற வாணியிடம் “அம்மா...
இன்னைக்கு சூபர்பர் சிங்கர் இருக்குதும்மா.... நான் நாளைக்கு பரத நாட்டிய
கிளாசுக்குப் போறேன்மா...“ கெஞ்சளாக சொன்னால் சாலினி.
“அதெல்லாம் கிடையாது....
வாரத்திற்கு ரெண்டு நாள் தான் பரத நாட்டிய கிளாஸ்... ஒழுங்கா போயிட்டுவா. ம்....” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டு
கணினியில் விளையாடிக்கொண்டிருந்த பத்து வயது வசந்தனிடம் வந்தாள் வாணி.
“அம்மா... இன்னைக்கி மட்டும்
விடேன். நாளைக்கி புட் பால் கிளப்க்கு போறென்மா... ப்ளீஸ்ம்மா...” அவனும் கணினியிலிருந்து கண்களை எடுக்காமல்
வார்த்தையால் மட்டும் கொஞ்சினான்.
“நீ எவ்வளவு கெஞ்சினாலும்
கிடையாது.... போயிட்டு வந்து வேணுமின்னா விளையாடு... இப்போ கிளம்புங்க ரெண்டு பேரும்...“ அவள் அதட்டிய அதட்டலில்
இருவரும் பேசாமல் முறைத்துக் கொண்டே சென்றார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்
கொண்டிருந்த அவளின் தங்கை கேட்டாள். ”ஏன் அக்கா.... பசங்களுக்குத்
தான் பிடிக்கலையே... பின்னே ஏன் வற்புறுத்துரே... பாவமா இருக்குதுக்கா...”
“ஆமாண்டி இப்போ பாவமா தான் இருக்கும். ஆனால்
பின்னாடி இதனால் அவங்களுக்குத் தான் நல்லது...” என்றாள் வாணி.
“என்ன நல்லது.... பிள்ளைகள்
விருப்பப்படாமல் அதுகளின் மேல் உனக்கு பிடிச்சக் கலைகளைத் திணிப்பது தான்
நல்லதா...?”
கோபமாகப் பேசிய தங்கையை நிதானமாகப்
பார்த்தாள் வாணி.
“ராணி... நீ இன்னும்
தாயாகவில்லை. தாயாகிப்பார். முதன் முதலில் குழந்தைப் பிறந்ததும் அதற்குப் பாலூட்ட
அதன் வாயில் தாய் திணித்து தான் ஆகவேண்டும். சாப்பிடாத குழந்தையை மிரட்டி திணித்து
சாப்பிட வைத்து தான் ஆக வேண்டும். பள்ளிக்குப் போக மாட்டேன் என்ற குழந்தையை அடக்கி
அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து இருக்க முடியுமா...? படிக்காத பிள்ளையை எப்படியாவது
போ என்று விட்டு விடுவதா..?”
அழுத்தமாக சொன்னவளிடம் ராணி கேட்டாள் “அது வேற.
இது வேற. கலைகளில் பிள்ளைகளுக்கு ஆர்வம்
இருந்தால் கற்றுக் கொள்ளட்டும். அதை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது இல்லையா...?“
”ஆர்வம் இருக்கிறது இல்லை என்பதெல்லாம்
குழந்தைகளிடம் அறிய முடியாது ராணி. நாம் தான் பழகனும். நாம் வளர்ந்த காலம் போலவா
இவர்கள் வாழ்க்கை...? எங்கெயாவது ஓடியாடி விளையாடுகிறார்களா..? யாரிடமாவது
பேசுகிறார்களா...? யோசித்துப்பார். அவர்களுக்கு இது ஓர் உடற்பயிற்சி போல் தானம்மா...”
“அதுக்காக உனக்கு பிடிச்ச பரத நாட்டியத்திற்கு
தான் அனுப்பனுமா...? உலகத்தல எத்தனையோ கலை இருக்குதே...”
“இருக்கிறது தான். ஆனால் கத்துக்கொடுக்க யார்
முன் வருகிறார்கள்? அது மட்டும் இல்லை ராணி... நாம் பிள்ளைகளுக்குக் கலைகளின் மேல்
ஆர்வம் வருவதற்கு தான் பாதை போட்டுக் காட்டுகிறோம். அதில் பயணம் செய்ய வைக்கிறோம்.
பிடித்தவர்கள் தொடருகிறார்கள். பிடிக்காதவர்கள் அவர்களுக்குப் பிடித்த கிளை
பாதையில் பயணமாகிறார்கள். வற்புறுத்தி எந்தக் கலையையும் வளர்க்க முடியாது என்பது
எனக்கும் தெரியும் ராணி. குழந்தைகள் எல்லாம் அறிந்த ஞானிகள் இல்லை. அவர்கள்
விருப்பத்திற்கு வளரட்டும் என்று விட்டுவிடுவதற்கு.... உனக்கு குழந்தை பிறந்த
பிறகு திணிப்பு என்பதின் பொருள் புரியும்..... “ என்று நகர்ந்த அக்காளின் வாதத்தில்
உள்ள உண்மைகளை யோசித்தாள் ராணி.
அருணா செல்வம்.
உண்மைதான்.
பதிலளிநீக்குநன்றி குட்டன் ஐயா.
நீக்குநல்ல சிந்தனை
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கதிர் ஐயா.
unmaiyaana kathai!
பதிலளிநீக்குnalla kathai!
சகோதரி என்ன எதிர்ப்பதிவா ? இப்பதிவில் எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு, பின்னர் அதனை எடுத்து வைக்கின்றேன் .. :)
பதிலளிநீக்குவாங்க அண்ணா....
நீக்குஉங்களின் முதல் வரவு கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
இந்தக் கதையில் உள்ளது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
இதில் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ மாற்றுக் கருத்து இருக்கலாம். அதை நீங்கள் தாராளமாக வெளிப்படுத்தலாம்.
நமது கருத்துக்களைப் பறிமாறினால் இதுவரையில் கிடைக்காத தெரியாத உண்மைகள் கூட விளங்கும்.
என் கருத்தை அனைவரும் எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் தான்
கதையின் கடைசி வரியில் ராணி யோசித்தாள் என்று முடித்தேன்.
நன்றி சகோதரரே.
சிந்தனைக்கு விருந்தான ஆக்கம் தோழி !...தொடர
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
ம்ம்ம்ம் இப்படியும் இருக்கத்தான் செய்யுது
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மணி ஐயா.
உண்மை... விருப்பம் போல் வாழ்வு... (TM 2)
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் ஐயா.
அவர்களாக அறியும் தெளிவு பெறும்வரை
பதிலளிநீக்குஅறிவுறுத்துவது தவறில்லை எனத்தான் படுகிறது
சிந்தனைச் சிறுகதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரமணி ஐயா.
நன்றி ரமணி ஐயா.
பதிலளிநீக்குஅப்போது அதற்க்கு பதிலளித்த ராணி "சூப்பர் சிங்கர் விரும்பி பார்ப்பதாக கூறினாயே ஒரு வேளை அவர்களுக்கு அதில் ஆர்வம் இருந்து இருக்காதா என்று யோசித்து பார்த்தாயா? அப்படி அதை மறுத்து விட்டு கலைகளின் மேல் ஆர்வம் வருவதற்கு தான் பாதை போட்டுக் காட்டுகிறோம் என்று எப்படி உன்னால் சொல்ல முடியும்?
பதிலளிநீக்குமேலும் தொடர்ந்தவளாய் "பிடித்தவர்கள் தொடருகிறார்கள். பிடிக்காதவர்கள் அவர்களுக்குப் பிடித்த கிளை பாதையில் பயணமாகிறார்கள் என்று சொல்கிறாய்? எப்படியோ நீ கொண்டு விட்ட அந்த பாதையில் தானே அவர்களும் பயணம் செய்ய கட்டாயம் இருக்கிறது. அதிலும் பரிபூரண மனதில்லாமல் தானே அவர்களது மிகுதஈ பயணம் தொடரும். குழந்தைகள் எல்லாம் அறிந்த ஞானிகள் இல்லை. இது பெரியவர்களுக்கும் சால பொருந்தும். காரணம் எல்லாராலும் எல்லாவற்றையும் அறிய முடியாது. மருத்துவம் பற்றி அடி முடி கூட அறியாத அப்பம் விக்ரவளின் மகன் கூட உலகை கலக்கும் டாக்டர் ஆகலாம் என்பதை எப்படி மறந்தாய். ஹா?
உண்மையிலே நல்ல ஐடியா என்னடான்னா உனக்கு தெரிந்த உலகில் உள்ள வாழ்வாதாரதியும் சேர்த்து வாழ்கையில் ஜெயிக்க கூடிய கலைகளை அவர்களுக்கு முடிந்த வரை அறிமுக படுத்து.. ஆலோசனைகள் ஆர்வத்தை ஊட்டி பாரு.. அதை குறித்த தேடல்களில் நீயும் இறங்கு.. காரணம் உன் பக்கபலமும் அவர்களுக்கு முக்கியம்... ஒரு வேளை அவங்களும் நீயும் உணர்வீங்க குழந்தைகளுக்கு என்ன நல்லா வரும். எதுல போனா மன நிறைவோட வாழ்க்கைய ஜெயிக்கலாம் என்று..
இல்லா விட்டால் வாணி உன்னிடம் ஒன்று சொல்கிறேன்.. எதிர் காலத்தில் உன் குழந்தைகளின் கையும் காலும் தாளத்திற்கு ஆடும் ஆனால் இதயமோ அதை பாட்டாக பாட யோசிக்கும்"
ஹாரி பாட்டர்....
பதிலளிநீக்குராணியின் இடத்தில் நின்று அழகாக அருமையாக கற்பனையில் யோசித்துப் பேசி இருக்கிறீர்கள். நன்றி.
ஆனால்...
வாணியாக கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்....
எதற்குமே ஒரு துவக்கம் வேண்டும் என்பது புரியும்.
““எதிர் காலத்தில் உன் குழந்தைகளின் கையும் காலும் தாளத்திற்கு ஆடும் ஆனால் இதயமோ அதை பாட்டாக பாட யோசிக்கும்"
குழந்தையாக இருக்கும் வரையில் அதன் கைகளும் காலும் அவர்களின் நன்மைக்காக நம் தாளத்திற்கு ஆடட்டும்... தனக்கென யோசிக்கும் இதயம் வந்தப் பிறகு நம் பேச்சையா கேட்க்கும்...?
நீங்கள் யோசியுங்கள் ஹாரிபாட்டர். நன்றி.
Actually now i'm baby so அப்புறமா யோசிக்கலாம் .. hi hi.. But நான் என் கருத்திலே நிலையாக நிக்கிறேன் என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்
நீக்குநல்லது ஹாரி.
நீக்கு“நான் என் கருத்திலே நிலையாக நிக்கிறேன் என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன் “
இதிலிருந்தே உங்களுக்குத் தனக்கென் யோசிக்கும் இதயம் வந்து விட்டது என்று தெரிகிறதே...
நான் யார் மேலேயும் என் கருத்தத் திணிக்க மாட்டேன்.
உங்களின் விளக்கமான பகிர்தலுக்குப் பாராட்டுகிறேன் ஹாரிபாட்டர்.
நன்றி.
எனக்கும் இதில் மாற்றுக் கருத்து உண்டு அருணா, திணிப்பதால் எதையுமே முழு வீச்சோடு செயல்படுத்த முடியாது. நேரமும் , பணமும் தான் விரயம். அதைத் தவிர்த்து அவர்களுக்கு ஆர்வமுள்ள துறை உணர்ந்து அதன் வழி செலுத்தினால் பலன் உண்டாகும்.இது எனக்கு அனுபவம் கற்றுக் கொடுத்தது.
பதிலளிநீக்குவணக்கம் தோழி!
நீக்குஉங்களின் முதல் வருகைக்கும் அனுபவத்தால் உண்டான கருத்தை அழகுபட தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
குழந்தைகளுக்கு ஆர்வம் என்பது எந்த வயதில் வரும் என்று எனக்கு தெரியவில்லை தோழி.