வெள்ளி, 12 அக்டோபர், 2012

சோளியன் குடுமி சும்மா ஆடுமா? (நிமிடகதை)
   கனகா வீட்டிற்குள் நுழைந்ததும்... வனிதா, “அம்மா... கனகா வந்துவிட்டாள். நான் கிளம்புறேன். கல்யாணம் முடிச்சிட்டு நாளைக்கு சாய்ந்திரம் வந்திடுறேன்...“ என்று கத்திச்சொல்லிக் கொண்டே காலில் செருப்பை நுழைத்தாள்.
   அவள் குரலைக் கேட்டதும் மாதவி ஓடிவந்து, “வனிதா.. கிளம்பிட்டியா...? பாத்து போய்வா. கிராமத்துக்குப் போறே... ரோடெல்லாம் கல்லும் முள்ளுமா இருக்கும். ஜாக்கிரதை. பஸ்சை விட்டு இறங்கி ஊருக்குள் போக நடந்து போகாதே. ஏதாவது வண்டியிருந்தா... மாட்டு வண்டி கெடைச்சாலும் ஏறிக்கோ.... என்ன நான் சொல்லுறது புரியுதா...?என்றாள்.
   “சரிடீ... புரியுது. நீ கவலைப்படாம இரு... என்று தங்கையைப் பார்த்து சற்றுக் கடுப்புடன் சொன்னாள் வனிதா.
   “எங்க நான் கவலைப்படாமல் இருக்கிறது? கல்யாணம் வேற அந்த கிராமத்து கொவில்லன்னு சொன்ன... அது கிராமம். பாக்காத்தைப் பாத்த மாதிரி பாக்குங்க... நீ தான் பத்திரமா பாத்து இருக்கனும். நீ வர்ர வரைக்கும் நான் நிம்மதியா இருக்க மாட்டேன். பத்திரம் வனிதா. காடு, கழனி, வரப்பு, வாய்க்கால் பக்கமெல்லாம் போவதே... என்ன...?“ என்றாள் மாதவி கவலையுடன்.
   “நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது போதுமா... பயப்படாம இரு“ சொல்லிவிட்டு கிளம்பினாள் வனிதா.

    “வனிதா... உனக்கும் உன் தங்கச்சிக்கும் எப்பவுமே ஆகாது. ஆனால் பாரோன் நீ ஊருக்குப் போறேன்னு சொன்னதும் உன் அம்மா கூட உனக்கு ஒரு அட்வைசும் சொல்லலை. ஆனால் மாதவி... என்னமா பாசத்தைக் கொட்டிக் காட்டிட்டாள்...தெருவில் நடந்து போகும் போது கனகா தான் கண்டதை ஆச்சர்யமாக வனிதாவிடம் சொன்னாள்.
    “என்னது அவ பேசுனது என் மேல இருக்கிற பாசத்தாலன்னு நெனைச்சியா...? இல்லையடி... நான் போட்டு இருக்கிற  செருப்பு மேல இருக்கிற பாசம் அது.“
   “என்ன...?
   “ஆமாம் கனகா. நேத்து என் செருப்பு அறுந்திடுச்சி. இன்னைக்கு கல்யாணத்திற்குப் போக எனக்கு செருப்பு வாங்க நேரமில்லாத்தால அவகிட்ட இருந்த புது செருப்பைக் கெஞ்சி கெட்டு பொட்டுக்கினு கிளம்பினேன். அந்த செருப்புக்காகத் தான் இவ்வளவு அட்வைஸ் எனக்கு. சோளியன் குடுமி சும்மாவா ஆடும்.... புரியுதா...?“ என்று கேட்க ஆச்சர்யத்துடன் தலையாட்டினாள் கனகா.

அருணாசெல்வம்.
 --------------------------------------------------------
சோளியன் குடுமி சும்மா ஆடுமா – இந்தப் பழமொழி குறித்து சிறு விளக்கம்.

  சோளி என்பது ஒரு கூடை என்று பொருள்.
  பழங்காலத்தில் கோவிலில் அன்னதானம் செய்வதற்கு வரும் உணவுப் பொருட்களைத் தலைக்குச் சும்மாடு வைத்துக் கூடையில் தூக்கி வைத்துக் கொண்டுச் செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களைச் சோளியன் என்று அழைத்தார்கள். அந்தச் சோளியர்கள் குடுமி வைத்திருப்பார்களாம்.

   ஒருமுறை ஒரு சோளியன் உணவுக்கூடையைத் தூக்கி செல்ல இருந்தபோது அவனின் சும்மாடுவை காணவில்லை. அவன் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  ஆனால் நேரமாகிவிட்டக் காரணத்தில் தன் குடுமியையேச் சும்மாடாகச் சுருட்டி வைத்து அதன் மேல் கூடையைச் சுமர்ந்து சென்றான். ஆனால் கூடை அவன் மண்டையில் நிற்காமல் நழுவி விழுந்து பாதி உணவு வீணாகியது.
   அவன் சேர்க்குமிடத்தில் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி இருக்கிறான். அங்கிருந்த பெரியவர் ஒருவர் “என்ன தான் இருந்தாலும் சோளியன் குடுமி சும்மாடு ஆகுமா...?“ என்றார்.
   அதுவே மறுவி “சோளியன் குடுமி சும்மா ஆடுமா?“ என்று வழக்கத்திற்கு வந்து விட்டது.

என் தாத்தா சொன்ன கதை . நன்றி.

23 கருத்துகள்:

துரைடேனியல் சொன்னது…

செருப்பு பாசம் உறவுப் பாசத்தை விஞ்சிவிட்டதே! அப்புறம் பழமொழி விளக்கம் அருமை!

தனிமரம் சொன்னது…

சோழியன் குடுமிக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி!

Avargal Unmaigal சொன்னது…

தாத்தா சொன்ன கதையும் விளக்கமும் மிக அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

செருப்பு,செறுப்பு எது சரி?
கதை அருமை.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா தெரியாத விளக்கம் தெரிந்துகொண்டேன்.நன்றி.

Seeni சொன்னது…

ada nalla kathaikal!

ஆத்மா சொன்னது…

கதை சும்மா சுள்ளென இருந்தது
பழமொழிக்கான விளக்கம் அழகு + எனக்கு புதிய பழமொழியும் கூட

arasan சொன்னது…

ஆஹா கதை அற்புதம் என்றால் அதைவிட அழகு சோளியன் குடுமி விளக்கம் ..

ஹாரி R. சொன்னது…

கதை ஓகே.. செறுப்பு அல்ல செருப்பு தான் சை என்று நினைக்கிறேன்.. சோலிக்கு இப்படி விளக்கம் இருக்கா?

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மி்க்க நன்றி துரைடேனியல் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

சோழியன் இல்லை “சோளியன்“

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனிமரம்.

அருணா செல்வம் சொன்னது…


இன்னும் நிறைய இருக்கிறது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது தெரிவிக்கிறேன்.

நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

“செருப்பு“ என்பது தான் சரி.
நான் தான் தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

குட்டன்ஜி சொன்னது…

கதை ,சொலவடை விளக்கம் இரண்டும் அருமை

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

கவலைப்படாதீங்க சிட்டு...
நான் நிறைய புது மொழிகளின் பழமொழிகளை விளக்குகிறேன்.

நன்றி சிட்டுக்குருவி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி அரசன்.

அருணா செல்வம் சொன்னது…

திருத்தத்திற்கு நன்றி ஹாரிபாட்டர்.

“சோலி“ இல்லை. “சோளி“
நன்றி ஹாரி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குட்டன்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

மாலிடம் வேண்டி! கன்னி
மரியிடம் வேண்டி! கந்த
வேலிடம் வேண்டி! ஆடும்
ஆளிடம் வேண்டி! நீண்ட
வாலிடம் வேண்டி! அன்னை
காலிடம் வேண்டி! பல்லோர்
தம்நலக் கருத்தில் வாழ்வார்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அருணா செல்வம் சொன்னது…

கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் வருகைக்கும் கருத்தாழப் பாடலுக்கும்
மிக்க நன்றி.

ezhil சொன்னது…

இரண்டு கதைகளுமே அருமை அருணா

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.