புதன், 10 அக்டோபர், 2012

யாருக்கு எவ்விடம்!! (நிமிடக்கதை)



      விமானம் கிளம்ப இன்னும் சிறிது நேரமே இருந்தது. கடைசியாக ஏறிய வெள்ளைக்காரப் பெண்மணி தன் போடிங் கார்டைப்பார்த்துத் தன் இருக்கையைத் தேடி வந்தவள் அதிர்ந்தாள்.
   அந்தச் சன்னலோரம் இருந்த இரண்டு இருக்கையில் சன்னலோரத்தில் ஆப்பிரிக்க நாட்டு வயதான கருப்பர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் இந்தப் பெண்ணிற்கு ஆத்திரம். அவர் அருகில் அமராமல் விமானப் பணிப்பெண்ணை அழைத்தாள். வந்ததும் அவளிடம்.... மெதுவாக “நான் இந்தக் கருப்பர் பக்கத்தில் அமர்ந்து பத்து மணி நேரம் பயணம் செய்ய முடியாது. எனக்கு வேறு ஓர் இடம் கொடுங்கள்“ என்றாள்.
    அதே நேரத்தில் விமானம் கிளம்பத் தயாராகி விட்டது என்றும். அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து இருக்கை பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுமாறும் விமானிடமிருந்து அறிவிப்பு கேட்டது.
   பணிப்பெண்ணும் அந்த வெள்ளைக்கார பெண்மணியிடம் “விமானம் கிளம்பத் தயாராகிவிட்டது. இப்பொழுது நீங்கள் இவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுங்கள். விமானம் மேலேறி விட்டப்பிறகு உங்களுக்கு இடம் தேடி கொடுக்கிறேன்“ என்று பணிவாக சொன்னாள்.
    “முடியாது.... என்னால் கொஞ்ச நேரம் கூட இந்தக் கருப்பு மனிதருடன் அமர முடியாது. உடனே எனக்கு வேறு இடம் கொடுக்க வேண்டும்“ என்று சத்தமாகக் கூச்சலிட ஆரம்பித்தாள். அப்பொழுது விமானத்திலிருந்த அனைவரின் பார்வையும் அந்தப் பெண்ணைக் கோபமாகப் பார்த்தது. அவள் அதை இலட்சியம் செய்யாமல் நின்றிருந்தாள்.
    பணிப்பெண்ணும் “சற்றுப் பொறுங்கள்... “ என்று சொல்லி விட்டுச் சென்றவள் ஐந்து நிமிடத்தில் வந்தாள். வந்தவள் “மேடம்... இங்கே எக்கொனமிக் கிளாசில் ஒரு இடம் கூட இல்லை. ஆனால் வி.ஐ.பி  கிளாசில் ஒரு இடம் இருக்கிறது.  அது இந்த டிக்கெட்டின் விலையை விட இரண்டு மடங்கு அதிகம். அதில் மட்டும் தான் ஒரு இடம் இருக்கிறது. நீங்கள் இவருடன் அமர மாட்டீர்கள் என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் அந்த இடத்தைத் தருகிறோம்.“ என்று சொன்னதும் அந்த வெள்ளைக்காரப் பெண் மற்றவர்களை அலட்சியமாகப் பார்த்தபடி மிடுக்குடன் தன் கைபெட்டியை எடுத்து அவளுடன் கிளம்பத் தயாரானாள்.
   பணிப்பெண், இவளைப் புன்முறுவளுடன் பார்த்துக் கொண்டே... அந்தக் கருப்பரிடம்...“சார்.. நீங்கள் என்னுடன் வந்து வி.ஐ.பி கிளாசில் அமருங்கள்...“ என்று சொல்லியபடி அந்த கருப்பரை அழைத்துக் சென்றாள்.
   வெள்ளைக்காரப் பெண்மணியின் கருத்த மனம் முகத்தில் தெரிய... எவரையும் நிமிர்ந்து பார்க்காமல் கொடுத்த இடத்தில் அமர்ந்தாள்.


(பல வருடங்களுக்கு முன்நடந்த நிகழ்வு இது. சிறு கதையாக்கிக் கொடுத்துள்ளேன்.)
அருணா செல்வம்.

19 கருத்துகள்:

  1. உண்மைச் சம்பவமா சுள்ளென சுடுகிறதே...
    அழகாக கதையாக்கியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு
  2. அருமை..

    அழகாகச் சொன்னீர்கள்..

    சிவப்பு என்பது அழகல்ல நிறம்
    ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி

    என்ற பொன்மொழி நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பொன்மொழிவை நினைவுக்கூர்ந்து
      பகிர்ந்தும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  3. நீங்கள் சொல்லியவிதம் மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதை பகிர்வுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  4. இப்படியும் சில மனிதர்கள் இப்பூமியில் ...
    வாழ்த்துகள் மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன்.

      நீக்கு
  5. சரியான மூக்குடைப்பு அந்த வெள்ளைப் பெண்மணிக்கு. நிறத்தில் இல்லை மனிதம், குணத்தில்தான் என்பது சுள்ளென்று உரைத்திருக்கும். சிறுகதையாக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும்
      வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  6. மிக அருமையான பதிவு..எது நல்ல மனம் எனபதற்க்கான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    தினபதிவு திரட்டி சார்பாக தினம் ஒரு பதிவர் சிறப்பு பேட்டி என்ற பதிவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் முதல் பேட்டியாக தங்களை கான விழைகின்றோம். பத்து கேள்விகள் இருக்கும். உங்கள் தனியுரிமையை பாதிக்கும் வகையில் கேள்வி இருக்காது. வலையுலக அனுபவத்தை வைத்து கேள்விகள் இருக்கும். 10 கேள்விகள் உங்களுக்கு அனுப்படும் மின்னஞ்சல் வாயிலாக அவற்றிற்க்கு நீங்கள் பதில் அளித்தால் போதும் தாங்கள் பங்கு பெற விருப்பமெனில் dinapathivu@gmail.com முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை. நிறத்தில் அல்ல குணத்தில்தான் வெண்மை வேண்டும் என அழகாக கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. இன்னமும் எங்கும் விரவிக் கிடக்கிறது இந்த மாதிரியான பேதங்கள் என்பதை உங்கள் கதை காட்டுகிறது

    பதிலளிநீக்கு