புதன், 29 ஆகஸ்ட், 2012

“வரலாற்று சுவடுகள்“ –அவர்களுக்கு நன்றி!
வணக்கம் தோழர்களே தோழியரே.

     நான் வலையில் பதிவுகளைப் பதிய தொடங்கிய பொழுது என் நட்புக்கள் (இவர்கள் இங்கேயே பிரான்சில் பிறந்து வளர்ந்தவர்கள்)
 “நீயெல்லாம் பதிவு போட்டு யார் படிக்கப் போகிறார்கள்?என்று கேலிசெய்து சிரித்தார்கள்.
    அதிலும் நான் மரபுக் கவிதைகளைத் தான் அதிகம் பதிவிட போகிறேன் என்றதும் ரொம்பவும் அலட்சியமாகச் சிரித்தார்கள். உன் வலைக்கு யாரும் வந்து பார்க்க மாட்டார்கள். பாலோவர்ஸ் ஆகவும் மாட்டார்கள் என்றும் சேலன்ஜ் செய்தார்கள்.
    நான், “நம் தமிழர்கள் பிறமொழியை விரும்பிக் கற்றாலும் நம் மொழியை மறக்கவோ இகழவோ மாட்டார்கள். அதற்கு மாறாக தாய் மொழிமேல் அதிகம் பற்றுள்ளவர்கள்“ என்று அடித்துக் கூறினேன்.
    “அப்படியென்றால் நீ இந்த வருடத்திற்குள் பத்தாயிரம் பார்வையாளர்களாவது அல்லது ஐம்பது தொடர்பவர்களாவது வரவழித்துக் காட்டு ஒத்துக்கொள்கிறோம்“ என்றார்கள். 
    நானும் “சரிஎன்று சொல்லிவிட்டு அதை அன்றே மறந்தும் விட்டேன்.
    ஆனால் நம் நண்பர் “வரலாற்று சுவடுகள்அவர்கள் இதைக் கவனித்து வாழ்த்தும் தெரிவித்தப் பிறகு தான் கவனித்தேன். ஐம்பது பாலோவர்ஸ்...!!! அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  பார்வையாளர்களும் பத்தாயிரத்தைத் தாண்டி விட்டிருந்தது.
இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன்.

அன்புடன்
அருணாசெல்வம்.

(குறிப்பு.  நேற்று அந்த நண்பர்களைப் பிடித்து செய்தியைச் சொல்லி ட்ரீட் கொடுக்கவும் வைத்துவிட்டேன்.. ஒரு ஹம்பர்கருடன் ஃபிரித்.  நன்றிங்க “வரலாற்று சுவடுகள்“)(இது உங்களுக்கும் கொண்டு வந்தேன். சாப்பிடுங்கள். நன்றி)


38 கருத்துகள்:

 1. உங்களின் வெற்றி தொடர வாழ்த்துக்கள் தோழியே.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 3. இத எப்படி சாப்பிடுறதுனு சொல்லி கொடுங்களேன்

  50 500 ஆக வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி பாஸ்.

   ( எப்பொழுதும் போல தான். “சும்மா“ கையால எடுத்துச் சாப்பிடுங்கள்!!)

   நீக்கு
 4. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நண்பரே.

   உங்கள் வலைப்பதிவு பொதுவாக எனக்குத் திறக்காது.
   ஆனால் அதிசயமாக இன்று திறந்தது. பதிவை படித்தவிட்டு கருத்திடலாம் என்றால் கருத்தப் பெட்டியைக் காணவில்லை. யார் இந்த டெர்ரர் கும்பல் என்று தேடிப்பிடித்து “போடுங்கள்“
   நன்றி.

   நீக்கு
 5. கட்டிக் கரும்பாயினும், கொட்டிக் கிழங்காயினும், எட்டிக் கசப்பாயினும் மரபு வழியே கவிதைகள் படிக்க வந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்! கவிதையிலேயே மூழ்கி விடாதீர்கள். வலைப் பக்கம் கட்டுரைகளும் அவசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா.
   தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   உங்களின் “எனது எண்ணங்களை“த் திறக்க முடியவில்லை. கவனியுங்கள். நீங்கள் சொன்னது போல் கட்டுரைகளும் எழுத துவங்குகிறேன். நன்றி.

   நீக்கு
 6. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் நிறைந்த வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் ஐயா.

   நீக்கு
 7. வாழ்த்துக்கள் உங்களுக்கும் , உங்களை தூண்டி எழுத செய்த உங்க நண்பர்களுக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 8. இணையங்களில் மரபு கவிதைகள் எழுதுபவர்கள் ரொம்பவும் குறைவுதான் என்று கருதுகிறேன்!

  என் வாசிப்பு எல்லையில் எனக்கு தெரிந்து ரெண்டே ரெண்டு பேர் தான் எழுதுகிறார்கள், அதில் ஒருவர் நீங்கள்!

  ஓட்டு பட்டைகளை பதிவுக்கு கீழே வைத்திருந்தால் இதற்குள் நீங்கள் தமிழ்மண ரேங்கில் 50-க்கு கீழ் நிச்சயம் வந்திருக்கலாம் அதுமட்டுமல்லாது பதிவுகள் இன்னும் நிறைய பேரை சென்றடைந்திருக்கும்!

  எது எப்பிடியோ வலைத்தளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பிக்கும் போது எல்லோருக்கும் குறிப்பிட்ட காலத்தில் இதனை அடையவேண்டும் என்று ஒரு இலக்கு தோன்றுவது தவிர்க்க இயலாதது! அந்த இலக்கை நீங்கள் எட்டியத்தில் மகிழ்ச்சி! இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ! என்னை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி..!

  அப்பால நீங்கெல்லாம் "வெட்டு வெட்டுன்னு வெட்டிட்டு" எனக்கு ஒரே ஒரு பர்கர் கொண்டு வந்தது உங்களுக்கே நியாயமா படுதா? :) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோ.

   என்னுடைய வலையில் ஓட்டுப்பட்டையை இணைக்க அதிக முயற்சித்தும் முடியவில்லை. ”வேர்ட் பிரஸ்” வலை வைத்திருப்பவர்கள் தமிழ்மண ஓட்டிப்பட்டையை இணைக்க முடியாதாம். சரி நமக்கு அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டேன்.

   தவிர நானும் நிச்சயம் இந்த அளவு வருவேன் என்று நினைத்தாலும் அது இவ்வளவு சீக்கிரம் என்று நினைக்கவில்லை. அது தான் எனக்கே ஆச்சர்யம்!
   இதற்காக நான் என் வலைக்குள் வந்து படித்தவர்கள் தொடர்கிறவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

   (அப்பால நண்பா.. நான் வெட்டு வெட்டுன்னு வெட்டவில்லை. நான் சொன்ன நண்பர்கள் காலேஜ் ஸ்டூடண்ஸ். அதனால் ஆளுக்கு ஒவ்வொன்று தான். கடைசியில் என் பர்ஸ் தான் வாயைத் திறந்தது.
   பாலோவர்ஸ் “100“ ஆகட்டும்!! அப்புறம் ஜமாய்ச்சிடலாம் நண்பா)

   நீக்கு
  2. நீங்க blogspot தானே ஓட்டுபட்டையை எளிதில் இணைக்கலாமே

   நீக்கு
  3. ஆமாம் பாஸ்.

   நீங்களும் எனக்கு உதவினீர்கள். உங்கள் உதவிப்படி முயற்சித்தும் முடியவில்லை.
   திரும்பவும் எனக்காக உதவுங்களேன். ப்ளீஸ் பாஸ்.
   நன்றி.

   நீக்கு
 9. மரபுக் கவிதை எழுதுபவர்கள் ஒரு சிலரே.நீங்கள் தாராளமாக தொடரலாம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.தமிழ் மனத்தில் இணைக்க முயற்சி செய்யுங்கள்.பார்வையாளர் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முரளீதரன் ஐயா

   தங்களின் தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 10. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பரமணியன் ஐயா.

   நான் முதன் முதலில் தமிழ் மணத்தில் சேர்ந்து பதிவிட ஆரம்பித்ததும் நீங்களும் ரமணி ஐயாவும் தான் எனக்கு கருத்திட்டு வாழ்த்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தினீர்கள்.
   உண்மையில் உங்கள் இருவருக்கும் தான் நான் முதலில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 11. தமிழனின் பண்பாடு வரவேற்றலும் விருந்தோம்பலும் தான் அக்கா

  தொடரும் உங்களது நீண்ட பயணம் ...................வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காக்கா அண்ணா... நான் ஏதோ வெள்ளையாக வெண்புறா படம் போட்டதால என்னை அக்காவென்றீர்களா...?
   ம்ம்ம்... இருக்கட்டும்.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க நண்பா.

   நீக்கு
 12. வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அருணா.என் தளத்திலும் வரலாற்றுச் சுவடுகள் 550 வந்தநேரம் தொட்டுச் சொல்லியிருந்தார்.நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் இனிய தோழி ஹேமா...

   “550“ தொடர்பவர்களா....? வாழ்த்துக்கள்.
   நானும் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். வாழ்க! வளர்க!
   “1000“ தொட மேலும் வாழ்த்துகிறேன்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. நன்றி சிட்டுக்குருவி.

   (உங்கள் வலை திறக்கிறதா...?
   நேற்று பலரின் வலையைத் திறக்க முடியவில்லை.
   திறந்தாலும் கருத்துரை இட முடியவில்லை....)

   நீக்கு
 15. என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.. தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், தமிழ் கவிஞர்களுக்கும் அழிவேயில்லை...!

  நன்றி..!!!

  பதிலளிநீக்கு
 16. மலரிலிருந்து மகரந்த தேன் மணம் வீசினால்
  வண்டுகள் தானே பறந்து வந்து அமரும்
  அமர்ந்து தேனை சுவைக்கவும் செய்யும்
  தொடரட்டும் உங்கள் தமிழ் முழக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 17. ''...இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்கிறேன்...''

  உண்மை.
  அது சரி அருணா செல்வம் ஆணா பெண்ணா?.
  முதல் கருத்திடுகையால் வந்த குளப்பம் (தோழி என்று குறிக்கப் பட்டதால்)
  எனக்குப் பிடிக்கும் உமது கவிதை.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி வேதா அம்மா.

   “அது சரி அருணா செல்வம் ஆணா பெண்ணா?.“
   (என்னத்தை சொல்லுறது.... நான் பெண்தான் என்று சொன்னாலும்
   யாரும் நம்பவில்லை)

   நீக்கு
 18. உங்கள் வெற்றிப்பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள். ட்ரீட் எப்பவே முடிந்திருந்தாலும் 100 பாளொயர்ஸ் வந்தவுடன் எங்களுக்கும் ட்ரீட் வச்சிருங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே....

   ட்ரீட் தானே...
   இன்னும் இரண்டு பேர் தான்... காத்திருங்கள்.

   வருகைக்கு மிகவும் நன்றி நட்பே.

   நீக்கு