புதன், 8 ஆகஸ்ட், 2012

கவிபாடும் கண்கள்!! (கவிதை)
கட்டி அணைக்கும் காதலனும்
    கண்ணே என்பான் கனிவாக!
தொட்டில் போடும் தாயவளும்
    தூக்கி மகிழ்வாள் கண்ணென்றே!
மொட்டில் இருக்கும் தேன்போல
    மூழ்கி இருக்கும் காட்சிகளைக்
கட்டும் பாட்டில் கட்டிவிட்டுக்
    கவிதை மொழியும் கருத்தாக!

விண்ணில் இருக்கும் விளக்கென்ற
    வியக்கும் கல்வி அறிவுதனை
மண்ணில் இருக்கும் மாந்தர்கள்
    மயக்கம் இன்றிக் கற்றுவந்தால்
கண்கள் பெற்ற பயன்தனையே
    கடைசி வரையில் பெற்றுவிடும்!
எண்ணும் செயலும் உயர்வாக
    என்றும் தொடர்ந்து புகழெடுக்கும்!

பார்க்கும் காட்சி பாரங்கள்!
    பசுமை நிறைந்த கூவங்கள்!
ஏற்கும் விதியின் விளையாட்டாய்!
    எதிர்க்க முடியாக் கண்மயங்கும்!
வேர்க்கும் உடலில் கண்ணிருந்தும்
    விருப்ப மின்றேல் கண்கலங்கும்!
தீர்க்கும் தெய்வம் வருமென்று
    தேடித் தேடிக் கண்ணுறங்கும்!!


அருணா செல்வம்.
 
( இன்று கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்“ தொடர் -20
தட்டுங்கள்..  http://kavimanam.blogspot.fr/ )

21 கருத்துகள்:

 1. // கட்டி அணைக்கும் காதலனும்
  கண்ணே என்பான் கனிவாக!
  தொட்டில் போடும் தாயவளும்
  தூக்கி மகிழ்வாள் கண்ணென்றே!//

  படித்ததும் ரசிக்க தூண்டியது வரிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க சங்கவி சார்.

   நீக்கு
 2. ம்ம்ம் ......அருமை

  கவிதையின் நடை அழகு

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. நன்றிங்க நண்பரே.

   உங்கள் வலையைத் திறக்க முடிவதில்லை.
   துள்ளுகிறது. ஏன் நாங்கள் எல்லாம் படிக்கக்கூடாது என்று
   இப்படி அமைத்துள்ளீர்களா நண்பரே...?

   நீக்கு
 4. ரசித்து எழுதிய கவிதையை ரசித்தேன்...

  நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல கவிதை!

  ///பார்க்கும் காட்சி பாரங்கள்!
  பசுமை நிறைந்த கூவங்கள்!///

  வித்தியாசமான வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமணம் முடித்து பலநாட்கள் கழித்து வந்தாலும்
   மறக்காமல் என் கவிதையைப் படித்துப் பாராட்டியமைக்கு
   மிக்க நன்றிங்க நண்பரே.

   நீக்கு
 6. அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. //எண்ணும் செயலும் உயர்வாக என்றும் தொடர்ந்து புகழெடுக்கும்!//

  அருமையான வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும்
   பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க நட்பே!

   நீக்கு
 8. விண்ணில் இருக்கும் விளக்கென்ற
  வியக்கும் கல்வி அறிவுதனை
  மண்ணில் இருக்கும் மாந்தர்கள்
  மயக்கம் இன்றிக் கற்றுவந்தால்
  superb

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றிங்க கவிஞரே.

   நீக்கு
 9. அன்பின் அருணா

  அழகிய கவிதை அருமை - சிந்தனை நன்று - சொற்கள் நன்று - மொத்தத்தில் கவிதை நன்று

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு