செவ்வாய், 15 ஜூலை, 2014

சொல்கிறவர் சொன்னால்.... (நிமிடக்கதை)
      “ஏங்க... கொஞ்சம் தலையையாவது வாரிக்கொண்டு வாங்க.“
    “உன் சொந்தக்காரங்க வீட்டு நலங்குக்குத் தானே போறோம். எல்லாம் இது போதும் வா“
     “அதுக்கில்லைங்க... என் தோழி சாந்தியும் வருவாள்.. நிச்சயம் அவ உங்களைப் பார்த்தாள்ன்னா திரும்பவும் நாளைக்கு இதற்கென்றே வீட்டுக்கு வந்து உன் புருஸன் நல்லா டிரஸ்தான் பண்ண மாட்டுறார். தலையையாவது நல்லா சீவிக்கொண்டு வரச் சொல்லக்கூடாதா...?“ என்று கேவலமாக கேட்பாள்... அதுக்குத்தான்..“
     “தோபாரு ராதா... உன் ஃபிரெண்டுக்காக எல்லாம் என்னை நான் மாத்திக்க முடியாது. என்ன பண்ணினாலும் இருக்கிறது தான் இருக்கும். வா. போகலாம்.“ அவன் அவசரப் படுத்தினான்.
      “அதுக்கில்லைய்க... நான் நல்லா டிரஸ்பண்ணிக்கினு வர்றேன். நீங்களும் கொஞ்சம் அழகா வந்தா...“ அவள் முடிக்கவில்லை. “ஏன் நான் இப்படி வந்தா உனக்கு புடிக்கலையா...? என் கூட வர்றதுக்குக் கௌரவ கொறைச்சலா இருக்குதா...? அப்படின்னா என் கூட நீ வரவேணாம். நானே தனியா போயிட்டு வர்றேன். இல்லைன்னா நீ தனியா போயிக்கோ.“ முகத்தில் அடிப்பது போல் செல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
     
      தன் தோழியுடன் செர்ந்து படித்துக்கொண்டிருந்த நிவேதாவிற்குத், தோழியின் அக்கா ராதாவும் அவள் கணவரும் பேசிகொண்டது காதில் விழுந்தது. யோசனையுடன் எழுந்து கூடத்திற்கு வந்து நின்று கொண்டாள்.

     அவர்கள் இருவரும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார்கள். உடனே நிவேதா அவன் எதிரில் வந்து நின்று... “ரெண்டு பேரும் பங்ஷனுக்குப் போறீங்களா...? மாமா நீங்க படுசூப்பர். என் காலேஜ் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் நீங்க தலையைக் கொஞ்சம் லைட்டா சீவிவிட்டு... சட்டையை அழகா இன் பண்ணினால் நடிகர் சசிகுமார் மாதிரி இருப்பீங்கன்னு சொன்னாங்க. நான் நம்பலை. ஆனால் இப்போ தெரியுது. மாமா... உங்களுக்கு இருக்கிற அழகிற்கு நீங்க கொஞ்சம் கேர் எடுத்து டிரஸ் பண்ணுனீங்கன்னா... அந்த நடிகரை விட ரொம்ப அழகா இருப்பீங்க.....“ என்றாள் ஆச்சர்யத்தைக் கண்களில் வரவழித்துக் கொண்டு.
    அவன் மனமகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு மனைவியிடம் திரும்பி “கொஞ்சம் இரும்மா... தோ வர்றேன்“ என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவன் அரைமணி நேரம் கழித்தே வந்தான்...
    அவனைப் பார்த்து விட்டு கண்களால் நன்றியுடன் நிவேதாவைப் பார்த்தாள் ராதா.

அருணா செல்வம்.
(மறுபதிப்பு)

   

43 கருத்துகள்:

 1. அதென்னனு தெரியலை..உங்க கதையெல்லாம் ஆண்களை கொஞ்சம் மட்டமான ஜென்மங்கள்னு எடுத்துச் சொல்றமாதிரியே இருக்கு! Does it sound redundant?

  உண்மையான பெண்ணியவாதினா நீங்கதான்!

  அப்புறம் "இந்த ஒரு தருணத்தில்" இந்தக்கதையைத் தோண்டி எடுத்து மீள்பதிவு செய்றது..ஏதோ "பழிக்குப் பழி" வாங்கிற மாதிரி இருக்கு!

  ஒரு சில எதார்த்தத்தைக் கூட எப்படி குதற்கமாக விமர்சிக்கிறான் பாருங்க இந்த வருண்னு இன்னொரு மட்டமான ஆம்பளை! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் பாஸ் ! ஏன் டென்சன் ஆகுறீங்க? இப்டி சில பேர் இருகாங்கானு கூட தோழி அருணா சொல்லலாம் இல்லையா? நான் கூட இப்படி சில பேரை பார்த்திருக்கேன். எங்க மாமா ஒருத்தர் இருக்கார். எவ்ளோ முக்கியமான விசயமா இருந்தாலும் என் அத்தை சொல்றத காதிலே வாங்கமாட்டார். அவங்க வாழ்வின் முக்கியமான பல விசங்களை முடிவெடுக்க சொந்தத்தில் ஒரு மீடியேட்டர் (கணவருக்கு தான்) தேடிய படியே தான் இருக்குறாங்க. அட அவரைவிட முப்பது வயது சிறிய என்னைக்கூட மதிப்பார் ஆன அத்தை மதிக்கமாட்டார்.ஒன்னு தெரியுமா இந்த கதையை படிக்கும்போதே இந்த நிவேதாவிற்கு ஏன் இந்த முந்திரிக்கொட்டைத்தனம் இப்போ வருண் கிட்ட வாங்கி கட்டிக்கப்போற பாருன்னு நினைத்தேன். அவ லக்கி கேர்ள் :))))) தப்பிச்சுட்டா:))
   பிரீன்ட்லி தான் சொல்றேன். கோச்சுகாதீங்க பாஸ்!

   நீக்கு
  2. ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
   //இந்த வருண்னு இன்னொரு மட்டமான ஆம்பளை! :)))//மாற்று க்கருத்துக்கு மதிப்பளிக்கும் கலைஞன் தான் வளர முடியும் என்பதை உணர்த்ததால் எனக்கு அப்படி தோணலை. தோழியும் அப்படித்தான்னு நினைக்கிறேன் சகா:))
   நானும் நிவேதா மாதிரி உங்க டிஸ்கசன் ல மூக்க நுழைக்கிறேனோ? அட எல்லாம் நம்ம சனங்க தானே:))

   நீக்கு
  3. அடடா இந்தவார வலைச்சர ஆசிரியை ஏக பிஸியா இருப்பாங்கனு நெனச்சேன்..இங்கேயும் வந்துட்டாங்களா!!! :)))

   மைதிலி டீச்சர்: இதுபோல் ஆண்களை சுட்டிக்காட்டும்போது .. முக்கியான பெண்கள் சுட்டிக்காட்டும்போது என்களைமாரி ஆண்களுக்குத்தான் அவமானமா இருக்கணும்னு நான் நம்புகிறேன்.

   கற்பனைதானே? என்று விட்டுப்போக முடியாது. காரணம்? கற்பனையை விட நிஜத்தில் இந்தமாரி ஜந்துக்கள் அதிகம் என்பதை அறிந்த (அப்)பாவி நான்!

   "ஏன் இப்படி நம்ம மானத்தை வாங்குறான் இந்தாளு!"னு டென்ஷன் ஆகுறது இயற்கைதானே? அதை நீங்க தவறென்று கருதினால்.. "எங்க பிரச்சினை எங்களுக்கு! இதெல்லாம் உங்களுக்கெப்படிப் புரியும்?"னு நாங்க ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். சரியா?

   மற்றபடி, "இவர்களை" இப்படி சுட்டிக்காட்டுபவர்கள்மேல் தவறு கண்டுபிடிப்பதுதான் தவறு. என்னுடைய ரியாக்ஷன் இந்த மட்டமான ஆம்பளைங்க மேலேதான். நிச்சயம் அதை சுட்டிக்காட்டும் அன்னையர்கள் மேலே இல்லைனு நீங்க என்னைக் கொஞ்சம் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்!

   டீச்சரையும் மாணவியாக்கி ஒரு சில நேரங்களில் செமினார் கொடுக்க வேண்டியிருக்கு, பாருங்க. :)))

   ஆக, இதில் தோழி அருணாவை குறை சொன்னாலோ, அவர்கள் மேல் கோபப்பட்டாலோ அது முற்றிலும் தவறான "குழந்தைத்தனம்" என்றறிந்த மாணவன் நான்னு நீங்க நம்பியே ஆகணும் டீச்சர். சரியா?

   Take it easy! :)


   நீக்கு
  4. அமென்:)))
   good morning friends @ அருணா அண்ட் வருண்:))

   நீக்கு
  5. வருண் அவர்களுக்கு வணக்கம்.

   நேரம் போதாமைக் காரணமாக யாரும் அதிகம் படிக்காத இந்தக் கதையை எடுத்து மீள்பதிவு இட்டேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. இந்த உண்மையை நீங்கள் அவசியம் நம்ப வேண்டும் நண்பரே.

   தவிர ஒரு படைப்புக்கு எதிரான விமர்சனம் வந்தால், அதைப் படைப்பாளி தன் படைப்பின் கருத்தை, நோக்கத்தை விளக்குவதே ஆரோக்கியம். அந்த வகையில் தோழி மைதிலி அவர்கள் பதில் சொல்லி இருந்தாலும் இக்கதையை எழுதியவள் என்ற இடத்திலிருந்து பதிலளிக்கிறேன்.

   அதென்னனு தெரியலை..உங்க கதையெல்லாம் ஆண்களை கொஞ்சம் மட்டமான ஜென்மங்கள்னு எடுத்துச் சொல்றமாதிரியே இருக்கு! -

   அப்படியெல்லாம் இல்லைய்ங்க. எடுத்ததும் கதையின் நாயகன்(?) என்ன சொல்கிறான் என்று பாருங்கள்.

   “உன் சொந்தக்காரங்க வீட்டு நலங்குக்குத் தானே போறோம். எல்லாம் இது போதும் வா“

   இது என்ன மனநிலையைக் குறிக்கிறது? அவனுக்கு விருப்பமான இடம் எங்கு சென்றாலும் நன்றாக உடுத்திக் கொண்டு செல்வான். தன் மனைவியின் உறவினர் என்றதும்....
   ஏங்க இந்த ஆள் இப்படி....?
   இந்த இடத்தில் நான் பெண்ணீய வாதியாக இருப்பதில் தவறில்லை தானே....

   தொடர்ந்து வந்து என் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள் நண்பரே.

   மிக்க நன்றி.

   நீக்கு
  6. மிக்க நன்றி தோழி.

   எனக்காக எவ்வளவு பெரிய ஜாம்பவானிடம் வாதாடி இருக்கிறீர்கள்....!!!

   நீக்கு
 2. ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள்
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   சந்திரி சாக்குல அந்த ஆளை மாடு என்று சொல்லி விட்டீர்களே.....)))

   நான் சொல்லவில்லைப்பா....

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஏங்க ஸ்ரீராம் ஹிந்தியில் சிரித்தீர்கள்....?

   தமிழில் அழகாக “கலகல“வென்று சிரியுங்கள்.....

   நன்றி ஸ்ரீராம் ஐயா.

   நீக்கு
 4. மனைவி சொன்னா மாத்த மாட்டாங்க, ஆனா மனைவியோட பிரென்ட் சொன்னா மாத்துவாங்களா? ஏதோ நெருடுற மாதிரி இருக்கே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்கூல் பையன்..... நன்றாகப் படித்துப் பாருங்கள். அது மனைவியின் தோழி இல்லை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   நீக்கு
 5. தோழி உங்ககிட்ட சொல்லவேண்டியதை வருண் கிட்ட சொல்லிட்டேன். தம உங்களுக்கு:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி.

   ஏற்கனவே நம்ம பேரும் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று சாபம் வேறு விட்டிருக்கிறார்.... அதிகம் பேசினால் அதை 200 ஆண்டுகள் என்று கூட்டிவிட போகிறார். அவரிடம் நாம் சற்று நல்ல பிள்ளைகள் போல் நடிக்கலாம்.

   நன்றி தோழி.

   நீக்கு
 6. சிம்பிளா டிரெஸ் பண்ணி வருகிறவனை பாராட்டாம என் பிரெண்டு ஏதாவது சொல்லுவா அதனால அவள் குறை சொல்லாத அளவிற்கு நல்ல டிரெஸ் பண்ணி வாருங்க என்று சொல்லி சொல்லி அதன் பின் அவன் உங்க பிரெண்டுக்கு பிடிச்ச மாதிரி டிரெஸ் பண்ணி கடைசியியில அவளையே பிடிச்சுக்க போறாருங்க. அப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளிக்காத மாடு குளத்துக்குப் போனால் என்ன?
   ஆற்றுக்குப் போனால் என்ன? (புதுமொழி)
   எங்கே போனாலும் அதைக் குளிப்பாட்டிவிட வேறு ஒருத்தர் வேண்டும் என்பது ராதாவுக்குத் தெரியும்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி “உண்மைகள்“

   நீக்கு
 7. மனைவிக்கு அவ்வளவு தான் மரியாதை...? (!!!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க அண்ணா. பாவம் பெண்கள்!!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 8. ஆண்கள் உளவியல் புரிஞ்ச பொண்ணு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிவேதாவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை இல்லையா.... அப்படித்தான் இருப்பாள். கால்யாணம் ஆகிவிட்டால்....
   என்னவோ போங்க தோழி....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 9. இப்படியெல்லாம் வழி இருக்குதோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் நிறைய இருக்கிறது தோழி.... சொன்னால் ஆண்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்....)))

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 10. சொல்ற விதத்தில் சொன்னா எதுவுமே வொர்கவுட் ஆகும்...அதுவும் நேர்மறையாகச் சொன்னால்.....நல்ல கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க.நேராகச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள் ஒரு சிலர்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

   நீக்கு
 11. ஆலோசனை வழங்குற பொண்ணு அழகாகவும் இருந்தாத்தான் ஆண்கள் கேட்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களில் அசிங்கமானவர்களும் உண்டா நம்பி அவர்களே....??

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நம்பி ஐயா.   நீக்கு
 12. ராதாவிற்கு பெரிய மனசுதான். இயல்பாகவே அடுத்தவங்க சொல்லி கேட்டால் மனைவிமார்கள் சும்மா இருக்கமாட்டார்கள், வாழ்நாள் முழுக்க "நான் சொன்ன கேப்பீங்களா" என்று சொல்லிக்கட்டிக்கொண்டே இருப்பார்கள்.

  நல்ல சிறுகதை அருணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராதா சொல்வதைத் தான் அவன் கேட்டபாடில்லையே....

   தவிர சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். எவ்வளவு கத்தி என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று ராதாவை விட்டுவிடச் சொல்கிறேன் அண்ணா....)))

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

   நீக்கு
 13. வணக்கம்
  நிமிடக்கதையை மிக அருமையாக நகர்த்தியுள்ளீர்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 14. எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லணும்...
  சரிதான்.... சசிக்குமாருக்குப் போட்டியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமார் காதைக் கொடுங்கள். நான் சொல்வதை யாரிடமும் சொல்லாதீர்கள்..... “சசிக்குமாரை எனக்குப் பிடிக்காது. சசிக்குமாரை எல்லாம் மக்கள் ரசிக்கிறார்களே..... என்று நினைத்துச் சிரிக்கிறவள் நான்.“ அவ்வளவு தான்ப்பா ரகசியம். யாரிடமும் சொல்லி விடாதீங்க.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 15. சிறந்த கதை
  நல்ல வழிகாட்டல்
  சொல்கிறவர் சொன்னால்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

   நீக்கு
 16. சில நேரத்துல சில விசயங்களை அப்படி இப்படி மாத்தி சொல்லித்தான் மண்டையில ஏத்த வேண்டியிருக்கு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேற வழி...

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சாமானியன் சாம்.

   நீக்கு
 17. நடை உடை பாவனை என்பது நமக்கேயுரிய சிறப்பம்சம். இதில் இன்னொருவர் தலையீடு என்பது தவறான முன் உதாரணமாக அமையும். குறிப்பாக தோழி சாந்தியின்
  கமென்ட்.
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்லு வௌக்காமல் இருப்பது அவரவர் இஷ்டம்.
   ஆனால் நம்ம மூஞ்சி கிட்ட வந்து சிரிக்கக்கூடாது இல்லையா?

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நம்பி ஐயா.


   நீக்கு
 18. ஸ்கூல் பையனின் நெருடல் நிஜம்தான்
  குடும்ப விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவது
  குத்து விளக்கு(பாவேந்தரின் குடும்ப விளக்கு)க்கு
  அழகு அல்ல!
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தானாய்த் தெரிஞ்சிக்காதவங்க அடுத்தவர் சொன்னாலாவது
   தெரிஞ்சிகக்கிறது நல்லது தானே....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நம்பி ஐயா.

   நீக்கு
 19. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு