வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பேதையாக்கி விட்டாயே!! (கவிதை)



 பெருகிடுதே ஆசைவெல்லம்
    பெண்ணழகே என்செய்தாய்!
உருகிடுதே அன்புநெஞ்சம்
    உண்ணாமல் துவண்டேனே!
மருண்டிடுதே மான்விழியோ
    மனம்மயங்கிக் கிடந்தேனே!
விரும்பிடுதே அழுதமொழி
    வேண்டிடவும் தருவாயா?

கண்ணென்றும்! மணியென்றும்!
    கனியென்றும்! கலையென்றும்!
பண்ணென்றும்! பாவென்றும்!
    பாடுகின்ற குயிலென்றும்!
உண்ணென்றும்! உணவென்றும்!
    ஊட்டுகின்ற தாயென்றும்!
பெண்ணுன்னைப் பாடவைத்துப்
    பேதையாக்கி விட்டாயே!!


 அருணா செல்வம்

27 கருத்துகள்:

  1. /// கண்ணென்றும்! மணியென்றும்!
    கனியென்றும்! கலையென்றும்!
    பண்ணென்றும்! பாவென்றும்!
    பாடுகின்ற குயிலென்றும்!
    உண்ணென்றும்! உணவென்றும்!
    ஊட்டுகின்ற தாயென்றும்! ///

    அருமை வரிகள்... நன்றி... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. வே
    பதிவர் சந்திப்புகான ஏற்பாடுகள் செய்ய, வேலைமிக,இடையில் வர இயலவில்லை! கவிதையில் காதல் சோகம்கரைபுரண்ட வெள்ளமென ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் புலவர் ஐயா.

      காதல் சோகமும் கவிதையில் சுவையைத் தானே கொடுக்கும் ஐயா.
      புரிதலுக்கு நன்றிங்க.

      நீக்கு
  3. கண்ணென்றும்! மணியென்றும்!
    கனியென்றும்! கலையென்றும்!
    பண்ணென்றும்! பாவென்றும்!
    பாடுகின்ற குயிலென்றும்!
    உண்ணென்றும்! உணவென்றும்!
    ஊட்டுகின்ற தாயென்றும்!
    பெண்ணுன்னைப் பாடவைத்துப்
    பேதையாக்கி விட்டாயே!!
    /////////////////////////////////

    அழகாக செதுக்கள்......அழகிலும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிட்டுக்குருவி...
      கல்லை வார்த்தையால் செதுக்க
      கவிதை வந்துவிட்டதுங்க.

      நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  4. தங்கள் கவிதைகள் அனைத்தும்
    மிக மிக அருமை
    தங்களைப் பாடவைக்கும் அந்தத்
    தேவதைக்கு ( நிஜமாயினும் /கற்பனையாயினும்)
    எங்கள் நன்றியினைச் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவளுக்கு உங்களுடன் சேர்ந்து நன்றி கூறுகிறேன் ஐயா.
      உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  5. அழகான வரிகள். அருமையான கவிதை. தொடருங்கள் தோழியே

    பதிலளிநீக்கு
  6. // கண்ணென்றும்! மணியென்றும்!
    கனியென்றும்! கலையென்றும்!
    பண்ணென்றும்! பாவென்றும்!
    பாடுகின்ற குயிலென்றும்!
    உண்ணென்றும்! உணவென்றும்!
    ஊட்டுகின்ற தாயென்றும்!
    பெண்ணுன்னைப் பாடவைத்துப்
    பேதையாக்கி விட்டாயே
    //

    அழகான வரிகள் .. அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க நட்பே.

      நீக்கு
  7. அருமையான காதல் கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.

      நீக்கு
  8. மனதில் இனிக்கச் செய்யம்
    கரும்புக் கவிதை...
    புசித்து சுவைத்தேன்...\

    மீண்டும் விடுமுறை ஆரம்பம்..
    கடந்த மூன்று நாட்கள் பயணத்தில் இருந்தேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறையை மனைவி மக்களுடன் நன்றாக
      கழித்துவிட்டு வாருங்கள் நண்பரே.
      விடுமுறை நேரத்திலும் எனக்கு ஊக்கமளித்துப் பாராட்டியதற்கு
      மிக்க நன்றிங்க நண்பரே.

      நீக்கு
  9. எப்போதும்தானே பாடுறீங்க.இப்ப மட்டும் என்ன அலுப்பு.பேதையாய் பாடுவாய் நண்பா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      இது அலுப்பு இல்லைங்க. காணாத கவலை. தேடுகிறேன்.
      நன்றிங்க ஹேமா.

      நீக்கு
  10. அழகிய எதுகைகள்
    தலையாய எதுகைகளில் பாட
    ரூம் போட்டு சிந்திப்பீா்களா?

    என்னென்பேன் ஏதென்பேன்
    இனிக்கின்ற இக்கவியை
    பொன்னென்போன் புகழ்என்பேன்
    பூந்தமிழின் அருளென்பேன்
    இன்னும்பல கவிஎழுத
    இருகைகள் ஏந்திடுவேன்
    அன்புநிறை நெஞ்சமுடன்
    அருணாசெல்வம் பாடுகவே

    தமிழ்ச்செல்வன் பிரான்சு
    http://tamilselvane.blogspot.fr
    mail: tamilselvane1990@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தமிழ்ச்செல்வன் ஐயா.

      நான் எழுதிய பாடல் “கலிவிருத்தம்” - நான்கு வரிகள். வரிக்கு நான்கு காய்ச்சீர் வரவேண்டும்.
      உங்களின் கவிதை நன்றாக உள்ளது. ஆனால் அதில் “இன்னும்பல” அருணாசெல்வம்” இரண்டும் கனிச்சீராக வந்துள்ளது. கவனித்து எழுதுங்கள் ஐயா.

      (ரூம்பெல்லாம் போட்டால் எனக்குத் துாக்கம் தான் வரும்)

      நீக்கு
  11. அற்புதமான வரிகள் மனதில் சம்மனமிட்டு அமர்ந்தன.

    பதிலளிநீக்கு