புதன், 8 ஆகஸ்ட், 2012

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும்...!! (1)


     இது ஒரு மொக்கை பதிவு. யாரும் வந்திடாதீங்க. அப்படியும் மீறி வந்துட்டீங்கன்னா.... அந்த உண்மையை மறைக்காமல் சொல்லிவிடனும். அதுக்கு பதிலா கல்லு கட்டையை எல்லாம் தூக்கக் கூடாது. ஆமா... சொல்லிட்டேன்.


    உங்கள் எல்லோருக்கும் பாட்டி வடை சுட்ட கதை தெரியும் இல்லையா....?
    நிச்சயமாக தெரிந்திருக்கும். அப்படி தெரியாமல் யாராவது இருந்தால் எந்தப் பாட்டி பக்கத்தில் இருக்கிறார்களோ.... (அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
    இப்போ... எனக்கு என்ன தெரியனும் என்றால்... இந்த கதையில் வடையைச் சுட்டது...

பாட்டியா....?
காக்காவா....?
நரியா....?


   இதற்கு பதில் தெரியாமல் நான் ரொம்பவும் குழம்பி போய்விட்டேன். இதே மாதிரி நிறைய உண்மைகள் எனக்கு தெரியாததால் உங்களிடம் இப்படி அடிக்கடி கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்ன்னு.... சரிசரி நிறுத்திக்கிறேன்.


21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதில் சொல்லாமல் இப்படி சிரிச்சி மழுப்பிட்டீங்களே
      தனபாலன் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. எவ்வளவு நாளைக்குதான் சீரியஸா
      இருக்கிற மாதிரியே நடிக்கிறது பாஸ்...?

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஜோக்கு இல்லைங்க கவிஞரே...

      நீங்கள் அந்தக் காக்கா காவியத்தை வெண்பாவில் எழுதியிருந்தும் கூட... உண்மையிலே பதில் உங்களுக்கும் தெரியலை போல...

      நீக்கு
  4. கொலவெறியோட கிளம்பியிருக்கீங்க போல தெரியுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யோ.... அந்த அளவிற்கு எல்லாம் நான் பயங்கரவாதி இல்லைங்க. பாமரன்ங்க நண்பரே.

      நீக்கு
  5. இந்தக் கதையின் நீதியில்
    எனக்கும் குழப்பம் உண்டு
    வடையை இழந்த பாட்டியைவிட்டு விட்டு
    நாம் காக்கா நரி குறித்துத்தான் இந்த கதையில்
    கவனம் கொள்வோம்

    சிந்திக்கச் செய்யும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய நீதிக்கதைகள் எல்லாம் இப்படி குழப்புகிறது தான் ரமணி ஐயா.
      சின்னப்பிள்ளையாக இருந்தபோது ஒன்றும் தெரியாமல் கேட்டுவிட்டோம்.... ஆனால் நாம் இப்பொழுதுள்ள சின்னபிள்ளைகளுக்கு அதே கதைகளைச் சொல்லும் பொழுது அவர்களின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழிக்கவேண்டியுள்ளது ஐயா.
      நன்றிங்க.

      நீக்கு
  6. ஆஹா..
    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..
    முடியல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பதிலைச் சொல்லாமல் சிரித்து
      மழுப்பிவிட்டீர்களே நண்பரே...

      நீக்கு
  7. பாட்டி சுட்ட வடையை காக்கா சுட, காக்கா சுட்ட வடையை நரி சுட்டுட்டுப் போயிட்டு. அவ்வளவுதான். கதை முடிஞ்சி போச்சி. எழுந்து போய் அடுத்தப் பதிவுக்கு ஒரு அழகான கவிதையைத் தேத்துகிற வழியைப் பாருங்க தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி அக்கா.... நீங்கள் மட்டும் தான் பதில் சொன்னீர்கள். நன்றிங்க .ஆக மூனு பேருமே வடையைச் சுட்டுட்டாங்க... கதை முடிஞ்சி போச்சி... ஓ.கே.

      இதற்காக... உங்களுக்காகவே ஓர் அழகான பதிற்றந்தாதி போடுகிறேன். யாருக்கும் அவ்வளவாக புரியாது. இருந்தாலும் தமிழுக்காக படிக்கட்டும்.
      நன்றிங்க அக்கா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. சரி விடுங்க சசிகலா...
      நமக்குத் தெரியாமல் நிறைய நடக்குதுப்பா...

      நீக்கு
  9. ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கிறீங்க......
    மூனு பேருமே வடையச் சுட்டவங்கதான்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி....

      இதனால் கிடைத்த பயன் என்னவென்றால்.... “சுட்டது” என்ற தமிழ் வார்த்தை இன்று எதையாவது சமைத்ததை மட்டும் குறிக்காமல் “திருட்டு“ என்பதையும் குறிக்கும் சொல்லாகிப் போய்விட்டது என்பது புரிகிறது....

      நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  10. அன்பின் அருணா - அமுதம் சொட்டும் அழகுக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் - சுட்டது யாரெனக் கேட்கும் உரை - தேவை தானா ? தேவை தான் - சிந்தனையில் ஒரு மாற்றம் தேவை தான் - சற்றே மற்றவர்களின் இரசனைக்கும் பரிமாறிய உரை நன்று. சுடுவதிலும் வேறுபாடு - பாட்டிக்கும் - காக்காய் நரிக்கும் சுடுவதில் வேறுபாடு. ஆக் சுடப்பட்டது வடை தான் - சுட்டவர்களின் குணம் தான் வேறு - இறுதியாகச் சுட்டது நரிதான். பாவம் பாட்டி - மொக்கையும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு