காதல் பிடிக்கா தென்பவரும்
காதல் கவிதை ரசித்திடுவார்!
காதல் உண்மை என்பவரும்
காதைத் தீட்டிக் கவிகேட்பார்!
காதல் பொய்யே என்பவரும்
கவிதை அழகில் மயங்கிடுவார்!
காதல் காமம் என்பதெல்லாம்
காலம் கொடுத்த வரமன்றோ!!
நடக்கும் வாழ்க்கைச் சூழலிலே
நாளும் காதல் இல்லையென்றால்
உடம்பு மட்டும் இங்கிருக்கும்
உணர்வோ இன்றி உலவிவரும்!
திடமாய் மனதும் இருந்தாலும்
தேவை எதையும் நினையாமல்
இடமாய்ப் பார்த்தே அமர்ந்துகொண்டு
இறப்பை எண்ணிக் காத்திருக்கும்!
ஓடி ஓடி உழைக்கின்றோம்!
உயர்வைத் தேடி அலைகின்றோம்!
தேடித் தேடிப் பொருள்குவித்தும்
தேடு கின்றோம் நிம்மதியை!
நாடி நலிந்து போனபின்பே
நடந்த தெல்லாம் எண்ணஎண்ண
கூடி மகிழாக் காதலின்றேல்
கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!!
நல்ல வரிகள்... மிகவும் பிடித்த உண்மை வரிகள் :
பதிலளிநீக்கு/// ஓடி ஓடி உழைக்கின்றோம்...!
உயர்வைத் தேடி அலைகின்றோம்...!
தேடித் தேடிப் பொருள் குவித்தும்
தேடுகின்றோம் நிம்மதியை...!
நன்றி...
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கு
நீக்குமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
கூடி மகிழாக் காதலின்றேல்
பதிலளிநீக்குகொண்ட வாழ்க்கை வீண்அன்றோ//
Amen.
ஆமாங்க ... வீண்தாங்க ரெவெரி சார்.
நீக்குநன்றிங்க.
ஆமென்.
இனிமையான சந்தம்.அழகான பொருள். கலக்கல்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.
எங்கும் காதல் எதிலும் காதல்.வாழ்க காதல்.வளர்க தங்கள் கவிப் பயணம்.
பதிலளிநீக்குவணக்கம் தோழி.
நீக்குஉங்களின் முதல் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன்.
நன்றிங்க.
காதலின் உணர்வில்லையேல்
பதிலளிநீக்குகாணும் பொருளெல்லாம்
வெறுமைதான் ///
அழகிய வரிகளால் இனிய காதலின் விளக்கம்..
தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க நண்பரே.
ஐயோ....டச்சிங் டச்சிங்......வரிகள் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது......
பதிலளிநீக்குசிட்டுக்குருவி...
நீக்குதங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க சிட்டு...
''..காதல் காமம் என்பதெல்லாம்
பதிலளிநீக்குகாலம் கொடுத்த வரமன்றோ...''
மிக அருமை. நல்ல சொற் கட்டு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கும் அழகான பின்னோட்டத்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம் அவர்களே.
வந்திட்டேன் அருணா.சுகம்தானே.காதல்தான் வாழ்வைப் பிடிப்போடு வாழவைக்கிறது !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குவந்திட்டீங்களா....? மிக்க சந்தோசம். நலமாக இருக்கிறீர்களா...?
வந்ததும் என் கவிதையைப் படித்து அழகிய பின்னோட்டம் இட்டதிற்கு மிக்க நன்றிங்க தோழி.
நாடி நலிந்து போனபின்பே
பதிலளிநீக்குநடந்த தெல்லாம் எண்ணஎண்ண
கூடி மகிழாக் காதலின்றேல்
கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!!//
அருமையான வரிகள்
இலக்கண வரம்புக்குள்
இயல்பாக விழுந்த வாரத்தைகள்
கருத்துக்கு சுவையூட்டிப் போகின்றன
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி ஐயா...
நீக்குஉங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் எழுத துாண்டுகிறது.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.
உண்மையை விளக்கும் சிறந்த வரிகள்..முதல் முறையாக தங்கள் வலைப்பக்கம் வந்த எனக்கு ஒரு பரிசாய் இக்கவிதை..தொடருங்கள்.நன்றி.
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகையை வணங்கி
நீக்குவரவேற்கிறேன் குமரன் ஐயா.
தங்களின் அழகிய பின்னோட்டத்திற்கு
மிக்க நன்றிங்க குமரன் ஐயா.
உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்
பதிலளிநீக்குகவிதை அருமை
மிக்க நன்றிங்க தோழரே.
நீக்குமிக்க நன்றிங்க நண்பரே!
பதிலளிநீக்கு