புதன், 4 ஜூலை, 2012

அன்னை என்றதும்...!!! (கவிதை)அன்னை என்றதும்
   ஆவியைத் தொடுதே
      அதிசயம் என்னவது?
தன்னில் வைத்துநல்
   தரணியில் காத்திடும்
      தன்னலம் அற்றதது!
உன்னில் உள்ளதும்
   என்னில் உள்ளதும்
      உலகினில் உயர்ந்தது!
இன்னல் போக்கிநல்
   இனிமையை ஊட்டிடும்
      இன்பத்தின் எல்லையது!

மண்ணில் வாழ்ந்திடும்
   மாபெரும் தெய்வமாய்
      மனதினில் நிற்பதது!
விண்ணில் பொழிந்திடும்
   விளைநிலம் குளிர்ந்திட
      விளைத்திடும் அமிழ்தமது!
பெண்ணில் உயர்வென
   பெற்றநற் பேற்றினால்
      பேதமை அற்றதது!
கண்ணில் உள்ளநல்
   கருவிழி ஒளியினைக்
      காத்திடும் இமையதுவே!

முன்னை தெய்வங்கள்
   முன்னே இருந்ததென
      மூத்தோர் முழங்கினரே!
அன்றும் கண்டதில்லை!
   இன்றும் கண்டதில்லை!
      இன்னும் தேடுகின்றோம்!
அன்னை உள்ளத்தின்
   அருளைக் கண்டபின்னே
      அன்பெனும் தெய்வமெலாம்
முன்னே தெரிந்தது
   மூத்தோர் சொன்னநல்
      முப்பெருந் தேவிகளாய்!!!

     

21 கருத்துகள்:

 1. தமிழும்
  கவிதையும்
  தாய்மையும் ம்ம்ம்... அருமை சகோ

  பதிலளிநீக்கு
 2. அன்னை உள்ளத்தின்
  அருளைக் கண்டபின்னே
  அன்பெனும் தெய்வமெலாம்
  முன்னே தெரிந்தது//
  அன்னைக்கு நிகர் ஏது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னைக்கு நிகர் ஏது?

   சசிகலா... நானும் அன்னைக்கு நிகராக
   ஏதாவதைத் தேடி எழுதனும்ன்னு தான் முயற்சிக்கிறேன்.
   ஆனால் கிடைக்கவில்லைப்பா....

   உண்மையில் நீங்கள் சொன்னது போல்
   அன்னைக்கு நிகர் உலகில் எதுவுமில்லை தாங்க.

   நன்றிங்க சசிகலா.

   நீக்கு
 3. ஆஹா... பெற்றவளின் அருமையைப் பேசிய கவிதை சூப்பர்பா அருணா. மனசில் நின்னது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனா.... எனதருமை ஃபிரெண்ட்...
   நீங்கள் கொஞ்ச காலமாக வலையின் பக்கம் வரவில்லை என்பது தெரியும்.
   ஆனால் வந்ததும் நான் எழுதிய.. நீங்கள் படிக்காத அனைத்துப் பதிவையையும் படித்து பின்னோட்டம் இடுவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

   உண்மையில் மிக்க சந்தோஸம்ப்பா...

   நன்றிப்பா நிரஞ்சனா....

   நீக்கு
 4. அழகாக இருக்கிறது வரிகள்

  பதிலளிநீக்கு
 5. முன்னறி தெய்வத்திற்கு நிகரேது?

  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க மனவிழி சத்ரியன்...
   அன்னைக்கு நிகர் எதுவுமே இல்லைதாங்க.

   தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

   நீக்கு
 6. அழகிய கவிதை...

  பதிலளிநீக்கு