ஞாயிறு, 21 ஜூலை, 2013

என் முதல் காதல் அனுபவம்!!

   நான் எப்பொழுது அவனைப் பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் எங்கோ... எப்பொழுதோ... பார்த்திருக்கிறேன். நேற்று இரவு முழுதும் குப்புற படுத்தும், விட்டத்தைப் பார்த்தபடி மல்லாக்க படுத்தும் யோசித்தேன்.... யோசித்தேன்.... யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் ஞாபகம் வரவில்லை. பிறகு விட்டுவிட்டேன்.
   ஆனால் அவன் முதன் முதலில் என் வீட்டிற்கு வந்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவன் முதன்முதலில் என் வீட்டிற்கு என் கணவருடன் தான் வந்தான். அப்பொழுது நன்றாக கொழு கொழு என்று இருந்தான். அன்று அவன் வந்தது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை.
   அவனை நேராக என் கணவர் தன் அறைக்குள் அமர்த்தி விட்டார். அந்த அறைக்குள் நான் அவ்வளவாகப் போகமாட்டேன். அதனால் அவன் இருந்ததே ரொம்ப காலமாக கவனிக்க வில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் என் கணவர் எந்த நேரமும் அவனுடன் தான் பொழுதைப் போக்கினார்.
   அதனால் எனக்கும் அவருக்கும் ஒரு நாள் சண்டைக்கூட வந்தது. அப்பொழுது அவர், “உனக்கு என்ன தெரியும்? பத்தாம பசலி. வந்து கொஞ்ச நேரம் பழகிப்பார். அப்பொழுது தான் அருமை புரியும்“ என்று சொல்லித் திட்டிவிட்டு மீண்டும் அவனுடனே விளையாடினார். நிறைய விளையாட்டுகள் விளையாடுவார். பேரெல்லாம் ஞாபகம் இல்லை.
    நானும் சில நேரம் வேறு வழியில்லாமல் அவர், அவனுடன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது கூட அவன் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அவன், என்னைக் கண்சிமிட்டிப் பார்ப்பான். நான் கண்டுக்காமல் இருப்பேன்.
    ஒரு நாள் அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் ஒரு போன்கால் வந்ததும் அவனை அப்படியே விட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார். அன்று தான் அவனை நான் முதல்முதலில் தொட்டேன். தொட்டதும் ஏதோ என்னை ஏற்கனவே நன்றாகத் தெரிந்தவன் போல் நான், என்ன சொன்னாலும் அதன்படி கேட்டு நடந்தான்.
    நான் அவனை ஏதோ “பெரிய இவன்“ என்று நினைத்திருந்தேன். கடைசில் பார்த்தால்.... மிகவும் சாதாரணமானவனாகப் பழகினான். ஒரு சிலரைப் பழகப் பழகத் தான் பிடிக்கும் என்பது போல அவனிடம் பழகப் பழக எனக்கு அவனை ரொம்ம்ம்ம்ப பிடித்துப்போனது. சொல்லப்போனால் அப்பொழுது தான் அவன் என் மனத்தில் இடம் பிடித்தான்!!!!
    அதிலிருந்து நான் அவனுடன் விளையாட ஆரம்பித்தேன். அப்பொழுது அவனுக்குப் பிரென்சு மொழி மட்டும் தான் தெரியும். ஏதோ இரண்டாவது வழிமுறை கல்வி (செகண்ட் லாங்வேஜ்) பிரென்சு எடுத்துப் படித்திருந்ததால்... அவனிடம் பழகி விளையாட எந்தத் தடையும் இல்லை.
    தொடக்கத்தில் என் கணவர், நான் அவனுடன் விளையாடுவதைக் கண்டும் காணாதவராய் இருந்தார். ஆனால் போகப் போக நான் அதிக நேரம், ஏன்... இரவில் கூட அவனுடனே இருப்பதைக் கண்டு என்னைக் கண்டிக்க ஆரம்பித்தார். அப்பொழுதெல்லாம் எனக்கு அவர் மேல் கோபம் கோபமாக வரும்.
    அவர் கண்டிக்கும் பொழுதுதான் எனக்கு,  அவன் மீது அளவுக்கதிமான ஆசை வந்தது. அவரின் கண்டிப்பைக் கூட அலட்சியம் செய்துவிட்டு அவனுடன் பொழுதைப் போக்கினேன். இதனால் இரவில் தூக்கம் கெட்டது. முகம் சோர்வடைந்தது.
    இதைக்கண்ட என் கணவர் ஒருநாள், அவன் இருந்த அறையைப் பூட்டிச் சாவியை வேலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். எனக்கு வந்தது பாருங்க கோபம்..... கோபம்ன்னா கோபம் அவ்வளவு கோபம். ஆனால்... கோபம் வந்து என்ன செய்வது...? பேசாமல் கவலையுடன் காத்திருந்தேன். அப்பொழுது தான் நான் அவன்மேல் வைத்த காதலை உணர்ந்தேன்.
    என் கணவர் வந்ததும் அவரிடம் சண்டை போட்டேன். சாவியைக் கொடுக்கும் படி கேட்டேன். ஆனால் அவர் என்னை அலட்சியப் படுத்தினார். நான் அழுதேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. இரண்டு நாள் போனது... அவனைப் பார்க்காமல் எனக்குச் சாப்பிட, தூங்க... எதுவும் பிடிக்கவில்லை. ஒரு ஐடியா வந்தது. ஒரு கள்ளச் சாவி தயாரித்தேன். (ஒன்றுமில்லை... பூவைக்கும் சைடுஊசிதான்) சற்று கடினப்பட்டு திறக்க திறந்து கொண்டது. அதிலிருந்து அவர் வேலைக்குப் போனதும் நான் பூட்டைக் கள்ளசாவி போட்டுத் திறந்து அவனுடன் விளையாடினேன்.
    நான் இப்படியே இருந்திருக்கலாம்.... நேரம் யாரைவிட்டது? ஒரு நாள் இரவு என் கணவர் தூங்கும் பொழுது, எனக்கு அவனுடன் விளையாடும் ஆசை வந்தது. எழுந்து போய் அவருக்குத் தெரியாமல் கள்ளசாவி போட்டு திறந்து விளையாடினேன். அவர் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் சொல்லவில்லை!
   ஆனால் மறுநாள், நான் தூங்கி எழுந்துப் பார்த்தால் அவனைக் காணவில்லை. வீடு முழுதும் தேடினேன்... தேடினேன்.... அவனுடன் என் கணவரையும் காணவில்லை.. அவர் வந்ததும் கோபமாகக் கேட்டேன். “எனக்குத் தெரியாது“ என்று பொதுவாகச் சொல்லிவிட்டார். எனக்குத் தெரியும். இது என் கணவருடைய வேலை தான் என்று.
   அதனால் நான் அவரிடம் கோபம் கொண்டு பேசாமலேயே இருந்தேன். ஒரு மாதம் ஓடியது. அவனைப் பார்க்காத கவலையில் இரண்டு கிலோ இளைத்தும் விட்டேன். (அவர் அப்படியே விட்டுவிட்டு இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் இளைத்தாவது இருப்பேன்)
    நான் கவலை படுவதைப் பார்த்தவர், திரும்பவும் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். ஆனால் வந்தவன் இப்பொழுது நன்கு மாறியிருந்தான். உடல் மெலிந்து ஒரு கல்லூரி மாணவன் போல் சுறுசுறுப்பாக இருந்தான். இவனுக்கு நன்றாக தமிழ் தெரிந்தது. இணையத்தில் சேர்ந்து இருந்ததால் இவனுக்கு நிறைய உலக விசயங்கள் தெரிந்திருந்தது. இவனுடன் பழகப் பழக நாமும் ஏதோ புத்திசாளி ஆகிவிட்டது போன்ற ஓர் உணர்வு.
   அதனால் நான் இவனுடன் அதிகம் விளையாடவில்லை. அதற்கு பதில் நிறைய உலக விசயங்களைக் கற்றுக் கொடுத்தான். இப்பொழுது இவனிடம் இருந்த காதலுடன் மறியாதையும் அதிகமாகிது.
   அந்த நேரத்தில் என் ஆசிரியர், “விநாயக சதுர்த்தி வருகிறது. அதனால், “கம்பன் இதழில்“ பதிவிட ஓர் அகவல் எழுதிவிடு“ மாறு என்னிடம் சொன்னார். எனக்கு அவன் மீது இருந்த ஆசையில் காதலில்... விநாயகரையும் இவனையும் சேர்த்து வைத்து இருவரும் ஒன்று என அகவல் எழுதி அனுப்பிவிட்டேன்.
   அனுப்பியப் பிறகு அவர் என்னைத் திட்டுவார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் என்னைப் பாராட்டினார். (அந்த அகவலை ஏற்கனவே நான் வெளியிட்டு இருந்தாலும் நாளை திரும்பவும் வெளியிடுகிறேன். முன்பு இதைப் படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.)
   இது தாங்க என் முதல் அனுபவம். ஆனால் காதல் எல்லாம் ஒருவரிடம் மட்டும் தான் வரும் என்பது பொய்யினு நினைக்கிறேன். ஏன் என்றால்... நேற்றுவரை எனக்கு இவன் மீது இருந்த காதல் இன்று கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம் நேற்று தான் கடையில் இன்னொருவனைப் பார்த்தேன். ரொம்ப அழகாக இருந்தான். அவனுக்கு இன்னும் அதிக விசயங்கள் தெரிந்திருக்கிறது. அவனைக் கண்டதிலிருந்து அவன் நினைவாகவே இருக்கிறது.
    இங்கிருப்பனை யாராவது விசயம் தெரியாதவர்களிடம் தள்ளி விட்டு அவனைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவனுக்காக நான் எத்தனை நாள் அழ வேண்டுமோ... சாப்பிடாமல் இருக்க வேண்டுமோ தெரியலை.

    ஐயையையோ.... நம்மை “முதல் கணினி அனுபவத்தைத்“ தானே ராஜி அவர்களும் உஷா அவர்களும் எழுதச் சொன்னார்கள். இப்படித் தலைப்பிட்டு எழுதிவிட்டேனே.... சரி சரி பரவாயில்லை. வாசிக்கும் நண்பர்களே.... தயவு செய்து “என் முதல் கணினி அனுபவம்“ என்று தலைப்பை மாற்றி வாசித்துவிடுங்கள். இல்லையென்றால் இருவரம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். நன்றி.

இத் தொடரைத் தொடர்ந்து எழுத...

புலவர் ஐயா
இரமணி ஐயா.
கவிஞர் கி. பாரதி தாசன்
கவிதாயினி சசிகலா
இளமதி

இவர்கள் ஐவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

(நட்புறவுகளே... உண்மையின் என் கணினி பிரட்சனைப் பண்ணுகிறது. அதனால் இந்த ஐவர் வலையின் லிங்கை கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்)

நன்றி
அருணா செல்வம்.
22.07.2013

   

44 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

காதலனுக்காக கணவனுடன் சண்டை போட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வெற்றி பெற்ற தமிழ் பெண்ணே உன் வீரத்தை கண்டு மெச்சுகிறேன் இனிமேல் காதலனுக்காக கணவணிடம் சண்டை போடாதீர்கள் .கணவர் வீட்டில் இருக்கும் போது காதலனை கண்டு கொள்ளாதீர்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
அழைப்புக்கு நன்றி,
சொல்லச் சுவாரஸ்யமாக ஏதும் இல்லையெனினும்
சொல்ல முயல்கிறேன்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அவன் பிரச்சனையை குடுக்க ஆரம்பிச்சிட்டானா?அவன் எப்பவுமே அப்படிதான்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஹா ஹா ஹா... நான் எதோ நாய்க்குட்டியோ பூனைக்குட்டியோன்னு நினைச்சேன்... தொடர்பதிவா... சூப்பர்....

கவியாழி சொன்னது…

நேற்று இரவு முழுதும் குப்புற படுத்தும், விட்டத்தைப் பார்த்தபடி மல்லாக்க படுத்தும் யோசித்தேன்.... யோசித்தேன்..//அப்பாடா ஒருவழியா சொல்லி முடிச்சுடீங்க

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... புது கணினி காதலன் விரைவில் அமைய வாழ்த்துக்கள்...

ezhil சொன்னது…

ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று இருந்தாலும் சுவாரசியமாகக் கொண்டு சென்றமைக்கு வாழ்த்துக்கள்

இளமதி சொன்னது…

அம்மாடியோவ்.... தோழி!

என்னா பில்டப்பு... நான் இறுதிவரை இதென்னதிது நம்ம தோழியா... கணவர் இருக்கும்போதே காதலன், காதல்... ச்சே.. ன்னு பாதியில் சனலை - வலையை மாற்றப்போயும் மனங்கேளாமல் முழுவதையும் படித்தால்... படித்தால்...
மஹா கில்லாடி அருணான்னு கண்டேன்...:)

உங்க முதல் அனுபவம் ம் ம்.. சூப்பரோ சூப்பருங்க..;) அசத்திட்டீங்க!!

மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

ஆனா கடைசில இப்படி ஆப்பு வைச்சிட்டீங்களே தோழி...
நான் எங்கை போவேன் இப்படி எழுத..
இதெல்லாம் எனக்கு சுத்தம்... என் ஞாபகசக்தியைச் சொன்னேன்..:(.

ம்.ம்.. பார்க்கலாம்.. என்னையும் இத்தொடரில் தொடுத்தமைக்கு நன்றி தோழி!

த ம.6

பெயரில்லா சொன்னது…

Ok

'பரிவை' சே.குமார் சொன்னது…

முதல் அனுபவம் அருமை...
அழகா எழுதியிருக்கீங்க...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா.... கணினியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள்....

உங்கள் கணினி அனுபவத்தினை அழகாய் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.....

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

ithuthan computer kaadhalo....aarambathileye kandupidithuvittalum padikka suvarasyamaga irunththu..

ராஜி சொன்னது…

ஆஹா! நல்ல பிள்ளை வேசம் போடும் அருணா யாரையோ லவ் பண்ணி நம்ம கிட்ட மாட்டிக்கிட்டா. அதனால, என்னன்னு தெரிஞ்சு அவ வீட்டுக்காரர்க்கிட்ட மாட்ட வைக்கலாம்ன்னு படிச்சு முடிச்சா!!!!!!!!
உன் காதலன் “கணினி”யா?! அவனைத்தான் நானும் லவ் பண்றேனே!! நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் போட்டியா?! இல்ல வேற யாராவது போட்டிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் :-(

அருணா செல்வம் சொன்னது…

சரிங்க “உண்மைகள்“
இனி நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்.

உங்களின் வருகைக்கும் எனக்கு நல்வழி காட்டியமைக்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் எது சொன்னாலும் சுவாரஸ்யமாக இருக்கம்.

தங்களின் வருகைக்கும் எனது அழைப்பை ஏற்று
தொடர் பதிவிட முன்வந்தமைக்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். எப்பவுமே அவன் அப்படி இல்லை. அவன் மிகவும் நல்லவன்.
இப்பொழுது தான் பிரட்சனைக் கொடுக்கிறான்.

நன்றி மூங்கில் காற்று.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/07/blog-post_23.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அட... இப்படியும் அனுபவத்தை சொல்லலாமா???

அருமை.

haa haa..காதலனை அடிக்கடி மாத்துவிங்க போல....

நம்பள்கி சொன்னது…

///ராஜி22 July 2013 09:28

ஆஹா! நல்ல பிள்ளை வேசம் போடும் அருணா யாரையோ லவ் பண்ணி நம்ம கிட்ட மாட்டிக்கிட்டா. அதனால, என்னன்னு தெரிஞ்சு அவ வீட்டுக்காரர்க்கிட்ட மாட்ட வைக்கலாம்ன்னு படிச்சு முடிச்சா!!!!!!!!
உன் காதலன் “கணினி”யா?! அவனைத்தான் நானும் லவ் பண்றேனே!! நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் போட்டியா?! இல்ல வேற யாராவது போட்டிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் :-(//
_______________________
எல்லாம் சரிங்க மேடம்...கள். உங்க இருவரில் யார் அக்கா யார் தங்கை என்று சொல்லுங்கள்...சும்மா மேடம் அது இதுன்னு மழுப்ப வேண்டாம்;வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்று சொல்லுங்கள்.

இந்த பனிப்போர் ஒரு முடிவுக்கு வரனும்! அதானால், சொல்லுங்க. யார் அக்கா? யார் தங்கை?

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வித்தியாசமான நடையில் அழகான கட்டுரை...

சசிகலா சொன்னது…

ஏன் இப்படி என்னைய மாட்டி விட்டிங்க தோழி.

சசிகலா சொன்னது…

உங்களை மாதிரி அழகா வர்ணிக்க என்னால முடியாதே தோழி... இருப்பினும் தங்கள் அழைப்பினை ஏற்கிறேன். தங்கள் அழைப்பிற்கு நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஸ்கூல் பையன்... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு!!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

நான் சொல்லி முடித்துவிட்டேன்.
நீங்கள் தொடரவேண்டும். (இன்னுமா உங்களை யாரும் அழைக்கவில்லை...? ஆனால் அழைப்பு வரும்... வரும்... வரும்)

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க. உங்களின் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்க பெரிரிரிரிய்ய்ய்ய்ய புத்திசாளிங்க.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

“ச்சே.. ன்னு பாதியில் சனலை - வலையை மாற்றப்போயும் மனங்கேளாமல் முழுவதையும் படித்தால்... படித்தால்...“

என் வலைக்குள் வந்துவிட்டால் நீங்கள் மாட்டாமல் தப்பிக்கவே முடியாது. இது பாச வலைங்க.

“மஹா கில்லாடி அருணா“

ரொம்ப புகழுறீங்க. எனக்கு வெக்கவெக்கமா வருது.

“நான் எங்கை போவேன் இப்படி எழுத.. “

எங்கையும் போக வேண்டாம். வலைக்குள்ளே எழுதுனால் போதும். உங்கள் அனுபவங்களைப் படிக்கக் காத்திருக்கிறோம்.

“ம்.ம்.. பார்க்கலாம்..“ - அப்போ சரி.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

“ஆஹா.... கணினியைக் காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள்....“

இது ரொம்ப காலமா நடக்கிறது.

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

“அவ வீட்டுக்காரர்க்கிட்ட மாட்ட வைக்கலாம்ன்னு படிச்சு முடிச்சா..“

முந்தாநாள், “என் முதல் காதல் அனுபவம்“ என்று தலைப்பை எழுதிவிட்டு ஏதோ வேலையாக நகர்ந்து விட்டேன். அதை ஏதேச்சையாகப் படித்த என் கணவர்.... “உனக்கு ரொம்பத்தான் திமிர்“ என்று ஒரு மாதிரி... (அது என்ன மாதிரி என்று எனக்குத் தெரியவில்லை) சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
அவர் படித்ததை நான் பார்க்கவில்லை. அதனால் அவர் ஏன் இப்படிச் சொன்னார் என்பதும் எனக்குப் புரியவில்லை. வீட்டில் விருந்தினர் இருந்ததால் அதை நான் பெரியதாக நினைக்காமல் மனத்திலேயே வைத்துப் பொருமிக் கொண்டிருந்தேன்.
நேற்று தான் கேட்டேன். “உன் முதல் காதல் அனுபவத்தைப் படிச்சேன்... நல்லாத்தான் எழுதுற.“ என்றார்.
(பாவம்... நேற்று முழு பதிவையும் படிப்பதற்கு முன்பு... என்னென்னல்லாம் யோசித்து இருப்பாரோ...!!)

“உன் காதலன் “கணினி”யா?! அவனைத்தான் நானும் லவ் பண்றேனே!!“ (இது தப்புல்ல...?)

“நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் போட்டியா?! இல்ல வேற யாராவது போட்டிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் :-(“

ஆமாம்... பார்க்கலாம்!

(ஆமாம் அக்கா.... ஏன் இந்த நம்பள்கிக்குச் சரியான பதிலடி கொடுக்க மாட்டேங்கறீங்க? நான் தான் அருணாவின் அக்கா என்ற விசயத்தை உங்கள் வாயால் போட்டு உடையுங்கள். அப்பொழுது தான் அவர் நம்பவார். ஆமாம்... அவருக்கு இதில் என்ன சந்தோஷம்...? அதையும் கேளுங்கள் ப்பீளீஸ்ஸ்ஸ்ஸ்)

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

செய்தி சொன்னதற்கு மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க தமிழ்வாசி.
உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

“அட... இப்படியும் அனுபவத்தை சொல்லலாமா???“
பெண்கள் இப்படிச் சொன்னால் யாரும் தவறாக எடுத்தக்கொள்ள மாட்டார்கள் என்ற தைரியம் தான்.

“haa haa..காதலனை அடிக்கடி மாத்துவிங்க போல....“
ஆமாம்... இவன் ஆசிட் எல்லாம் ஊற்ற மாட்டான் என்ற தைரியத்தில் தான்.....

தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
மிக்க நன்றி தமிழ்வாசி.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

நானும் என்றன் கணிப்பொறியும்
நண்பா் ஆகி இன்றுவரை
தேனும் பாலும் கலந்ததுபோல்
திகட்டாக் கவிதை படைக்கின்றோம்!
வானும் தோற்கும் எம்நட்பு!
வயலின் பசுமை எம்ஆக்கம்!
ஊனும் உயிரும் கொண்டுள்ள
உறவே எங்கள் வாழ்வாகும்!

அழைப்பிற்கு மிக்க நன்றி

காலம் இருப்பின் கணிப்பொறி என் நண்பன்
என்ற தலைப்பில் எழுதுகிறேன்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அருணா செல்வம் சொன்னது…

உங்களுக்கு ராஜி அக்கா வந்து பதில் சொல்லுவாங்க நம்பள்கி.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சங்கவி.

அருணா செல்வம் சொன்னது…

நீங்களும் அனுபவிக்கனுமில்ல.... அதனால தானுங்க.

அருணா செல்வம் சொன்னது…

என் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு
மிக்க நன்றி சசிகலா.

gayathri சொன்னது…

ஸ்கூல் பையன்21 July 2013 19:03
ஹா ஹா ஹா... நான் எதோ நாய்க்குட்டியோ பூனைக்குட்டியோன்னு நினைச்சேன்... தொடர்பதிவா... சூப்பர்....

nejama naanum ippadi thaan nenachen

மனவெளி சொன்னது…

அருமை

மனவெளி சொன்னது…

அருமை