திங்கள், 23 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை – 3)

காதல் பிடிக்கா தென்பவரும்
   காதல் கவிதை ரசித்திடுவார்!
காதல் உண்மை என்பவரும்
   காதைத் தீட்டிக் கவிகேட்பார்!
காதல் பொய்யே என்பவரும்
   கவிதை அழகில் மயங்கிடுவார்!
காதல் காமம் என்பதெல்லாம்
   காலம் கொடுத்த வரமன்றோ!!

நடக்கும் வாழ்க்கைச் சூழலிலே
   நாளும் காதல் இல்லையென்றால்
உடம்பு மட்டும் இங்கிருக்கும்
   உணர்வோ இன்றி உலவிவரும்!
திடமாய் மனதும் இருந்தாலும்
   தேவை எதையும் நினையாமல்
இடமாய்ப் பார்த்தே அமர்ந்துகொண்டு
   இறப்பை எண்ணிக் காத்திருக்கும்!

ஓடி ஓடி உழைக்கின்றோம்!
   உயர்வைத் தேடி அலைகின்றோம்!
தேடித் தேடிப் பொருள்குவித்தும்
   தேடு கின்றோம் நிம்மதியை!
நாடி நலிந்து போனபின்பே
   நடந்த தெல்லாம் எண்ணஎண்ண
கூடி மகிழாக் காதலின்றேல்
   கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!!


25 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்... மிகவும் பிடித்த உண்மை வரிகள் :
/// ஓடி ஓடி உழைக்கின்றோம்...!
உயர்வைத் தேடி அலைகின்றோம்...!
தேடித் தேடிப் பொருள் குவித்தும்
தேடுகின்றோம் நிம்மதியை...!

நன்றி...
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

பெயரில்லா சொன்னது…

கூடி மகிழாக் காதலின்றேல்
கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ//

Amen.

T.N.MURALIDHARAN சொன்னது…

இனிமையான சந்தம்.அழகான பொருள். கலக்கல்

சித்தாரா மகேஷ். சொன்னது…

எங்கும் காதல் எதிலும் காதல்.வாழ்க காதல்.வளர்க தங்கள் கவிப் பயணம்.

AROUNA SELVAME சொன்னது…

கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கு
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

ஆமாங்க ... வீண்தாங்க ரெவெரி சார்.

நன்றிங்க.
ஆமென்.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் தோழி.
உங்களின் முதல் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன்.
நன்றிங்க.

மகேந்திரன் சொன்னது…

காதலின் உணர்வில்லையேல்
காணும் பொருளெல்லாம்
வெறுமைதான் ///
அழகிய வரிகளால் இனிய காதலின் விளக்கம்..

சிட்டுக்குருவி சொன்னது…

ஐயோ....டச்சிங் டச்சிங்......வரிகள் பல விடயங்களை சிந்திக்க வைக்கின்றது......

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

சிட்டுக்குருவி...

தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க சிட்டு...

வலைஞன் சொன்னது…

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

பெயரில்லா சொன்னது…

''..காதல் காமம் என்பதெல்லாம்
காலம் கொடுத்த வரமன்றோ...''
மிக அருமை. நல்ல சொற் கட்டு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஹேமா சொன்னது…

வந்திட்டேன் அருணா.சுகம்தானே.காதல்தான் வாழ்வைப் பிடிப்போடு வாழவைக்கிறது !

Ramani சொன்னது…

நாடி நலிந்து போனபின்பே
நடந்த தெல்லாம் எண்ணஎண்ண
கூடி மகிழாக் காதலின்றேல்
கொண்ட வாழ்க்கை வீண்அன்றோ!!//

அருமையான வரிகள்
இலக்கண வரம்புக்குள்
இயல்பாக விழுந்த வாரத்தைகள்
கருத்துக்கு சுவையூட்டிப் போகின்றன
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Kumaran சொன்னது…

உண்மையை விளக்கும் சிறந்த வரிகள்..முதல் முறையாக தங்கள் வலைப்பக்கம் வந்த எனக்கு ஒரு பரிசாய் இக்கவிதை..தொடருங்கள்.நன்றி.

செய்தாலி சொன்னது…

உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்
கவிதை அருமை

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகான பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம் அவர்களே.

AROUNA SELVAME சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

வந்திட்டீங்களா....? மிக்க சந்தோசம். நலமாக இருக்கிறீர்களா...?

வந்ததும் என் கவிதையைப் படித்து அழகிய பின்னோட்டம் இட்டதிற்கு மிக்க நன்றிங்க தோழி.

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா...

உங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் எழுத துாண்டுகிறது.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் முதல் வருகையை வணங்கி
வரவேற்கிறேன் குமரன் ஐயா.

தங்களின் அழகிய பின்னோட்டத்திற்கு
மிக்க நன்றிங்க குமரன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க தோழரே.

Seeni சொன்னது…

arumai!

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க நண்பரே!