ஞாயிறு, 22 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை -2)

உண்மைக் காதல் வந்துவிட்டால்
   உடனே சிறகும் முளைத்துவிடும்!
எண்ணம் எல்லாம் அதைநினைத்து
   ஏங்கி ஏங்கி மனம்மகிழும்!
உண்ணும் உணவும் மறந்துவிடும்!
   உறக்கம் எங்கோ தொலைந்துவிடும்!
கண்கள் திறந்தே இருந்தாலும்
   கனவாம் உலகில் மிதக்கவிடும்!

பத்துப் பொருத்தம் பார்க்காது!
   படிப்பைக் கூட நினைக்காது!
சொத்துச் சுகத்தை ஏற்காது!
   சோசி யத்தை மதிக்காது!
கத்தும் சாதி பேதத்தைக்
   காதில் போட்டுக் கொள்ளாது!
யுத்தம் வீட்டில் நடந்தாலும்
   உறுதி யாக கைபிடிக்கம்!

எதுதான் காதல் என்றேநாம்
   எடுத்துச் சொல்ல முன்வந்தால்
இதுதான் காதல் என்றுசொல்லி
   இனிமை சேர்க்க முடியவில்லை!
மதுவோ குடித்தால் மனம்மகிழும்!
   இதுவோ நினைத்தால் மனம்சுழலும்!
எதுவோ இதிலே இருக்கிறது!
   இதனால் உலகம் சுழல்கிறது!!


(காதல் தொடரும்)

17 கருத்துகள்:

வலைஞன் சொன்னது…

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆமாம்... அன்பு தான் இன்னும் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி ...

PREM.S சொன்னது…

//பத்துப் பொருத்தம் பார்க்காது!
படிப்பைக் கூட நினைக்காது!//உண்மை அன்பரே

பெயரில்லா சொன்னது…

உண்மைக் காதலில் நம்பிக்கை இழந்துவிட்டேன். காதல் என்பதும் உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தமே. கூடுதலாக பணமும், வசதியும் இருந்தால் திருமண ஒப்பந்தமாக மாறும் இல்லையேல் முறிந்துவிடும் . அவ்வளவே !

AROUNA SELVAME சொன்னது…

அழைப்பிற்கு நன்றிங்க உறவே...

AROUNA SELVAME சொன்னது…

உண்மைதாங்க ஐயா.

தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கு
மிக்க நன்றிங்க நண்பா!

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் இக்பால் செல்வம் ஐயா.

உங்களின் கருத்துபடி பார்த்தால் அது
உண்மையான காதல் இல்லை தாங்க நண்பரே.

உண்மை காதல் பிரியலாம்... பிரிக்கப்படலாம்... ஆனால் தோற்காது நண்பரே.

தங்களின் முதல் வருகைக்கும் தயங்காத கருத்துரைக்கும்
மிக்க நன்றிங்க ஐயா.

கீதமஞ்சரி சொன்னது…

சுழலும் உலகத்தையும் சுழற்றும் வலிமை கொண்டது காதல். அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

Seeni சொன்னது…

kaathal rasam!
kottiyathu-
en
mel!

aanaal suttida vittai-
iniththathu!

Sasi Kala சொன்னது…

உண்மை தான் சகோ எதுவோ இதில் இருக்கு .

AROUNA SELVAME சொன்னது…

அழகிய பின்னோட்டம் தந்தமைக்கு
மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

AROUNA SELVAME சொன்னது…

ஓ... நீங்களும் கவிதை எழுதி இருக்கிறீர்களா...!!!

நல்லா இருக்குதுங்க.
நன்றிங்க சீனி ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சசிகலா.

சிட்டுக்குருவி சொன்னது…

அழகான வரிகள் வாசிக்கும் போதே இனிக்கிறது மனதுக்கு....

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க சிட்டுக்குருவி.

ஹேமா சொன்னது…

காதல் என்று சொல்லும்ப்பொதே ஒரு சந்தோஷம்.ஆனல் அது நிரந்தரமாகத் தங்க அதிஷ்டம் நிறைய வேணும் !