புதன், 25 ஜூலை, 2012

நீ... வேண்டும்!! (கவிதை)

நிலவாக என்மனத்தில்
நீந்துகிற நேரிழையே!
வலமாக என்மனத்தில்
வாழுகிற வண்டமிழே!
பலமாக என்மனத்தில்
பற்றுகிற பேரழகே!
களமாக என்மனத்தில்
கவிகொழிக்க நீ...வேண்டும்!!

கண்ணுக்குள் மணியாக!
கருத்துக்குள் ஒளியாக!
பண்ணுக்குள் அணியாக!
பண்புக்குள் நிலையாக!
விண்ணுக்குள் இருக்கின்ற
வியன்சொக்க நிலமாக!
பொன்னொக்கும் பெண்ணழகே!
கவிபுனைய நீ...வேண்டும்!!


25 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய வேண்டுகோள்....

விட முயற்சி விஸ்பரூப வெற்றி...
தீ உழைக்கனும் பாஸீ

AROUNA SELVAME சொன்னது…

வணக்கம் சௌந்தர்.

உங்கள் வலைக்குள் வரமுடிவதில்லையே.. ஏன்...?
பல முறை திறக்க முயற்சித்தும் திறப்பதில்லை.
தயவுசெய்து உங்களின் ப்ளோக் அட்ரசை தெரிவியுங்கள்.

உங்களின் அழகிய பின்னோட்டத்திற்கு
மிக்க நன்றிங்க நண்பா.

Seeni சொன்னது…

nalla kavithai!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

சுவை மிகுந்த கவிதை

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

சுவை மிகுந்த கவிதை

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

keep it up

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

photos kalakkal

சிட்டுக்குருவி சொன்னது…

ஆமா நீ வேண்டும் இல்லாவிட்டால் பல இலக்கிய புனைவாளர்கள் மறைந்து விடுவார்கள் சீக்கிரமா வந்துடு கண்னே....

ஹேமா சொன்னது…

நானும் சொல்லிக்கொள்கிறேன் சௌந்தர்....உங்கள் வலை துள்ளுகிறதே.வரமுடியவில்லை.உங்கள் வலைபோல இன்னும் சிலரின் பக்கங்களும் அப்படியே !

ஹேமா சொன்னது…

கவிதரும் தேவதைக்கு ஒரு கவிதை.அழகு அருணா !

மகேந்திரன் சொன்னது…

விளக்கின்றி ஒளியில்லை
நீயின்றி என் கவிக்கு கரு இல்லை
அழகான இயல்பான வார்த்தைகளால் கோர்த்த
அருமையான கவிதை நண்பரே..
நன்று..

AROUNA SELVAME சொன்னது…

நன்றிங்க நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

நன்றி..
நன்றி...
நன்றிங்க நண்பரே.

AROUNA SELVAME சொன்னது…

எல்லா படங்களையும் இணையத்திலிருந்து
எடுத்தேன் (சுட்டுவிட்டேன்) நண்பா.

AROUNA SELVAME சொன்னது…

சிட்டுக்குருவி...

வந்து விடா....?
அவள் எங்கேயும் போகவில்லைங்க.
நான் தான் நீ வேணும்... நீ வேணும்ன்னு திரும்ப திரும்ப கெஞ்சி கொண்டிருக்கிறேன்.

நன்றிங்க சிட்டுக்குருவி.
(இன்று காலான் சூப் சாப்பிடும் போது உங்களை நினைத்தேன்.)

AROUNA SELVAME சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

தங்களின் வருகை எனக்கு மனமகிழ்வைத் தருகிறது தோழி.
நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும்
அழகான பாடலுடன் சொன்ன வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க நண்பரே.

PREM.S சொன்னது…

//கவிபுனைய நீ...வேண்டும்!!//

கண்டிப்பாக! அவள் இல்லாமல் கவி ஏது?அருமை அன்பரே

Ramani சொன்னது…

வந்த மாதிரித்தானே தெரிகிறது
இல்லையேல் இத்தனை அழகான கவிதைக்கு
நிச்சயம் வாய்ப்பே இல்லை
ம்னம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள்

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க பாஸ்.

AROUNA SELVAME சொன்னது…

மனத்தில் என்றோ
அமர்ந்து விட்டாள்
அந்தத் தமிழ் மகள்!!

அப்படியிருக்கக் கவிதை சுரப்பது இயற்கை தானே ஐயா...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

பெயரில்லா சொன்னது…

அழகு...அருமை...இது போல் இன்னும் வேண்டும்...

AROUNA SELVAME சொன்னது…

முயற்சிக்கிறேன் சார்.

தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்
மிக்க நன்றிங்க ரெவெரி சார்.

சிட்டுக்குருவி சொன்னது…

பார்த்தீங்களா சொல்லா சாப்பிட்டுடீங்களே...
சரி மிச்சம் மீதியிருந்தா நாளைக்கு வாரன் எடுத்துக் கொண்டு வாங்க..... :)

AROUNA SELVAME சொன்னது…

அச்சோ... நல்லா இருந்ததுன்னு எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டேனே...
பரவாயில்லை...
நீங்கள் வாங்க... நாம் புதுமையாக ஒரு சூப் தயாரித்துச் சாப்பிடுவோம்.