சனி, 28 ஜூலை, 2012

அப்பப்பா....!!! (கவிதை)
அப்பப்பா! என்னகத்தை
   ஆட்கொண்ட பேரழகே!
ஒப்பப்பா என்றெழுத
   எவ்வுலகும் ஈடில்லை!
உப்பப்பா உணவிற்கே!
   உணர்வப்பா உயிருக்கே!
செப்பப்பா செந்தமிழை!
   சிந்தையுளம் குளிர்ந்திடவே!

தப்புகின்ற சொல்லெல்லாம்
   தயவேண்டி எனைக்கெஞ்சி
ஒப்புகின்ற உவமையிலே
   ஒப்பிடவே கேட்டுவரும்!
செப்புகின்ற பாட்டெல்லாம்
   செந்தமிழின் செல்வமடி!
உப்பிடுதே மனமெல்லாம்
   ஊர்வசியே உன்நினைவால்!!


  

22 கருத்துகள்:

T.N.MURALIDHARAN சொன்னது…

அழகான சொற்களால் செதுக்கிய கவிதை சிற்பம்.

T.N.MURALIDHARAN சொன்னது…

தமிழ்மண ஒட்டுப்பட்டையை இணையுங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகிய வரிகள்... நன்றி !

Seeni சொன்னது…

eppudi!?

ippudi!?

Ramani சொன்னது…

நாங்களெல்லாம் வார்த்தைகளைத் தேடி
வீதி வீதியாக அலைகிறோம்
எல்லாம் உங்கள் வசப்பட்டிருப்பது
தங்கள் கவிதைகளைப் படித்தால்தான் புரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

அப்பப்பா..
அகம் கவர்ந்த காரிகையின்
நினைவுகள் இங்கே
அழகுதமிழில் கவியாகி நிற்கிறதோ....

கோவி சொன்னது…

அழகிய வரிகள்..

PREM.S சொன்னது…

இணைத்துள்ள படம் போல கவிதையும் அருமை அன்பரே

சிட்டுக்குருவி சொன்னது…

அப்பப்பா....எப்பிடியெல்லாம எழுதுறீங்க..
எனக்கு ஒரு கவித ஞாபத்துக்கு வருது அத அப்புறமா சொல்லிக்கிறேன்
இப்ப சகுணம் சரியில்ல போல தோணுது.

வாழ்த்துக்கள் அழகிய புணைவு

ஹேமா சொன்னது…

காதலை சொல்லச் சொல்ல முடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது !

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

ஓட்டுப்பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.
(யாராவது வலை நண்பர்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீளீளீஸ்)

முயற்சிக்கிறேன் ஐயா.
நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

அது அப்படித்தான் நண்பரே.

நன்றிங்க.

AROUNA SELVAME சொன்னது…

உங்களிடம் வசப்பட்ட வார்த்தைகளுக்கு கிடைக்கும்
கருத்து வட்டம் உங்கள் வலைப்பக்கம் வந்தாலே
தெரிந்துவிடுகிறதே ஐயா...
அருமையான வலைப்பு மாலை அது!
நான் அங்கே தமிழ்த்தேன்
அருந்தவரும் தேனீ ஐயா.

நன்றிங்க ரமணி ஐயா.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும்
ரசனைமிக்க கவிதைக்கும்
மிக்க நன்றிங்க நண்பரே!

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க கோவி சார்.

AROUNA SELVAME சொன்னது…

மிக்க நன்றிங்க பாஸ்.

(எனக்கு உங்களிடம் ஓர் உதவி தேவை. உங்கள் வலைக்குள் வந்து எழுதுகிறேன்.)

AROUNA SELVAME சொன்னது…

சிட்டுக்குருவி.... பூனை ஏதாவது குறுக்கே வந்து விட்டதா...?

அட சே.... இல்லையென்றால் எனக்கு ஒரு கவித கெடச்சி இருக்கும்..... ஏ பூனை... ஓடி போயிடு...உன்னை அப்புறமா வந்து பாத்துகிகிறேன்.

சிட்டுக்குருவி.... நான் பூனையைத் தொறத்தி விட்டுட்டேன். நீங்கள் கவித சொல்லுங்க.

நன்றிங்க சிட்டு!

AROUNA SELVAME சொன்னது…

என் இனிய தோழி ஹேமா...

நீங்கள் சொன்னது உண்மைதாங்க.
இன்னும் நான் சொல்லவே இல்லைங்க.

நன்றிங்க ஹேமா!

Sasi Kala சொன்னது…

எத்தனை ப்பப்பா....அசத்திட்டிங்க சகோ.

AROUNA SELVAME சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க சசிகலா.