வியாழன், 3 ஜனவரி, 2013

காதல் கண்ணே!!

கட்டிப்போட்டு வைத்தேன்டி காற்றில் ஆடும்
    காதலெனும் ஆசையைநான் நன்றாய்ப் போக்கி!
தட்டிவிட்டுப் போனதடி தங்கம் என்னைத்
    தொட்டுவிட்டுப் போனபோது எல்லாம் போச்சி!
முட்டிமோதும் ஏக்கத்திலே முத்தம் வேண்டி
    மோகத்திலே முணங்கிறேன்டி உன்னைக் கெஞ்சி!
ஒட்டிநின்று ஒறவாட நின்றேன் வேண்டி
    எட்டிநின்னு பாக்குறியே அழகு பெண்ணே!

எத்தனையோ ஆசையுண்டு நெஞ்சில் ஏங்கி
    எப்படிநான் போக்குவேண்டி காதல் கன்னி!
அத்தனையும் என்னைவிட்டுப் போக்க வேண்டி
    அத்தைமக உன்னிடத்தில் வந்தேன் தாண்டி!
பத்தலையோ நான்பாடும் பாட்டும் எல்லாம்
    பாதிதானே எடுத்துவிட்டேன் வேண்டாம் மீதி!
மொத்தத்தையும் பாடிவிட்டால் நேரம் போகும்
    முத்தமிடப் பக்கம்வா ஆசை பொங்கி!

உப்புபோட்டு தின்னுறேன்டி அதனால் வண்டி
    உணர்ச்சிவந்து கூடுதடி நெஞ்சம் தாண்டி!
சப்புகொட்டி அழைக்கிறேன்டி வாச மல்லி
    சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு கிட்ட வாடி!
தப்புதண்டா செய்யமாட்டேன் வாடி நம்பி!
    தாலிகட்டித் தொட்டுடிவேன் சொந்த மாக்கி!
இப்பகொஞ்சம் இனித்திடவே கொடுடீ கொஞ்சி!
    இன்பமதை அறிந்திடலாம் காதல் கண்ணே!


அருணா செல்வம்.

கவிமனத்தில் இப்பொழுது போகப் போகத் தெரியும்தொடர்-32 தட்டுங்கள். http://kavimanam.blogspot.fr/26 கருத்துகள்:

Prem S சொன்னது…

அடடா அந்த பெண்ணை போல உங்கள் கவிதையும் அழகு அழகு ..

கவியாழி சொன்னது…

இளமையை தேடுவோருக்கும் இளமை தாண்டியோருக்கும் காதல் என்ன கசக்குமா?

இதையும் படிச்சு பாருங்க
http://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_3.html

மகேந்திரன் சொன்னது…

காதல் மொழி கொஞ்சும்
அருமையான கவிதை நண்பரே...

வாடாத வாசமல்லி
வந்திடடி என் முன்னே
ஆடாத தெருக்கூத்தில்
போடாத காட்சியெல்லாம்
போட்டிடுவோம் இங்கே
பூட்டி வா உன் வீட்டு வாசலதை
பூட்டுடைத்து செல்வோம்
இன்பமான இல்லறமாம்...
பெரும்பேறு வாசலுக்கு...

Seeni சொன்னது…

aaakaaa.....

engoyo poitten ....


ennathil....

mika arumai...

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 4

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாஸ்.

அருணா செல்வம் சொன்னது…

அனைத்திற்கும் மனம் தானே காரணம் கவியாழி ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

Unknown சொன்னது…

அருமை !

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கிராமத்து கவிதை அருமை!

குட்டன்ஜி சொன்னது…

கிராமிய மணம்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
மிக்க நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மீண்டும் நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குட்டன் ஐயா.

Jeyachandran சொன்னது…

என்னத்தான் நடக்குதென்றே புரியவில்லை...
மகிழ்ச்சிப் பொங்கோப் பொங்கென்றுப் பொங்குகிறது.
நீங்கள் இனிமையானப் பாமரத்தமிழில் லட்டுத் தந்ததும்,
தோழர் திரு. மகேந்திரன் அவர்கள் பால் கோவா தருகிறார்...
அடடடா என்னே ருசி...

ஹேமா சொன்னது…

என்னமா.........செல்லம் கொஞ்சுறீங்க கவிதையில.யப்பா.....!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

பட்டிக் காட்டு எழில்மங்கை!
பருத்திச் சேலை! நெற்கட்டு!
குட்டிப் போட்டு அவள்ஆசை
குடும்பம் நடத்தும்! காதலினைக்
கட்டிப் போட்டு வைத்தாலும்
கனவில் பொங்கும் இன்பநிலை!
முட்டி போட்டுத் தவஞ்செய்யும்!
மோகத் தீயில் நெய்வார்த்தே!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

பெயரில்லா சொன்னது…

இரெண்டு நாட்களாய் உங்கள் கவிதைகளையோ குட்டிகதைகளையோ படிக்காத்து, எதோ சோறு தண்ணி உண்ணாமல் இருந்தது போல் உள்ளது. எப்போ திங்கள் வரும் என்றுள்ளது, நான் கிழமையை சொன்னேன், உங்களுக்கும் அது மிக அழகாக பொருந்திவிட்டது.

அட நாந்தாங்க . . .

சித்தாரா மகேஷ். சொன்னது…

அருமையான காதல் உணர்வு.அத்தை பொண்ணோட காதல் கைகூட என் வாழ்த்துக்கள் சகோதரா.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

அருணா செல்வம் சொன்னது…

கல்யாணம் ஆகும் வரையில்
இப்படித்தானே செல்லம் கொஞ்சி
ஏமாற்ற வேண்டும்.

பாவம் பெண்கள்... ஆண்கள் இப்படியெல்லாம் சொன்னதும்
ஏமார்ந்து தான் விடுகிறார்கள்.
நன்றி ஹேமா.

அருணா செல்வம் சொன்னது…

கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சித்தாரா.

(எனக்கு ஆறு அத்தைப் பெண்கள் இருக்கிறார்கள் சகோ.)