மழைக்குப் பயந்து
நீ
ஒதுங்காதே!
பாய்ந்து வரும்
கார்மேகக்
கூட்டம்
உனைக் காணாது
பறந்தோடும்!
உன் மீது
பட்டு உடைந்த
மழைத்துளிகள்
நினைத்து விடும்...
மறுபடியும்
மழையாகவே
பிறக்க வேண்மென்று!
மழைக்காக
நீ ஒதுங்கிச்
சென்ற இடத்தின்
ஈரம்
காய்ந்து
விடும்!
காட்சி
என்றென்றும்
காயாமல்
இனித்திருக்கும்
என் நெஞ்சின்
ஓரம்!
அருணா செல்வம்.
கவிதை அருமை.
பதிலளிநீக்குமழையில் நனைவது எவ்வளவு சுகம், ம்ம்ம்.. கொடுப்பினை இல்லை...
பதிலளிநீக்குஏன்.... ஜலதோஷம் பிடிச்சிக்கும் என்று பயமா...?
நீக்குஇல்லை... உங்க ஊரில் மழையே இல்லையா...?
நன்றி ஸ்கூல் பையன்.
சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் தோழி .
பதிலளிநீக்குத .ம .2
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
ரசிக்கக் கூடியதாக இருக்கிறது...
பதிலளிநீக்குபாட்டில் பட்டுடைந்தீரா சிட்டு...?
நீக்குஅவள் மீது மழைத்துளி பட்டு போல் பட்டு உடைந்தது என்ற கருத்தும் ரசிக்க கூடியதாகவும் இருக்காதா...?
நன்றி ஆத்மா.
நல்ல கவிதை. மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும் நனைய முடிவதில்லை! :)
பதிலளிநீக்குஏங்க... அப்படியா நம் நாடு காய்ந்து போய் விட்டது....!!
நீக்குஎன்னதான் இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் மண்வாசனையுடன் மழையில் நனைவதே தனி சுகம் தான்.... ம்ம்ம்...
அதற்கும் கொடுபினை வேண்டும்.
நன்றி நாகராஜ் ஜி.
மழைச்சாரல் முகத்தில் அடிக்கும் சுகத்தைக் கொடுத்தது கவிதை....
பதிலளிநீக்குநம்ம ஊர் வெயிலுக்கு இது சுகமாகத்தான் இருக்கும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
சோக்கான கவுஜம்மே...!
பதிலளிநீக்குநெக்ஸ்ட் தபா போவச் சொல்லோ மர்க்காமே கொடை இஸ்துக்கினு போம்மே... பாத்துக்கினியா ஒன்னால அல்லாருக்கும் சல்ப்பு புட்ச்சுக்கிச்சு...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
யப்பா...நைனா... சுட்டுப் போட்டாலும் உங்க அளவுக்கு சுத்தமான மெட்ராஸ் தமிழ் எனக்கு வராதுங்க. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
நீக்குஐயே... இன்னாத்துக்கு நைனா மளையில நனையிற அந்த புள்ளிய பாத்துக்கினே இருந்த? இப்பப்பாத்தியா... ஒனக்கு சல்ப்புடிச்சிக்கிச்சி.
இருந்தாக்கூட கவுஜய படிச்சிட்டியே... ரொம்ம்ம்ப டாங்ஸ் நைனா.
ஆகா... ரசித்தேன் சகோதரி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மழையில் நனைய ஆசை தான்..
பதிலளிநீக்கு''மழைக்கு பயந்து நீ ஒதுங்காதே '' ரசிக்கும் படியான வரிகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கழைபோல் இனிக்கின்ற உன்றன் கவிதை
மழையில் நனைந்தேன் மகிழ்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஐயகோ! இப்படியெல்லாம் தூய தமிழில் கவி பாடி அருமையான பதிவுகளாகப் பொடுகின்/றீர்களே! மழை சுகமாக இருக்கின்றது!!!!!!!
பதிலளிநீக்கு