திங்கள், 3 மார்ச், 2014

கம்பனிடம் ஒரு கேள்வி!!
(ப்ரான்சு கம்பன் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை)

தமிழ் வணக்கம்

கம்பனிடம் கேள்விகேட்கக் கன்னித் தமிழைநான்
தெம்புடன் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தேன்! – வம்பின்றி
நம்பிக்கை வைத்தே நயத்துடன் நான்கேட்கக்
கும்பிட்டு நின்றேன் குனிந்து!

குரு வணக்கம்

கருவெடுத்து நன்றாய்க் கவியெழுதக் கற்பித்தாய்!
உருவெடுத்து வந்தேன்! உயிரில் – இருக்கும்
திருவே தீந்தமிழை இவ்வவையில் பேச
குருவே துணிவைக் கொடு!

அவை வணக்கம்

ஆறறிவு கொண்டவர்கள் அந்தமிழின் இன்பத்தை
நூறறிவு கண்கொண்டு நோக்கிநிற்க! – சீராய்ச்
சுவைத்தமிழின் சொல்கேட்கச் சூழ்ந்திருக்கும் சான்றோரின்
அவைவணங்கி நின்றேன் அறிந்து!

கம்பனிடம் ஒரு கேள்வி

நிலையில்லா உலகத்தில் நிலைத்து நின்று
    நெடும்புகழை அடைந்துவிட்ட ஈடில் இன்பம்!
கலைஞர்களின் கருத்துகளில் புகுந்து நின்று
   கவித்தமிழின் தாயாகத் தவழும் தெய்வம்!
தலைநிமிர்ந்து தைரியமாய்த் தமிழர் நின்று
   தரணியிலே வேறுண்டோ என்றே கேட்டு
விலையில்லாச் செல்வமுண்டே எம்மி டத்தில்
   விண்ணமுதம் வேறுண்டோ என்றே சொல்லும்!

இத்தரையில் இன்பங்கள் என்ன வென்றால்
   இலக்கியத்திற்(கு) இணையாக எதுவும் இல்லை!
எத்தரையில் இப்புகழைத் தொட்ட வர்கள்
   இருந்தாரோ இருப்பாரோ என்றே கேட்டால்
சத்தியமாய்ச் சரித்திரங்கள் நிறைய உண்டு!
   சாதித்த வரலாறும் உலகில் உண்டு!
சுத்தமான இலக்கணத்தில் மூழ்கி வந்த
   சுகமான இராமகதைக்(கு) ஈடும் உண்டோ!

(தொடரும்)


அருணா செல்வம்.

26 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

உண்மை தான் தோழி இலக்கியம் கற்க வரும் இன்பம்
அதுவே பேரின்பம் !வாழ்த்துக்கள் அருமையான இக்
கவிதையின் அடுத்த தொடரைக் காணும் ஆவலுடன்
விடை பெறுகின்றேன் .முடிந்தால் இதைக் கொஞ்சம்
பாருங்கள் http://rupika-rupika.blogspot.com/2014/03/blog-post_1964.html

Avargal Unmaigal சொன்னது…

கவியரசியை பாராட்ட எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியவில்லை அதனால் தலைவணங்கி செல்கிறேன்

Avargal Unmaigal சொன்னது…

கவிரங்கத்தில் ஸ்டால்( டீ,பஜ்ஜி,சமோசா வடை) ஏதும் போட்டு இருந்தீர்களா? அந்த ஐட்டங்கள் விற்க வேண்டும் என்பதற்காக தொடரும் என்று சொல்லி இண்டர்வெல் வீட்டுவீட்டீங்களா?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வெண்பாக்களும் எண்சீர் விருத்தமும் இனித்தது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஈடு இல்லை - சிறப்பு வரிகளும்...

வாழ்த்துக்கள் சகோதரி...

நம்பள்கி சொன்னது…

+1

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்
தொடர்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 6

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

unmaiyanavan சொன்னது…

அற்புதமான வரிகள்.
வாழ்த்துக்கள் கவியரசியே.

"//சுத்தமான இலக்கணத்தில் மூழ்கி வந்த
சுகமான இராமகதைக்(கு) ஈடும் உண்டோ'//"

-- நான் இராமகாதையில் அயோத்தியா காண்டத்தில் ஒரு சில பாடல்களை மட்டும் படித்தேன். முதலில் அர்த்தம் விளங்காமல் படித்து, அதையே இரண்டு மூன்று தடவை மீண்டும் மீண்டும் படித்து அர்த்தம் புரிந்தபொழுது, நீங்கள் சொன்ன அந்த வரிகள் உண்மை என்று உணர முடிந்தக்து.

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

ராஜி சொன்னது…

கவிதை அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் பாராட்டை நான் தலைவணங்கி ஏற்கிறேன் “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

டீ, பஜ்ஜி எல்லாம் நம்ம ராஜி அக்கா வலைக்குள் போனால் கிடைக்கும். இப்பொழுது சுட சுட கொழுக்கட்டை கிடைக்கிறது.

தவிர இந்தத் தலைப்பைத் தான் கொடுத்தார்கள். அதிலும் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும் என்பது நிபந்தனை.

கவியரங்கில் பாட வேண்டும் என்றால் குறைந்தது பத்துப் பாடலாவது படிக்க வேண்டும். அதனால் எழுதினேன். இங்கே நம் வலையில் அதை முழுவதையும் வெளியிட்டால்.....!!! (எனக்கே படிக்க போர் அடிக்கும்)
அதனால் தான் பிரித்து வெளியிடுகிறேன். நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.... தொடருங்கள்.... தொடர்கிறேன்.

வளரும்கவிதை / valarumkavithai சொன்னது…

“புலவர்க்கு வெண்பாப் புலி“ என்று வெண்பாவிலேயே வியர்க்க வைப்பார்கள்! அதிலும் ஈற்றடி வெறும் எதுகை மோனைக்காக ஏமாற்றும் சொற்களோடு வருவதுதான் பெரும்பான்மை. தங்களின் வெண்பா ஈற்றடிகள் பொருத்தமாக வந்திருப்பதோடு நல்ல சிந்தனைகளை எண்சீர் விருத்தத்தில் தந்திருக்கிறீர்கள். தங்கள் கவிப்பயணம் தொடர வாழ்த்துகள் சகோதரி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

கம்பன் காவியத்தி ஆறு காண்டமும் அருமையாக இரக்கும்.
படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தங்கள் வருவது அதன் சிறப்பு.
தொடர்ந்து படியுங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுப்ரமணியன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.