வியாழன், 13 மார்ச், 2014

எதிலும் வெற்றி அடைய வேண்டுமா?




     “இந்த ராத்திரி நேரத்துல எங்க கிளம்புற ராமசாமி....?“ கேட்டபடியே வந்தார் முனைவர் .....
   “வா முனைவா... இந்த வீரப்பான் என்ன செஞ்சான் தெரியுமா....?“
   “என்ன செஞ்சான்?“
    “போன வருஷம் அவசத்துக்கு எங்கிட்ட கடன் வாங்கினான். தோபாரு எழுதி கையெழுத்துக் கூட போட்டுக் குடுத்திருக்கிறான். வருஷம் ஒன்னாச்சேன்னு வேலைக்காரனை அனுப்பி பணம் கேட்டா... நான் ராமசாமிகிட்ட பணமே வாங்கலைன்னு சொல்லி அனுப்பிட்டான். அதான் ஒரு எட்டு நானே போயி கேக்கலாம்ன்னு கௌம்பிறேன்“ என்றார் ராமசாமி.
    “கேட்க வேண்டியது தான். ஆனால் அதுக்கு இந்த ராத்திரி நேரம் வேண்டாம். காலையில போய் கேளு“
    “ராத்திரியா இருந்தா என்னா.... பணம் என்னோடது. எனக்குத் தான் அதோட அருமை தெரியும்.“
    “சரிதாம்பா. நானும் இல்லைன்னு சொல்லலை. ஆனால் இப்போ போனால்... அவனுக்குக் கண்ணு சரியா தெரியாது. ராத்திரி நேரத்துல குடிச்சிட்டு வேற இருப்பான். அவன் போன வருஷம் கஷ்டத்துல நிறைய பேருகிட்ட கடன் வாங்கினான். அதில் உன்னை மறந்து போய் இருப்பான். நியாயமான ஆளு. அதனால நாளைக்கு நேராபோய் அவனைப் பார்த்துப் பேசு.“ என்றார்
   “அப்போ.... காலையில போய் கேட்டால் நல்லதுன்னு சொல்லுறியா...?“
   “நான் சொல்லலைப்பா.... காளமேகப் புலவர் காலம் அறிந்து செயல் பட வேண்டும்ன்னு ஒரு பாட்டில் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.“
    “அப்படியா...? எங்க அந்தப் பாட்டைச் சொல்லு.“ ஆவலாகக் கேட்டார் ராமசாமி.
   “இந்த பாட்டுல என்ன ஒரு விசேசம் என்றால், இது வெறும் ககர வர்க்கம் மட்டுமே அமைச்சிப் பாடி இருக்கிறார்.“
    “ககர வர்க்கமா....? அப்படின்னா...?“
    “ககர வர்க்கம்ன்னா.... க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, என்ற எழுத்துக்கள் தான். இந்த எழுத்துக்களை மட்டுமே பாட்டில் எழுதி இருக்கிறார். மற்ற எந்த எழுத்துக்களும் இல்லை. இதை “வித்தாரச் செய்யுள்“ என்று சொல்கிறார்கள்“
    “அப்படியா...? எங்க அந்த செய்யுளை சொல்லு பார்ப்போம்“
  
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

    “இது தான் பாடல். என்ன பொருள் வியங்கியதா...?“
    “என்ன.... பொருள் விளங்கியதாவா....? ஏன் கேக்க மாட்டே.... ஏதோ காக்கா காக்கான்னு சொல்லிட்டு பொருளைக் கேட்டால்... நான் எங்க போவேன்? அதை நீ தான் சொல்லனும். சொல்லு“ என்றார் சற்று கடுப்புடன் ராமசாமி.

    முனைவர் சொல்லத் துவங்கினார். “அதாவது
காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதல் ஆகாது. (கூகை என்றால் ஆந்தை)
கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதல் ஆகாது.

கோக்கு கூக் காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றும் கைக்கும். (கோ என்றால் அரசன்)

கொக்கொக்க – கொக்கைப் போல (அதாவது சரியான சமயம் வரும் வரை காத்திருத்தல்)
கைக்கைக்கு – பகையை எதிர்த்து
காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா – (கைக்கு ஐக்கு ஆகா) காலமற்றதாயின் தலைவனுக்கும் இயலாதாகிப் போகும்.

   “என்ன ராமசாமி... இப்போ பொருள் புரிந்த்தா...?“
   “திரும்ப பொருளை மட்டும் சொல்லு“
   “காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் காக்கை இரவிலும் ஆந்தை பகலிலும் வெல்ல முடியாது. (அதுபோல) அரசன் தன் நாட்டை பகையிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் கொக்கைப் போல சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
   பகையை எதிர்த்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற காலம் இல்லை என்றால் அரசனுக்கு வெற்றி என்பது இல்லை என்றாகிவிடும். இது தான் அந்த பாடலின் விளக்கம். இப்போ விளக்கம் புரிஞ்சுதா?“ முனைவர் கேட்டார்.
   “நீ விளக்கம் சொன்னதும் புரிஞ்சுது. ஆனா... இது எல்லாருக்கும் புரியுமா...? புடிக்குமா...?“ ராமசாமி சந்தேகமாகக் கேட்டார்.
   “அதை அவங்களே சொல்லட்டும். நான் கிளம்புறேன்“ கிளம்பினார்.


அருணா செல்வம்.

41 கருத்துகள்:

  1. ரொம்ப புடிக்குது சகோதரி... விளக்கம் அருமை...

    திருக்குறள் அதிகாரம் உரையாடல் தொடரில் காலமறிதல் அதிகாரமும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. நல்லதோர் பாடல்.....

    வெறும் பாடல் மட்டும் படித்தபோது என்னமோ ‘ககாகிகீகுகூ’ன்னு ஏதோ பாட்டு மாதிரிதான் இருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பாடல்களும் இப்படித்தான் இருக்கிறது நாகராஜ் ஜி.

      நேரம் கிடைக்கும் பொழுது வெளியிடுகிறேன்.
      நன்றி.

      நீக்கு
  3. ககர வர்க்கத்தைப் படித்ததில் இருந்து தலையே சுத்துதுப்பா !
    அருணா சற்று அமர்வதற்கு இடம் கிடைக்குமா ?..காப்பி ரீ
    ஒன்றும் வேண்டாம் தோழி :))) .அருமையான படைப்பு மிக்க
    நன்றி தோழி பகிர்வுக்கு .த .ம .4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றும் அவசம் இல்லை. நிதானமாக அமர்ந்து படியுங்கள். டீ, காபி மேலும் தலையைச் சுற்ற வைக்கும். அதனால் “தண்ணீ“ “ தர்றேன். குடியுங்கள்.

      நன்றி தோழி.

      நீக்கு
  4. ஆஹா... அருமையான செய்யுள் விளக்கம்...

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  6. முதலில் ஒட்டை போட்டுடுறேன் அல்லது உங்களுக்கு தலைவலி வந்துடும் அப்புறம் தலைவலி இருக்குன்னு சொல்லி நாள் முழுவதும் சமைக்க மாட்டீங்க. அப்புறம் வூட்டுக்காரை கிச்சனுக்கு அனுப்புவீங்க என்னை போல இன்னொரு அப்பாவியும் கஷ்டப்பட வேண்டாம் என்று ஓட்டைப் போட்டுட்டேன் tha.ma 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சமைச்சால் அதை யார் சாப்பிடுவதாம்....?
      வேண்டுமானால் நீங்கள் என் வீட்டுக்கு வர்ற அன்னைக்கு அவரைச் சமைக்கச் சொல்லிவிடுகிறேன்.

      நீக்கு
  7. உங்களை போல விளக்கம் சொல்ல ஆள் இல்லையென்றால் அந்த காக்கா புலவர் ஏதோ கிறுக்கிட்டு போய்யிருக்கிறார் என்று பலர் நினைச்சு இருப்பாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை மாதிரி என்று சொல்லாதீர்கள்.
      நானும் புத்தகத்தைப் படித்துப் பின்பு நன்கு பொருள் புரிந்து கொண்டு உங்களுக்கு எளிய முறையில் விளக்கம் சொன்னேன்.

      காலமேகத்தின் இத்தகைய பாடல்களை நல்ல வேலையாக அவரே விளக்கம் சொல்லிவிட்டார் போல.

      நீக்கு
  8. அடியாத்தே இந்த கால மாடர்ன் பொண்ணு அந்த கால தமிழ்பாடல்களை எல்லாம் படித்து சும்மா சூப்பரா விளக்கம் தருதே....யாரு கண்ணாவது பட்டுடப் போறது... யாரவது இந்த பொண்ணுக்கு மிளகாய் வைச்சு சுத்தி போடுங்க,,, அதுக்காக மிளகாயை யாரும் வலம் வந்து சுத்தியலால் இந்த பொண்ணு தலையில போட்டுடாதிங்கப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... என்னைக் காப்பாத்திட்டீங்க.
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  9. அருமையான படைப்பு, அழகான கதை வடிவில் விளக்கம்.

    அறிய தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆர்.எஸ்.

      நீக்கு
  10. இந்த படைப்பை தலைப்பினால் தான் நான் படிக்க நேர்ந்தது. நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவக்கும் பொருத்தமானத் தலைப்புத்தான் என்று நினைக்கிறேன்!

      மீண்டும் நன்றி.

      நீக்கு
  11. எளிதில் புரியும் படியான‌ விளக்கம், வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாடோடி.

      நீக்கு
  12. அருமையா இருக்குங்க விளக்கம் ...எப்படியாப்பட்டது நம்ப தமிழ்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான பாடலையும் பொருளையும் அறிந்துகொண்டேன். நன்றி சகோதரி.
      எழில் முகநூலில் பகிர்ந்ததால் படிக்க முடிந்தது..அவருக்கும் நன்றி.

      நீக்கு
    2. நல்லதோர் பாடல். அருமையான விளக்கம்.

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
    4. ஓ... அப்படியா? நன்றி எழில் தோழி.

      நன்றி கிரேஸ்.

      நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  13. கவிதைக்கேற்ற கதை பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. ஆமாங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புவனிபாலன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மனோ சார்.

      நீக்கு

  16. வணக்கம்!

    காக்காக் கவிதை கருத்தைக் கவா்ந்திழுத்துச்
    சோக்காய் ஒளிரும் சுடா்ந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  17. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
    மிக்க நன்றி நட்பே!

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  20. காளமேகத்தின் பாடலும்
    காரமான விளக்கமும்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு