செவ்வாய், 11 மார்ச், 2014

தலைவலி!!




நெற்றிப் பொட்டின் மத்தியிலும்
   நீண்ட வகிட்டுக் குள்ளேயும்
சுற்றிப் பார்க்கும் கண்களையும்
   சுற்றி வலித்த தலைவலியால்
வற்றிப் போன குளம்போல
   வலியால் மண்டை வெடிக்கிறது!
கற்றைக் குழலைத் தலைதாங்கும்
   கடுக்கும் வலியைத் தாங்கிடுமா?

வலையில் எழுத அமர்ந்தாலும்
   வகையாய் சமைக்கப் போனாலும்
அலையில் பேச நினைத்தாலும்
   அமைதி யாகப் படுத்தாலும்
தலையில் ஏன்தான் இவ்வலியோ
   தனித்து நானே சிந்தித்தேன்
விலையே இல்லா வலைதளத்தில்
   விழாமல் போன வாக்கினாலா?


அருணா செல்வம்.

11.03.2014

23 கருத்துகள்:

  1. சிறந்த பா வரிகள்
    சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. //விலையே இல்லா வலைதளத்தில்
    விழாமல் போன வாக்கினாலா?//

    இது மட்டும் புரியலை.. இலக்கியமா இருக்குமோ? ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இலக்கியம் தாங்க ஆவி.
      அதாவது யாரும் “வாக்கு“ சொல்வதில்லை இல்லையா...?

      தவிர திதி அண்ணா வலைத்தளத்தில் நீங்கள் பதிலளித்த “மரம்“ எங்கே இருக்கிறது என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும் :)

      நன்றி ஆவி.

      நீக்கு
  3. ஓ...! இப்படிக் கூட தலைவலி வருமா சகோதரி...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திடுச்சிங்க.
      அதுமட்டும் அல்லாமல் நீங்கள் வெளியிட்டது போல ஒரு தளத்தில் இணைக்கப்போய்.... இன்னும் அதிகமாயிடுச்சி.

      எனக்கு இன்னும் நீங்கள் சொன்ன முறை புரியலை அண்ணா. திரும்பவும் வாசிக்கனும். முயற்சிக்கிறேன்.

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. அட போங்க அருணா செல்வம் நீங்கள் உங்கள் சந்தோஷத்திற்காகவும் உங்களின் உயிராகிய தமிழுக்காகவும்தான் எழுதுறீங்க என நினைத்தேன் இப்பதான் புரிய்து நீங்கள் ஒட்டுக்காக எழுதுறீங்க என்று, உன்மையில் ஒட்டு என்ற வரியை படித்ததும் உங்கள் மேல் கோபம்தான் வருகிறது. நான் தவறாக ஏதும் சொல்லி இருந்தா மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. நீங்கள் நினைப்பது போல் இல்லை “உண்மைகள்“

      நம் பதிவின் தரம் குறைந்து விட்டதோ...
      நாம் மற்றவர்களுக்குப் பிடிக்காதது போல் எழுதுகிறோமோ...
      நம்மை நம் நட்புறவுகள் (எப்பொழுதும் வாக்கிட்டு ஊக்கப்படுத்தும் ஒரு சிலர்) மறந்து விட்டார்களோ என்ற எண்ணத்தில் எழுதினேன்.

      மற்றபடி சும்மா ஜாலிக்காக எழுதிய கவிதை தான் இது.

      அப்புறம் உங்களுக்கான எடக்குமடக்கு பதில்கள்.

      “நீங்கள் உங்கள் சந்தோஷத்திற்காகவும் உங்களின் உயிராகிய தமிழுக்காகவும்தான் எழுதுறீங்க என நினைத்தேன்“

      நான் அப்படி சொன்னேனா...?

      “இப்பதான் புரிய்து நீங்கள் ஒட்டுக்காக எழுதுறீங்க என்று“

      நான் ஒட்டுண்ணி கிடையாது. தவிர அரசியல்வாதிகள் ஓட்டுக்காகப் பிச்சையே எடுக்கும் பொழுது நான் கவிதை எழுதக்கூடாதா...?

      “உன்மையில் ஒட்டு என்ற வரியை படித்ததும் உங்கள் மேல் கோபம்தான் வருகிறது“

      உங்களை யார் இப்படி “ஓட்டை“ “ஒட்டை“ என்று படிக்கச் சொன்னது? இருந்தாலும் இதற்கெல்லாம் கோபப்படக் கூடாது.

      “நான் தவறாக ஏதும் சொல்லி இருந்தா மன்னிக்கவும்“

      இது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு அபராதமாக 1000 அமெரிக்க டாலர் அனுப்பிவிடுங்கள்.

      நன்றி.

      நீக்கு
    2. ///நம் பதிவின் தரம் குறைந்து விட்டதோ...//

      அப்படி நெகடிவ்வா சிந்திக்காதீங்க..... பதிவிம் தரம் குறைய வாய்ப்பில்லை ஆனால் படிப்பவர்களின் தரம் குறைய வாய்ப்பு உண்டு அதனால கவலைப்பாடாமல் நீங்கள் நினைப்பதை சொல்லிக் கொண்டு போங்க,,,பதில் கருத்து வந்தா மட்டும்தான் நம் எழுத்து பார்க்கப்படுகிறது என்ற சிந்தனையை தூக்கி ஏறியுங்கள்.. பல தரம் வாய்ந்த ஆங்கில பதிவைகளை பார்த்து இருந்தால் அது உங்களுக்கு ப்ரிந்து இருக்கும் அதற்கு பல சம்யங்களில் ஒரு கருத்து கூட இருக்காது ஆனால் அது அதிக அளவில் வாசிக்கப்படும் காரணம் பல பேருக்கு கருத்து சொல்ல நேரம் இல்லை என்பதுதான் உண்மை

      நீக்கு

    3. ///“நீங்கள் உங்கள் சந்தோஷத்திற்காகவும் உங்களின் உயிராகிய தமிழுக்காகவும்தான் எழுதுறீங்க என நினைத்தேன்“

      நான் அப்படி சொன்னேனா...?///

      அப்ப நீங்க மற்றவங்களை சாக அடிக்கதான் எழுதுரிங்களோ? நானெல்லாம் சாக வரம் பெற்றவன்

      நீக்கு
    4. ///இது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு அபராதமாக 1000 அமெரிக்க டாலர் அனுப்பிவிடுங்கள்.///

      ரொம்ப பயந்து தூங்காம இருந்தேன் நீங்க பெரிய தண்டனை தருவீங்கண்ணு அதாவது உங்களது எல்லா கவிதைகளையும் கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டுமென்று நல்ல வேளை நீங்கள் அப்படியெல்லாம் பண்ணவில்லை. நீங்க நல்லா இருப்பீங்க.

      அப்புறம் 1000 டாலர்தானே அனுப்பிட்ட போச்சு. நான் இப்பவே 1000 டாலரை ஸ்கேன் பண்ணி அனுப்பிடுறேன். நீங்க அதை டவுன் லோடு பண்ணி பிரிண்ட் பண்ணிக்கோங்க ஒகே வாவேற எந்த முறையில் அனுப்பினாலும் யாரவது திருடிருவாங்க.

      நீக்கு
  5. //வகையாய் சமைக்கப் போனாலும்//

    ஆமாம் நீங்க வகைவையாக சமைக்கீறீங்களா அது மிக ஆச்சிரியமான விஷ்யம் ஆச்சே. நீங்க வகை வகையாக சமைக்கலாம் ஆனா அது எல்லாம் சாப்பிடும்படியாக இருக்கிறாதா? உங்க வூட்டுகாரர்கிட்ட நான் பேசனுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமைப்பதை எல்லாம் பதிவாகப் போட ஆரம்பித்தால்... கிச்சன் கார்னர் வைத்திருக்கும் உங்களின் தங்கை என்னை அடிக்கவே வந்திடுவார்.
      இது எனக்குத் தேவையா...?

      நீக்கு
  6. உங்க தலைவலி போக ஒட்டு போட்டாச்சு ஒகேதானே tha.ma 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடா.....
      இதே மாதிரி என் அனைத்துப் பதிவுகளுக்கும் போட்டால் எனக்குத் தலைவலியே வராது.
      நன்றிங்க “உண்மைகள்“

      நீக்கு
  7. \\ விலையே இல்லா வலைதளத்தில்
    விழாமல் போன வாக்கினாலா?//

    ஆமாம் அடிக்கடி பதிவு போடுங்க, தலைவலி காணாமல் போகும்.

    பதிலளிநீக்கு
  8. பின்ன... எங்களையெல்லாம் பார்க்கலைன்னா தல வெடிக்கிறா மாதிரி இருக்காம வேற எப்பூடி இருக்குமாம்... ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சமயம் இது தான் உண்மையோ....
      இனி வந்து வந்து பார்க்கிறேன்.

      நன்றி உஷா.

      நீக்கு
  9. வலைத்தளத்தில் விழாமல் போன வாக்கினாலும் ( இதுதான் புரியவில்லை) தலைவலி வருமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. பெண்களின் மனசு உங்களுக்குப் புரியாது ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. நியாயமான உணர்வு தான் ! வாழ்த்துக்கள் தோழி எனது ஓட்டு
    எப்போதும் உங்களுக்கு உண்டு கவலைய விடுங்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடா..... உங்களின் வாக்கு தான் உன் தலைவலியைப் போக்கியது.
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. அடாடா.... வாக்கு விழாம இருந்த்ததால் வந்த தலைவலியா.....

    கஷ்டமாச்சே....

    த.ம. +1

    பதிலளிநீக்கு