திங்கள், 17 மார்ச், 2014

மறந்து விட்டேன்...!!

செவ்வாய் திறந்து
நீ உதிர்க்கும்
பூவெல்லாம்
எனக்கு வேதமடி!

இறந்து விடு
என்று நீ
சொல்லி இருந்தாலும்
இறந்து விடுவேன்
உன் நினைவுடன்!

மறந்து விடு
என்று சொன்னாய்
மறந்து விட்டேன்
மறுகணமே..
உன் சொல்லை!!

அருணா செல்வம்.

28 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படிச் சொல்லுங்க...! முடியுமா என்ன...? வாழ்த்துக்கள் சகோதரி...

ராஜி சொன்னது…

மறந்து விட்டேன்
மறுகணமே..
உன் சொல்லை!!
>>
சண்டையே வராது.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான கவிதை
மறக்க முடியாதபடி
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 4

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இறக்க முடிந்தாலும், மறக்க முடியுமா.....

அருமை...

த.ம. +1

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

eranthuviduven un ninaivukalodu.It is true.

கார்த்திக் சரவணன் சொன்னது…

பிரிந்துவிடு என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பேன்? யோசிக்கிறேன்...

அம்பாளடியாள் சொன்னது…

அது தானே உண்மைக் காதலை மறப்பதெப்படி ?! அருமையான ¨
கவிதை வாழ்த்துக்கள் தோழி .

வளரும்கவிதை / valarumkavithai சொன்னது…

“தையல் சொல் கேளேல்” என்ற
தையல் அவ்வையின்
இந்தச் சொல்லை மட்டும்
நாம் கேட்க வேண்டியதிலலை
என்பது போல...
இறந்துவிடு என்றாலும்
மறந்துவிடு என்றாலும்
ஒன்றுதான்-
கேட்க வேண்டியதில்லை.

Unknown சொன்னது…

#மறந்து விடு
என்று சொன்னாய்#
இதை கேட்டபிறகும் உயிரோடு இருக்கலாமா ?
த ம 8

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

உண்மை தான் தோழி.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஸ்ரீராம் அவர்களே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புவனி பாலன்.

அருணா செல்வம் சொன்னது…

என்ன சொல்லி இருப்பீர்கள்....?
யோசித்துச் சொல்லுங்கள் ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ஐயா.

எவ்வளவோ நல்ல நல்ல கருத்தக்களைச் சொன்ன ஔவை இந்த வாக்கியத்தையும் சொல்லி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
எனக்கென்னமோ “தையல் சொல் கேளேல்“ என்பதை அவர்கள் “தையல் சொல் கேளீர்“ என்றோ “தையல் சொல் கேளாய்“ என்றோ தான் சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவரும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு “பெண்களின் பேச்சைக் கேட்காதீர்கள்“ என்று சொல்லி இருந்தால் அவரின் எந்தப் பாடலுக்கான நல்ல நல்ல பொருளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பது அவரும் உணர்ந்திருக்க மாட்டாரா...?

அதனால் ஔவையின் “தையல் சொல் கேளேல்“ என்று சொல்லப்பட்டு வரும் வாக்கியத்தில் எழுத்துப்பிழை உள்ளது என்பது என் கருத்து.

நன்றி கவிஞர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அந்த சொல்லை மறந்துவிட வேண்டியது தான் நல்ல காதலனுக்கு அழகு!

நன்றி பகவான் ஜி.

மாதேவி சொன்னது…

அருமை.

Yarlpavanan சொன்னது…

இலக்கிய நயத்துடன்
அமைதித் தீர்வா?
அதேவேளை
“தையல் சொல் கேளேல்” என்ற
ஓளைவைப் பேச்சின்
விளக்கமா?
இனிய கவிதையை
சுவைக்க முடிந்ததே!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.