பாப்லோ பிக்காசோ (Pablo Picasso/ 1881 – 1973) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியர்.
ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
உலகப் போரில் ஹிட்லர் செய்த
படுகொலைகளையும் அட்டூழியங்களையும் வெறியாட்டங்களையும் அப்படியே தத்ரூபமாக வரைந்து
ஓர் ஓவியக் கண்காட்சியில் வைத்தார் பாப்லோ பிக்காசோ.
அந்த ஓவியங்கள் மக்களால் பெரிய
அளவில் பேசப்பட்டன.
ஹிட்லருக்கு அந்த விஷயம் தெரிய
வந்தது. உடனே ஓவியக் கண்காட்சிக்குச் சென்று பார்த்தார். அவரது கண்கள் சிவந்தன.
குட்டி மீசை துடிக்க பற்களை நற...நறவென்று கடித்தார். பிக்காசோவை அழைத்து
வரச்செய்தார்.
“யோவ் ஓவியரே... என்ன தைரியம்
உனக்கு. இதெல்லாம் நீ செய்தது தானே?“ என்று ஓவியங்களைக் காட்டி கர்ஜனைக் குரலில்
கேட்டார் ஹிட்லர்.
அதற்கு பிக்காசோ, “இல்லை பிரபு!
இவையெல்லாம் நீங்கள் செய்தவைதாம். அனைத்தும் உங்கள் கைவண்ணம் தான்!“ என்றார்.
இதைக் கேட்டதும் ஹிட்லர் எதுவும்
பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
புத்திசாலித்தனமாக பேசுவசு
பதிலளிநீக்குசில சமயங்களில் உயிரையும் காக்கும்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஆத்மா.
படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது....
பதிலளிநீக்குநல்ல சாட்டையடி ஹிட்லருக்கு!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
நல்லவேளை தலை தப்பிச்சது...!
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மனோ சார்.
அப்புறம் என்னாச்சு!?
பதிலளிநீக்குகதை முடிந்து விட்டது.
நீக்குநன்றி தோழி.
//இவ்வோவியம் சிம்பாலிசம் என்ற வகைப்பட்டது. போருக்கு எதிரான கொள்கையை சித்தரிக்கிறது. உலகப்போரினால் குவர்னிகா மக்கள் பட்ட துன்பதை, போரின் கொடுமையை,அடக்குமுறையை சாடுகிறது.
பதிலளிநீக்குஸ்பெயின் தேசம் நாஜிக்களால்(ஜெர்மனி) விமான குண்டுதாக்குதலுக்குள்ள வரலாற்றை சொல்லுகிறது இவ் ஓவியம்.
பின்னாளில் ஒரு ஜெர்மன் அதிகாரி ”நீங்கள் தான் இதை வரைந்ததா? ”என கேட்டார். அதற்கு பிகாஸோ சொன்ன பதில் “இல்லை..இதை நீங்கள்தான் உருவாக்கினீர்கள்”.// விரிவான இந்த ஓவியத்தை பற்றிய விரிவான தகவல்களுக்கு...
http://eniyaoviya.blogspot.com/search/label/Picasso%20Paintings
ஹிட்லர் கேட்டார் என்பது பின்னாலில் சுவாரசியத்திற்காக தினிக்கப் பட்ட கதை என்று தோன்றுகிறது. நன்றி, அருணா.
வணக்கம் கலாகுமரன்.
நீக்குநான் படித்த இந்த சுவாரசிய விசயத்தை வலையில் பகிர்ந்தேன்.
இந்தக் கதைக்கான பிகாஸோவின் ஓவியத்தைத் தேடினேன். என் கண்ணோட்டத்தில் கிடைக்கவில்லை.
அதனால் பிகாஸோவின் இந்த புகழ் பெற்ற ஓவியத்தை எடுத்துப் பதிவுடன் வெளியிட்டேன்.
இந்த ஓவியத்திற்குள் இருக்கும் நான் அறியாத பல விசயங்களை எழுதியமைக்கு மிக்க நன்றி.
இரண்டாம் உலகப்போரின் போது நாஸிக்களால் பதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லப்படும் 1400 ஓவியங்கள் ஜெர்மனியில் வருவாய் துறை புலணாய்வின் போது பிடி பட்டு உள்ளன. இந்த ஓவியங்களில் பிகாஸோ ஓவியங்களும் இருக்கிறதாம். அது தவிர வெளி உலகில் அறியப்படாத ஓவியர்களின் ஓவியங்களும் இதில் இருப்பதாக நம்பப் படுகிறது இவற்றின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப் படவில்லை. இவற்றில் யூத ஓவியர்களின் ஓவியங்களும் அடக்கம்.
பதிலளிநீக்குஓ... அப்படியா...!
நீக்குநல்ல வேலை. பதுக்கி வைத்தாவது கலை பொக்கிஷங்களைக் காப்பாற்றுகிறார்கள்.
நம் நாட்டைப் போல் எதையும் எரித்துவிடவில்லை!!
தகவலுக்கு மிக்க நன்றி கலாகுமரன் அவர்களே.
வணக்கம்
பதிலளிநீக்குநல்ல சிந்தனை ஓட்டம் உள்ள கதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பதிலடி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மாதேவி தோழி.
வணக்கம்!
பதிலளிநீக்குஓவியக் காதை உலகின் வரலாறைக்
காவியமாய்க் கட்டும் கனன்று!
தமிழ்மணம் 3
வணக்கம் கவிஞர்
நீக்குநல்லவைகள் என்றும் நலமாகும்! நன்மைகள்
அல்லவைகள் போகும் அளைந்து!
தங்களின் வருகைக்கும் குறளுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.