வியாழன், 28 நவம்பர், 2013

பெரிய சொத்து!!


   “என்னங்க... நீங்க பேசாம வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க“ கண்களில் தளும்பி நின்ற கண்ணீரை மறைத்தபடி சொன்னாள் அபர்ணா.
   “என்ன அபர்ணா.... என்னாச்சி உனக்கு?“ சற்றுக் குழப்பத்துடன் கேட்டான் சேகர்.
   “ஆமாங்க. நமக்குக் கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆயிடுச்சி. இனிமேலும் எனக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கைப் போயிடுச்சி“ என்றாள் குரல் தழுதழுக்க.
   “அபர்ணா.... உனக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து உனக்குக் குழந்தையே உண்டாகி இருக்கவில்லை என்றால் இப்படி யோசிக்கலாம். ஆனால்... கல்யாணம் ஆன உடனே தரிச்சதை, வீட்டுல ரெண்டு தங்கைகள் கல்யாணத்திற்கு நிற்கிறார்கள் என்று அம்மா சொன்னதால கலைச்சே. இரண்டாவது என் தங்கையும் அதே நேரத்துல கர்ப்பமா இருந்ததால, இந்த நேரத்துல வேண்டாம்ன்னு என் அம்மா சொல்லுக்கே கலைச்சே. அந்த பாவமோ என்னவோ அதன் பிறகு உனக்குக் கருவே கூடலை. ப்ச்சி“ கவலையுடன் சொன்னான்.
   “அது என்னோட தப்பு தாங்க. மற்றவர்களுக்காக என் குழந்தையைக் கலைச்சேன். நான் அப்பவே அதற்கு ஒத்துக்காமல் இருந்திருந்தா... இப்படி பேசி இருக்கமாட்டேன்.“ வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.
   “கவலை படாதே அபர்ணா. இதுக்குக் காரணம் நீ மட்டும் இல்லை. நானும் அம்மாவும் தான் காரணம். அன்னைக்கு இருந்த சூழல் அப்படி. நானும் தான் வாய்பேசாமல் சம்மதித்தேன். அப்போது வேற வழி நமக்குத் தெரியலை. அதுக்காக இப்போ பழியை உன்மேல மட்டும் சுமத்த முடியாது. பொறு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்“ என்றான் ஆறுதலாக.
   “இன்னும் கொஞ்ச நாள் கழித்து இந்த முடிவை எடுக்கிறதைவிட இப்பொழுதே இதற்கு ஒரு முடிவு எடுக்கலாமே.“ என்று அவள் சொல்ல,
   “நான் எற்கனவே ஒரு முடிவு எடுத்திட்டேன் அபர்ணா“ என்றான்.
   “என்ன அது?“
   “ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்ன்னு தான்“
   “அது முடியாதுங்க“
   “ஏன்...?“
   “இந்த முடிவுக்கு உங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு நீங்க ஒரே ஆண்பிள்ளை. தன் பிள்ளையோட வாரிசு தான் அவங்களுக்குத் திருப்தியைத் தரும். அது மட்டுமில்லாம உங்களுக்குத் தான் எந்த குறையும் இல்லையே“ என்றாள் பெருமூச்சுடன்.
   “அதுக்காக... நா..“ அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து பேசி இந்த முடிவை எடுத்து என்னிடம் சொன்னால் எனக்கு அது தாங்க முடியாத கவலையைத் தரும். அதைவிட நானே ஒதுங்கிக் கொள்வது தான் நல்லது. இந்த முடிவை நானே உங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்புகிறேன்“ என்று எழுந்து போனாள்.
   அவன்,“சரி“ என்று சத்தமாகச் சொன்ன வார்த்தை ஈயத்தைக் காய்ச்சி காதில் விட்டது போல் வலித்தது.

   அபர்ணா மனங்கனக்க வீடு திரும்பியதும், சேகர் ஒரு காகிதத்தை நீட்டி கையெழுத்துக் கேட்டான். அபர்ணா புரியாமல் பார்த்தாள். “அபர்ணா... இது விவாகரத்து பேப்பர். நமக்கு விவாகரத்து ஆனால் தான் நான் வேற கல்யாணம் பண்ணிக்க முடியுமாம். கையெழுத்துப் போடு“ தாளை நீட்டினான்.
   அபர்ணா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
   “ம்... கையெழுத்துப் போடு. நீ தானே எப்போ பார்த்தாலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அழுத வடியிற. உன் திருப்திக்காகத்தான் இந்த ஏற்பாடு. அம்மா... ஏற்கனவே நல்ல இடத்துல பார்த்து ஏற்பாடு செஞ்சி வச்சிட்டாங்களாம். இப்போ நீ தான் சம்மதிக்கணும்.“ திரும்பவும் தாளை அவன் முன் நீட்டினான்.
   அபர்ணா... பதில் பேச முடியாது வேர்த்துப் போய் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
   “சேகர்... நீ சும்மா இரு. நான் அவளிடம் பேசிக்கிறேன்.“ அவனின் அம்மா அவன் கையிலிருந்தத் தாளை வாங்கிக் கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள். அபர்ணா மிரட்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
   “என்ன அபர்ணா பயந்துட்டியா...? கவலைப்படாதே. உனக்குக் குழந்தைப் பிறக்காததுக்கு நானும் ஒரு காரணம் தான். கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க வீட்டுல இருக்கும் பொழுது உன்னைத் திடிர்ன்னு கல்யாணம் பண்ணி அழைச்சிக்கினு வந்துட்டான். அந்த கோபம் எனக்கு அப்பொழுது அதிகமா இருந்தது. என்னோட கோபத்தை மாற்ற நான் சொன்னதுக் கெல்லாம் நீ சரின்னு சம்மதிச்சே. என் பெண்களைப் பற்றி நான் யோசிச்சேனே தவிர உன்னை பத்தி கவலைப்படலை. அதுவும் என்னோட தவறு தான். அதுக்கு பிரயசித்தம் தான் இது. இந்தா இந்தத் தாளுல கையெழுத்து போடு.“ தாளை நீட்டினாள்.
   அபர்ணா ஏதும் புரியாதவளாக அவளைப் பார்த்தாள். நெற்றியில் புத்த வியர்வை காதோரத்தில் வழிந்தது. அவளின் பயந்த முகத்தைக் கண்டவள், “அபர்ணா... இது சேகர் சொன்னது போல விவகாரத்து பத்திரம் கிடையாது. ஒரு குழந்தையைச் சட்டப்படி தத்து எடுக்கிறதுக்கான பத்திரம். பயப்படாமல் கையெழுத்து போடு“ என்றாள்.
   அதைக் கேட்டதும் நம்பாதவளாக அபர்ணா சட்டென்று அந்தத் தாளை வாங்கிப் படித்துப் பார்த்தாள். “மாமீ... இதுக்கு எப்படி நீங்க ஒத்துக்கினிங்க?“ அதிர்ச்சியுடன் கேட்டாள்.
   “ஏன்?“
   “தன் பிள்ளையோட வாரிசா இருக்கனும்ன்னு தானே எந்த அம்மாவும் விரும்புவாங்க.... நீங்க எப்படி...“
   “எல்லா அம்மாவும் அதைத் தான் விரும்புவாங்க. அவங்களுக்கெல்லாம் சொத்து பத்துன்னு வசதி இருக்கும். நாளைக்கு அதை ஆள ரத்த சொந்த வாரிசுக்கு ஆசைப்படுவாங்க. நமக்கு அந்த பிரட்சனையே இல்லையே. இப்போ இந்த குழந்தையை வளர்ப்போம். நாளைக்கு உன் வயத்துல ஒரு குழந்தை பொறந்தா அதை வளக்கலாம். நமக்கு அந்த மனசே பெரிய சொத்து அபர்ணா“ என்று சொல்லியபடி தாளை வாங்கி மகனிடம் கொடுத்தாள்.
   அதை வாங்கிக் கொண்டவன், “அபர்ணா... வா... நாம மூனு பேரும் போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம்“ என்று அழைக்க முழுமகிழ்ச்சியுடன் கிளம்பினாள் அபர்ணா.
    
அருணா செல்வம்
29.11.2013

   

29 கருத்துகள்:

  1. வணக்கம்
    தொடக்கமும் முடிவும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  3. நல்ல கதை, இந்த மாதிரி கருகலைப்பு செய்றது எவ்வளவு ஆப்த்துன்னும் சொல்லிட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  4. அந்த மனசே பெரிய சொத்து... அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. நல்ல தீர்வோட முடிச்சிட்டிங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி உஷா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி குமார்.

      நீக்கு
  7. புரிந்துணர்வோடு நடந்து கொண்ட மாமியாராலும் கணவராலும்
    கிடைக்கப் பெற்ற இன்பமும் அபர்ணாவிற்கு மற்றுமொரு பெரும்
    சொத்தே !! அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா மாமியாரும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்... ம்ம்ம்...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி தோழி.

      நீக்கு
  8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மி்க்க நன்றி மனோ சார்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  12. உணர்ச்சிக் குமுறலைக் கொட்டி அள்ளிய கதை.

    அருமை. பலருக்கும் பல கோணங்களில் படிப்பினையைத் தருகிறது.

    நல்ல கரு. கதையமைப்பும் அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி தோழி.

      நீக்கு

  13. வணக்கம்!

    தமிழ்மணம் 7

    ஆறுக்கு அடுத்துவரும் வாக்கை அளித்திட்டேன்
    ஊறும் உணா்வால் உடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞர்.

      உடனளித்த வாக்கே உயர்த்தியது! நானும்
      உடனளித்தேன் நன்றி உமக்கு!

      நீக்கு
  14. தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும்
    மி்க்க நன்றி நம்பள்கி.

    பதிலளிநீக்கு
  15. பெற்றால்தான் பிள்ளையா ? அருமை!!!

    பதிலளிநீக்கு