வியாழன், 21 நவம்பர், 2013

இனிமை தருபவள்!!



நெஞ்சினில் அமர்ந்த சின்னவளே! - என்
    நினைவினில் இன்பம் தந்தவளே!
பஞ்சினில் இலவம் போன்றவளே! - நல்
    பணிவினில் உயர்ந்து நின்றவளே!

கண்களில் காந்தம் கொண்டவளே! - வரும்
   கனவினில் என்னை உண்பவளே!
பெண்களில் தனியாய்த் தெரிபவளே! - தரும்
   பேச்சினில் இனிமை தருபவளே!

தன்னையே நினைக்க வைப்பவளே! - எனைத்
   தனிமையே விரும்பச் செய்பவளே!
என்னிலே முழுதாய் நிலைத்தவளே! - உனை
   எண்ணிடக் கவிகள் விளைந்திடுமே!

அருணா செல்வம்
21.11.2013

31 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிதையின் கற்பனை வரிகள் அருமை வாழ்த்துக்கள்
    த.ம-1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இப்படிபட்ட பெண்ணைதான் தேடிக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் பார்த்தால் எனக்கு தகவல் தெரிவிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் சொல்வது இருக்கட்டும்... கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னால பூரி கட்டேயோடு நிற்கறது... சத்யமா நம்புங்க உங்க வீட்ல போட்டு கொடுத்தது நான் இல்லே...!

      நீக்கு
    2. எங்கள் நாட்டில் வாழும் தமிழ்ப்பெண்கள் அனைவருமே இப்படித்தான் இருக்கிறார்கள் “உண்மைகள்“

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  4. அழகிய இசைப்பாடல். அருமை!

    உங்களுடன் கூடவே நானும் இசைத்து மகிழ்ந்தேன்!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.3

    புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டது இது..:)

    எண்ணிடும் கணத்தில் இன்சுவையே! - நீ
    எழுதிய இனியப் பாக்களிலே!
    கன்னியுன் கனவில் வந்தவளோ! - நல்ல
    களிப்பினை மிகவாய்த் தந்தனளோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய கவிதை பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. சிறியதாய் இருந்தாலும் கருத்தும் சந்தமும் சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி செல்லப்பா ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  8. சகோதரிக்கு வணக்கம்.
    அசத்தலான கவிதை. வரிகள் அனைத்தும் பசுமரத்தாணிப் போல் நெஞ்சில் பதிந்து கொண்டது. பெண் குழ்ந்தையை எண்ணி பிரசவித்த கவிதையா என்று கேட்க விருப்பம்! பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ இப்படி எல்லாம் பச்ச புள்ளையா இருக்க கூடாது. லேபிள்லயே காதல் கவிதை- ன்னு சொல்லியிருக்காங்க.. வீட்ல அப்பா ரொம்ப ஸ்டீர்க்ட்டா?

      நீக்கு
    2. உஷா... பாவம் பாண்டியன் தம்பியை விட்டுவிடுங்கள்.

      நீக்கு
    3. பாண்டியன் அவர்களுக்கு...

      பெண் குழந்தையை நினைத்துக் கவிதையை நான் பிரசவித்தால்... அதில் இவ்வளவு இனிமை இருக்காது என்றே நினைக்கிறேன். அதில் துன்பத்தின் சாயல் தான் அதிகம் இரக்கும் என்று நினைக்கிறேன்.

      இருப்பினும் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஒரு கவிதையை வடிக்க முயற்சிக்கிறேன்.

      நன்றி பாண்டியன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  10. "தமிழ் தொட்ட பெண்" இவள்தானோ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடார் வைத்திருந்தால்... தமிழில் பாடமாட்டாள் என்று நினைத்து விட்டீர்களா...?

      முடிந்தால் அவளின் முன்பு போய்ப் பாருங்கள்.....

      நன்றி ஆவி.

      நீக்கு
  11. நெஞ்சினிலே அமர்ந்து நினைவினில் இன்பம் தருபவளே அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவி நாகா ஐயா.

      நீக்கு
  12. இந்த கவிதையை யார் எழுதினதுன்னு புரிஞ்சிடுச்சி... ம்..ம்.. உங்களுக்கு நிச்சயமானவுடனே உங்க ஆத்துக்கார் எழுதினதுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருங்க உஷா.... அவரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன்.

      (தலையை ஆட்டினார். அது ஆமாம் என்பதா இல்லை என்பதா என்று எனக்கு அர்த்தம் புரியவில்லை)

      தவிர..

      கற்பனைக்குக் கால்கள் கிடையாது.. ஆனால்
      பெரிய சிறகுகள் உண்டு.
      அதை வைத்து உயர உயர பறக்கும் பொழுது
      கீழே உயரமானவையும் பள்ளமானவையும்
      ஒரே சமமாகத் தான் தெரியும்.
      தவிர, மனிதர்கள் தெரிவார்கள். ஆனால்
      ஆண் பெண் என்ற பாகுபாடு தெரியாது.

      இந்த நேரத்தில் நம் மனக்கண்ணுக்கு முன் என்ன தெரிகிறதோ அதை அந்தக் கோணத்தில் கை எழுதிவிடுகிறது.

      என் கற்பனைச் சிறகு பாலைவனப் பக்கம் போகாமல்
      நந்தவனங்களின் பக்கமாகவே பறக்கிறது.

      இப்பொழுது எண்ணத்தில் தோன்றுவதை
      எழுத்தில் உதிர்த்து விடுகிறேன்.

      வருகைக்கும் கெள்விக்கும்
      மிக்க நன்றி உஷா.

      நீக்கு
  13. தமிழில் எழுதுபவர்கள் குறைந்துவரும் இந்நாளில் தமிழின் இனிமையைக் காதலில் கலந்து தந்திருக்கிறீர்கள்...அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு