செவ்வாய், 3 டிசம்பர், 2013

கோபமா என்னுடன்?காலை உறக்கம் கலைந்ததுமே
    கண்முன் வந்து நிற்கின்றாய்!
வேலை கிளம்பும் அவசரத்தில்
    விழுங்கு வதுபோல் பார்க்கின்றாய்!
சோலை வழியே செல்லுகையில்
    சூழும் மணத்தில் மயக்குகிறாய்!
நூலை எடுத்துப் புரட்டுகையில்
    நுவலும் பொருளில் தெரிகின்றாய்!

என்னில் உள்ளே இருந்தாலும்
    எதிரில் காண ஓடிவந்தால்
“என்னை ஏனோ மறந்துவிட்டாய்!“
    என்றே கோபம் கொள்கின்றாய்!
உன்போல் எல்லாக் காதலரும்
    ஊடல் கொள்வார்! படித்ததுண்டு!
என்மேல் கோபம் கொள்கின்ற
    என்தன் உயிரே என்செய்வேன்?!  
     
எந்த நிலையில் உனைமறந்தேன்
    என்று தேடிப் பார்க்கிறேன்!
அந்த நிலையை நான்அறிந்தால்
    அந்தக் கனத்தைப் பொய்யென்பேன்!
சொந்தம் கொண்ட சொல்லமுதே
    சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
    இருக்கும் நேரம் அதுவென்பேன்!

மறத்தல் என்பது மனிதருக்கு
    மகேசன் கொடுத்த வரமென்பார்!
சிறந்த வாழ்வு செழிப்பதற்கு
    சீராய் வந்த உன்னுருவை
மறந்து விடும்நாள் வந்ததென்றால்
    மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
    இனிமை அதுவே தருமென்பேன்!
      
அருணா செல்வம்.
04.12.2013


இந்த அறுசீர் விருத்தத்தை ஆணுக்காக பெண் பாடியதாகவோ, அல்லது பெண்ணுக்காக ஆண் பாடியதாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.

37 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மறந்து விடும்நாள் வந்ததென்றால்
மாறும் இந்த உலகத்தில்
இறந்து போதல் உயர்வென்பேன்!
இனிமை அதுவே தருமென்பேன்!

அருமை அருமை
மிகவும் ரசித்துப் படித்து மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

இராஜ முகுந்தன் சொன்னது…

ஆஹா... ரசம் சொட்டுது...

Unknown சொன்னது…

சொந்தம் கொண்ட சொல்லமுதே
சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
இருக்கும் நேரம் அதுவென்பேன்!


உண்மை அன்பின் வெளிப்பாடே- இங்கே
உரைத்தீர் அருணா சிறப்போடே!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// சொர்க்கம் எங்கே எனக்கேட்டால்
இந்த நிமிடம் உன்னருகில்
இருக்கும் நேரம் அதுவென்பேன்...! ///

ஆகா...!

வாழ்த்துக்கள்...

ஆத்மா சொன்னது…

அழகு .......

ராஜி சொன்னது…

உள்ளத்து அன்பை அழகாய் சொல்லிச் சென்றது

கும்மாச்சி சொன்னது…

அறுசீர் விருத்தத்தில் பின்னுகிறீர்கள். நல்ல கவிதை. பகிர்விற்கு நன்றி அருணா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கவிதை...

த.ம. 7

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமை! காதல் கனி ரசம்!!!!! வாழ்த்துக்கள்!! த.ம. 1 போட்டாச்சு!!

மாதேவி சொன்னது…

அழகு.

அம்பாளடியாள் சொன்னது…

காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் மேல் என்று
உணரவைத்த வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி
அருணா .

பெயரில்லா சொன்னது…

நீங்களெல்லாம் இருக்கும்வரை தமிழ் நிச்சயம் அழியாது...அருமை

கார்த்திக் சரவணன் சொன்னது…

சொர்க்கம் எதுவெனக் கேட்டால்
http://arouna-selvame.blogspot.com/
என்பேன்....

நிறைவான கவிதை....

இளமதி சொன்னது…

உண்மைக் காதலை உள்ளூறும் உன்னத அன்பின் வெளிப்பாடான அழகு கவிதை தோழி!

கவிதை முழுவதுமே மனதை வருடிச் சென்றது. மிக மிக அருமை!

வாழ்த்துக்கள் தோழி!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி சிட்டு.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நாங்கள் இல்லையென்றாலும் தமிழ் நிச்சயம்
வாழும் ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஓ.... அப்படியா....!!!! சூப்பர்!

என்னமா போட்டுத் தாக்கிட்டீங்க... எனக்குத் தலைக்கு மெல் ஏதோ சுழலுவது போல் உள்ளது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

Unknown சொன்னது…

கவிதை - அழகு, அருமை

Avargal Unmaigal சொன்னது…


பழங்களை போட்டு சுவையான ஜுஸ் தருவார்கள் என்றால் நீங்கள் இதயங்களை போட்டு சுவையான கவிதையை தந்து இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

Avargal Unmaigal சொன்னது…


தமிழக அரசு உங்கள் எழுத்துகளை புத்தகமாக போட்டத்ற்கு ட்ரீட் கேட்டு இருந்தேன் இன்னும் வந்து சேரவில்லை பரவாயில்லை. இந்த காதல் ரசம் சொட்டும் இந்த கவிதையை படித்த பின் உங்களை பாராடி ட்ரீட் தரணும் என நான் நினைத்தேன். இறுதியில் யானைக்கு பானைக்கும் சரியாய் போச்சு

Unknown சொன்னது…

காதலன் காதலி பாடுவதைபோல் அமைந்த 2 இன்1 கவிதையை ரசித்தேன் !
த. ம 12

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரசிக்க வைத்த கவிதை...
வாழ்த்துக்கள்.

நம்பள்கி சொன்னது…

+1
அருமை!
இந்த கவிதையும் கொஞ்சம் சுட்டு பட்டி பார்த்து டின்கரிங் பண்ணலாம் போல இருக்கே!