வெள்ளி, 8 நவம்பர், 2013

இரண்டாம் தாரம்!! (நிகழ்வு)


   ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பழைய புத்தகக் கடைக்குச் சென்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
   அப்பொழுது ஒரு புத்தகத்தைப் பார்த்துச் சற்றே திடுக்கிட்டார்.
   அந்தப் புத்தகம் அவர் எழுதிய புத்தகம் தான்!
   அதை ஒரு நண்பருக்குத் தனது கையெழுத்திட்டு அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகத்தை அவர் பழைய புத்தகக் கடையில் போட்டு விட்டார்.
   “என்ன அக்கிரமம்? எனக்கும் மரியாதை இல்லை. நான் அனுப்பிய இந்தப் புத்தகத்துக்கும் மரியாதை இல்லை. இது மிகவும் மோசமான பழக்கம் அல்லவா? இதை இப்படியே விடக் கூடாது“ என்று எண்ணிய பெர்னார்ட் ஷா அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினார்.
   முன்பு “அன்பளிப்பு“ என்று எழுதி இருந்ததற்கு கீழே “மறுபடியும் என்னுடைய அன்பளிப்பு“ என்று எழுதி அந்த நண்பருக்கே இரண்டாந்தாரமாக அனுப்பி வைத்தார்.
   புத்தகத்தைப் பெற்ற நண்பர் வெட்கப்பட்டார். அன்றே தனது வீட்டில் புத்தகங்களைப் பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.


(தலைப்புக்கும் கதைக்கும் “சம்மந்தம்“ இருக்கிறது தானே!?)

11 கருத்துகள்:


  1. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    அருணாவா? கொக்கா? அசத்தும் தலைப்பு!
    பெருநாப் புலமையின் பேறு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  2. இதிலிருந்து என்ன நீதி என்றால்...மனைவியை துரத்திவிட்டு விட்டாலும், மறுபடியும் அதே முதல் தாரம் இரண்டாந்தாரமாக வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதானே!
    தலைப்புக்கும் கதைக்கும் “சம்மந்தம்“ இருக்கிறது!

    பின்குறிப்பு: மேலே சொன்னதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொள்ளவும்; நான் ஆண்களைப் பற்றியம் பயங்கர ஜோக் எல்லாம் சொல்வேன்!

    பதிலளிநீக்கு
  3. தரம். தாரம் என்பதையெல்லாம் இப்படி 'தாராம்' என்று போட்டுவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ.....

      கவனிக்கவில்லை. இப்பொழுது மாற்றிவிட்டேன் அம்மா.
      சுட்டிக்காட்டிமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. படமும் சரி, படித்ததும் சரி அசத்தல்!

    பதிலளிநீக்கு
  5. tha ma 6 நல்ல பழக்கத்தை சொல்லியிருக்கிறார்.இன்று புத்தகங்களுக்கு கிடக்கும் மரியாதை இப்படியும் இருக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  6. இது முதல் தரமான பதிவு என்பதில் சந்தேகமே இல்லை

    பதிலளிநீக்கு
  7. படித்ததில் பிடித்தது - அருமை - பதிவிற்கான படம் - மிக மிக அருமை!

    பதிலளிநீக்கு