ஒருவர் ஒரு துறையில் வல்லுநராக இருந்தால் அவருக்கு அந்தத் துறையைச் சார்ந்த
இடங்களில் பங்களிப்புத் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்.
நான் படித்துச் சிரித்தேன். நீங்களும் படித்துச் சிரியுங்கள்
ஒரு சமயம் ஒரு கால்பந்தாட்ட சங்கம்
தாங்கள் நடத்தும் ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்குத் தலைமை தாங்க ஜெய்ப்பூர்
மகாராஜாவை அழைத்தனர்.
மகாராஜாவிற்குக் கால்பந்தாட்டம்
பற்றி எதுவுமே தெரியாது. கால்பந்தாட்டத்தை அவர் ஒருமுறை கூடப் பார்த்ததும் இல்லை.
இருந்தாலும் அழைப்பு
விடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, குறிப்பிட்ட நாளில் கால்பந்தாட்டப்
போட்டிக்குத் தலைமை தாங்கச் சென்றார்.
போட்டி துவங்கியது.
இரு அணிகள் மோதின.
பந்து இங்கும் அங்கும் பறந்தது.
வீரர்கள் மைதானத்தில் அங்கும்
இங்கும் ஓடினர்.
விளையாட்டைப் பார்த்துக்
கொண்டிருந்த மகாராஜாவிற்கு ஒரே எரிச்சல். ”சட்”டென்று எழுந்து அரண்மனைக்குக் கிளம்பிவிட்டார்.
மறுநாள்,
அந்தக் கால்பந்தாட்ட கிளப்புக்கு 51 கால்பந்துகளை அனுப்பி வைத்தார் மகாராஜா. கூடவே
ஒரு கடிதமும் இருந்தது.
கிளப்
தலைவர் கடிதத்தைப் படித்தார்.
அதில்...
”சங்க நிர்வாகி
அவர்களுக்கு மகாராஜா எழுதிக்கொள்வது.
நேற்று
நடந்த விளையாட்டில் பல வீர்ர்கள் ஒரு பந்துக்காக முட்டி மோதி சண்டை போட்டுக்
கொண்டதைப் பார்த்தேன். கேவலம் ஒரு பந்துக்காக அவ்வளவு சண்டையா? அதனால்தான் 51
பந்துகளை அனுப்பியிருக்கிறேன். ஆளுக்கு ஒரு பந்தாகக் கொடுத்துச் சண்டைகிண்டை
போடாமல் சந்தோஷமாக விளையாடச் சொல்லுங்கள்.
இப்படிக்கு மகாராஜா“
என்று
எழுதி இருந்தது. இதைப்படித்த கிளப் தலைவருக்கு அழுவதா சிரிப்பதா என்று
தெரியவில்லை.
இதைப்படித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?
படித்ததில் சிரித்தது.
அருணா செல்வம்.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
மகாராஜாவை பொறுத்த அளவில் சண்டை நடக்காமல் இருந்தால் போதும்,ஒரு பந்துக்காக என்பதே அவரது எண்ணமாய்த்தெரிகிறது.
பதிலளிநீக்குஉண்மை தான்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.
:))))))))))))))))
பதிலளிநீக்குரசிப்பிற்கு நன்றி.
நீக்குஎவ்வளவு ஈஸியான கமெண்ட்....!!!
எத்தனை சமாதான் விரும்பி மகாராஜா
பதிலளிநீக்குபகிர்வை மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
அவர் போருக்கெல்லாம் போய் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
tha.ma
பதிலளிநீக்குஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஇன்ன செயலுக்கு இன்னாரை தேர்ந்தெடுத்தல் அவசியம்...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மகி அண்ணா.
இந்த பதிவை படித்ததும் நான் அழுது கொண்டே சிரித்தேன்... எதுக்கு அழுதீங்க என்று கேட்காதீங்க நான் ரொம்ப சிரிக்கும் போது எனது கண்ணில் இருந்து தண்ணி வந்துடுமுங்க ( சரக்கு அல்ல) 5
பதிலளிநீக்குஅதுக்குப் பெயர் ஆனந்த கண்ணீர்!!
நீக்கு(கண்ணிலிருந்து சரக்கு வெளியில் வரும் அளவிற்கு சாப்பிடும் ஆளா நீங்கள்..? பேஷ் பேஷ்...)
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“.
ஹா... ஹா...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் அண்ணா.
நீக்குக்ளப் தலைவர்கள் தலையில் அடிச்சிக்கிட்டு சிரிக்க வேண்டியதுதான்...
பதிலளிநீக்குவேற என்ன செய்ய முடியும்...?
நீக்குநன்றி உஷா.
நல்ல மகராஜா!
பதிலளிநீக்குஉண்மையிலும் உண்மைங்க சுரேஷ்.
நீக்குநன்றி.
மகாராஜாவிற்கு கணக்கும் தெரியவில்லை! கால் பந்தாட்ட்டத்தில் மொத்தம் 22 பேர் . ஒரு டீமுக்கு 11 பேர்! அதான் 51 பந்துகளை அனுப்பினார்.
பதிலளிநீக்குத.ம.+
4 டீமுக்கும் ரெபெரிக்கும் சேர்த்து அனுப்பியிருப்பாரு.
நீக்குநம்பள்கி.... ஜெயம் அவர்களின் பதிலைத்தான் எழுத நினைத்தேன்.
நீக்குநன்றி நம்பள்கி.
நன்றி ஜெயம் ஐயா.
நீக்குரசித்தேன்.....
பதிலளிநீக்குத.ம. 9
நன்றி நாகராஜ் ஜி.
நீக்குநம்ம புலிகேசி மாதிரி மகாராஜா போல..க.க..க.போ...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.
(க. க. க.போ... என்றால் என்ன?)