வெள்ளி, 22 நவம்பர், 2013

அணுகுண்டு ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி!!


(படித்ததில் சிந்திக்க வைத்தது)

    உலகில் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
   அதன் உருவாக்கப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர் (Dr. Robert Oppenheimer) அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்னால் அணுகுண்டு பற்றிய விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
   அவர் கூறியதை அங்கு கூடியிருந்த அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
   அப்பொழுது ஒருவர் எழுந்து, “இவ்வளவு ஆபத்தான அணுகுண்டிலிருந்து தப்பிக்க ஏதேனும் பாதுகாப்புக் கருவி இருக்கிறாதா?“ என்று கேட்டார்.
   “இருக்கிறது“ என்றார் டாக்டர் ராபர்ட்.
   “என்ன அது?“
   “அது தான் சமாதானம்!“ என்று கூறிவிட்டு புன்னகைத்தாராம் டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர்.


32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உண்மை தான்.
      ஆனாலும் கொஞ்சம் இடிக்கிறது பாருங்கள்.

      தான் ஒரு மிகப்பெரிய அபாயத்தை அருகில் வைத்தக்கொண்டு மக்களைச் சமாதானத்துடன் இருக்கச் சொல்வது.... அவர்களை பயமுறுத்தி பணிய வைப்பதற்கே சமமாகும்.

      நன்றி காயத்ரி.

      நீக்கு
  3. வணக்கம்
    “இருக்கிறது“ என்றார் டாக்டர் ராபர்ட்.என்ன அது?“

    சமாதானம்...

    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்படன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. சரியான , தெளிவான பதில்! இதனை உலகம் உணருமா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  5. ஆப்பன்ஹீமரின் ஹ்யூமர் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சூப்பர் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  7. சமாதானம்! அதைத்தான் காணாமல் பலபேர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. ஆப்பன்ஹீமர் ( அணுகுண்டு தயாரித்தவர்) அணுகுண்டு தயாரிக்காமலேயே இருக்கலாம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் உத்தமம் ஐயா.

      ஆபத்தானது என்று தெரிந்தும் அதைக் கண்டுபிடித்து விட்டு...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. அணுகுண்டை தயாரிச்சு மிகப்பெரிய தப்பு பண்ணிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. யாரோ ஒருவரின் சுயநலத்திற்காகத்தானே எல்லா இழப்புகளும் நடக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இழப்புகளின் காரணமே... யாரோ ஒருவரின் சுயநலம் தான். சரியாகச் சொன்னீர்கள்.

      கருத்துக்கு நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  11. உலக நாடுகள் பூராவும் சமாதானம் கிட்டிவிட்டால்
    அணுகுண்டுகளுக்கு தான் என்ன வேலை :)எல்லோரது
    வீட்டிலும் நாட்டிலும் சமாதானம் கிட்ட வேண்டும் தோழி .
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணுகுண்டு இருப்பதால் தான் ஓரளவுக்கு மக்கள்
      சமாதானமாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. சமாதானம்//

    உலகத்திற்கு முக்கியமான ஒரு விசாலமான பாதை....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... அருமையாக சொன்னீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மனோ சார்.

      நீக்கு
  13. அருமை! இந்தத் தானத்தை கொடுக்க மனம் வரவேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன காசா? பணமா..,?

      மனமிருந்தால் மார்க்கமுண்டு!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. அது தான் சமாதானம்....

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு