நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
இனமாய் நம்மை எண்ணிடுவார்!
மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
தாவிக் குதித்தே ஓடிவிடும்!!
அருணா செல்வம்.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையான கவிதை தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
ம்ஹூம்... கேக்கிறதுக்கு யாருக்கு துணிவு இருக்கு? த.ம.2
பதிலளிநீக்குஇப்படியாவது சொல்லி மனத்தைத் தேற்றிக் கொள்ளலாமேன்னு தான்....
நீக்குநன்றி ஸ்கூல் பையன்.
நிலையற்ற ஒன்றை நிலையானதாக நினைக்கும் மனித பலவீனம்!
பதிலளிநீக்குஎன்ன செய்ய முடியும்?
நீக்கு“நம்பிக்கை“ என்ற ஒன்றை வைத்துப் பலவீனத்தை மூடிவிடுகிறோம் அல்லவா?
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீங்கள் எழுதிய கவிதையை இந்த கால தமிழில் விளக்கம் சொல்லி விட்டு பரிசை வாங்கி செல்லுங்கள் கவிஞரே... tha.ma 4
பதிலளிநீக்குஎந்தக் காலம் என்றால் என்ன?
நீக்குஇந்தக் கவிதையை எழுதி கிட்டத்தட்ட நான்கு வருடம் ஆகிவிட்டது. இதே கவிதையை நான் ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
இன்று அதை மாற்றிச் சொல்ல மாறுபாடு எதுவும் நடக்கவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“
அருமை... உண்மை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
ஒற்றுமை இன்றித்தான் உருக்குலைகிறோம் நாமிங்கே...
பதிலளிநீக்குஉணர்த்திய உண்மை அருமை!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.6
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே..
பதிலளிநீக்குநம் நாட்டில் மக்களாட்சி தானே நடக்கிறது...?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.
ம்ம்ம்ம் உண்மை தான்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காயத்ரி.
சகோதரிக்கு வணக்கம்
பதிலளிநீக்குஅற்புதமான ஒற்றுமையை வழியுறுத்தும் வரிகள். அழகான நயத்தோடு உ(ரை)ரக்க தந்தமை சிறப்பு சகோதரி. பகிர்வுக்கு நன்றிகள்..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சகோ.
நல்ல கவிதை....
பதிலளிநீக்குத.ம. 8
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
கவிதை அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
\\ உலைபோல் கொதித்த மனத்துடனே
பதிலளிநீக்குஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
தாவிக் குதித்தே ஓடிவிடும்!!//
அந்த நாளும் வந்திடாதோ
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
"உலைபோல் கொதித்த மனத்துடனே
பதிலளிநீக்குஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
தாவிக் குதித்தே ஓடிவிடும்!!" என்ற
அடிகளை அடியேன் விரும்புகின்றேன்!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.