புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டுக் கவிதை!


  
நாளை நாளை என்றெண்ணி
    நாளை நாமும் ஓட்டிவிட்டோம்!
வேலை வேலை என்றோடி
    வேலை இன்றித் தவித்துவிட்டோம்!
மாலை தந்து மணந்தவரை
    மாலை வந்தும் மறந்துவிட்டோம்!
நாளை காலை இதைமாற்றி
   நாளும் நமதாய் ஆக்கிடுவோம்! 

நட்புறவுகள் அனைவருக்கும் 
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 


மலைப்புடன் நினைத்த வாழ்க்கை
    மகிழ்ச்சியாய் நிலைக்க வேண்டும்!
அலைகடல் உப்பாய் இன்பம்
    அனைத்திலும் இருக்க வேண்டும்!
நிலைத்திடும் கல்வி பெற்று
    நேர்மையாய் வாழ வேண்டும்!
கலைத்திறன் மிளிரும் ஆண்டாய்க்
    கவிதையாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்

31.12.2014

43 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Avargal Unmaigal சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

மலைப்புடன் நினைத்த வாழக்கை மகிழ்ச்சியாய் இருக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள் புத்தாண்டு(2015) சிறக்க/

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

yathavan64@gmail.com சொன்னது…

"அன்பும் பண்பும் அழகுற இணந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!
வலைப் பூ சகோதரி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்த ஆண்டு தங்களுக்கு கலைத்திறன் மிக்க ஆண்டாய் வந்து தாங்கள் நிறைய கவிதை புனைய வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும் நட்புடனும்

துளசிதரன், கீதா

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !இறைவன்
அருளால் இல்லம் தோறும் மகிழ்வு பொங்கட்டும் .இனிக்கும்
புத்தாண்டில் எண்ணிய தெல்லாம் எளிதில் கிட்டட்டும் .தங்கள்
உறவினர்கள் அனைவருக்கும் மகிழ்வான ஆண்டாக இவ் ஆண்டு
மலரட்டும் .வாழ்த்துக்கள் .

Ranjani Narayanan சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

புத்தாண்டுக்கவிதை அருமை சகோ...
இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

மகிழ்நிறை சொன்னது…

நல்ல வேண்டுதல் தோழி!! எல்லாம் நிறைவேறட்டும்:) தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

இளமதி சொன்னது…

அருமையான விருத்தம்!..

சிறப்போடு யாவும் சீராய் அமையட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//வேலை வேலை என்றோடி
வேலை இன்றித் தவித்துவிட்டோம்!//
பொருள் புரியலையே
//மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும் மறந்துவிட்டோம்!//
அவ்வளவோ மோசமாவா போயிடிச்சி

வந்தும்? வந்ததும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

கவிதையில் லையை ரொம்பவே லைக் பண்ணி இருக்கிறீர்கள் போலிருக்கிறது. அனைத்து வரிகளிலும் லை – அருமை.

சகோதரி அருணா செல்வம் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

2014 ஆம் ஆண்டினில், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANK எண். 7 – வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

saamaaniyan சொன்னது…

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

வாழ்த்துக்கு மிக்க நன்றி விமலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி சகோ.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அருமையான வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் முரளிதரன் ஐயா.

/வேலை வேலை என்றோடி
வேலை இன்றித் தவித்துவிட்டோம்!//

வேலை.... தொழில் , பொழுது (காலம்)

//மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும் மறந்துவிட்டோம்!//

மாலை வந்தும் தான். இருபாலருக்கும் சொன்னது இது.

(வேலை முடித்து வந்ததும் ஹிட் வாங்கனும்ன்னு பொழுதெல்லாம் கணிணி முன்னால் அமர்ந்து விட்டால்.... மாலை தந்து மணந்தவரை (ளை) மாலை வந்தும் மறந்து தானே போகிறது..... ஹி ஹி ஹி...)

வாழ்த்துக்கு மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அழகிய புத்தாண்டு கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

அட ஆமாம்..... நான், நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.

7 வது ரேங்க்.....!!!!!!!
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சாமானியன் ஐயா.