வெள்ளி, 8 நவம்பர், 2013

கருணை!!



இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
   இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
   மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
   கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
   நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
   எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
   உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
   பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தின் மறைந்திருக்கும் மழையைப் போல
   காலமுடன் உதவுகின்ற எண்ணம் ஓங்கும்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
   அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
   பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
   உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
   கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!
  
அருணா செல்வம்
08.11.2013

(இந்தப் பாடல்
காய் – காய் – மா – தேமா
   காய் – காய் – மா – தேமா... என்ற இலக்கணத்தில் அமைந்த எண்சீர் விருத்தம்)

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி திகழ்.

      நீக்கு
  3. கருணையிலே கடவுளையும் காணலாம் என்ற உங்கள் பாடல் அருமை !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  5. கருணை வழிகிறது கவிதையில்....

    நல்லதொரு மரபுக்கவிதை ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சௌந்தர்.

      நீக்கு
  6. படமும் பாடலும் மனதை கொள்ளை கொண்டன. கருத்தும் கவிநயமும் அமைந்த விருத்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  7. சிறப்பான செய்யுள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  8. அந்தச்சிறுவனுக்கு மிகப்பெரிய ராயல் சல்யூட்/

    பதிலளிநீக்கு
  9. "கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
    கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!" என்ற
    அடிகளில் வழிகாட்டலல்ல - நல்ல
    கோட்பாடே (தத்துவமே) மின்னுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  11. கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!//

    மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைத் தான் ரசித்திருக்கிறீர்கள் மனோ சார்.

      நன்றி.

      நீக்கு
  12. கருணையே கடவுள் விளக்கம் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  13. "நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
    நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!"
    மிக அருமையான கேள்வி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  14. அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு